போலி ஆவணங்கள் மூலம் ரூ. 2 கோடி மதிப்புள்ள சொத்தை அபகரித்த நபர் கைது
போலி ஆவணங்கள் தயாரித்து , இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அபகரித்தவர் கைது.

3,410 சதுர அடி இடத்திற்கு - போலி பத்திரம்
சென்னை மாதவரம் எருக்கஞ்சேரி ஜி.என்.டி., சாலையைச் சேர்ந்தவர் சிவானந்தம். இவரது தாய் செல்வக்கனி அம்மாள் என்பவருக்கு சொந்தமாக அம்பத்தூர் , ஓரகடம் கிராமத்தில், 3,410 சதுர அடி இடம் உள்ளது. அந்த இடத்தில் , அம்பத்தூரைச் சேர்ந்த கணேசன் என்பவர் கல் , மண், சிமென்ட் உளிட்டவற்றை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். கணேசன் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட அவரது மகன் அசோக் குமார் ( வயது 40 ) அந்த கடையை நிர்வகித்து வந்துள்ளார்.
போலி பட்டா
அவரது மனைவி செல்வக்கனி, அசோக் குமாருக்கு உதவியாக இருந்துள்ளார். நிலத்தின் உரிமையாளரின் பெயரும் , தன் மனைவியின் பெயரும் ஒன்றாக இருப்பதால் அந்த இடத்தை அபகரிக்க அசோக்குமார் திட்டமிட்டுள்ளார். போலி ஆவணங்கள் வாயிலாக பட்டாவை தயார் செய்துள்ளார். தன் மனைவி செல்வக்கனியை வைத்து , மகள் நர்மதாவிற்கு அந்த இடத்தை கிரயம் செய்து கொடுத்துள்ளார். அந்த இடத்தை சையது காதர் அமீத் ஜமால் மற்றும் அவரது மனைவிக்கு பின். 1.60 கோடி ரூபாய்க்கு கிரயம் செய்து கொடுத்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த சிவானந்தம் , தன் தாய் செல்வக்கனி பெயரில் உள்ள. அசோக்குமார் இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தை, போலி ஆவணங்கள் வாயிலாக அபகரித்த அசோக்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆவடி மத்திய குற்றப் பிரிவில் புகார் அளித்திருந்தார். அதன்படி, ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து , அசோக்குமாரை கைது செய்து , நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தனியார் ஆம்னி பேருந்து தாமதம் - அதிர்ச்சியில் பயணிகள் போராட்டம்
சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்வதற்காக யுனிவர்செல் நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு பேருந்துகளில் 80 பயணியர் முன்பதிவு செய்திருந்தனர். இரவு 11:30 மணிக்கு கோயம்பேடிற்கு வரவேண்டிய இப்பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்திற்கு நிலையத்திற்கு வரவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் , நிறுவனத்திடம் முறையிட்ட போது , சில மணி நேரத்திற்கு பின் ஒரு பேருந்து மட்டும் வந்துள்ளது.
அதில் , போதிய இடம் இல்லாமல் பற்றாக்குறை ஏற்பட்டதால் , ஓட்டுநரிடம் பயணியர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பேருந்தில் இருந்த ஓட்டுநரும் உதவியாளரும் அங்கிருந்து தப்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆம்னி பேருந்து நிறுத்தத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவம் அறிந்து வந்த கோயம்பேடு போலீசார் பயணியருக்கு மாற்று வழியாக அரசு பேருந்தை ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தனர். பயணியரிடம் புகாரை பெற்ற போலீசார் தனியார் பேருந்தை காவல் நிலையத்திற்கு ஓட்டிச் சென்றனர்.




















