‛ஓசி’ நுங்கு தராததால் வியாபாரி மீது கொலை வெறித்தாக்குதல்

‛இயற்கையாக கிடைக்கும் நுங்கிற்கு எதற்கு காசு கேட்க வேண்டும்; அதனால் தான் வெட்டினேன்,’ என போலீசாரிடம் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார் வேலன்.

மதுரை வாடிப்பட்டி அருகே நுங்கு வியாபாரியிடம் ஒசியாக நுங்கு கேட்டு தகராறு வியாபாரிக்கு அரிவாள்வெட்டு வாலிபர் கைது

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள T. ஆண்டிபட்டியில் இந்திரா காலனி பகுதியை சேர்ந்த வீரபத்திரன் தனது குடும்பத்தினருடன் சாலையோரம் நுங்கு வியாபாரம் செய்து வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த வேலன் என்பவர், வீரபத்திரனிடம் வந்து ஓசியாக நுங்கு கேட்டுள்ளார். அதற்கு வீரபத்திரன் மறுக்க, அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார் வேலன். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ‛ஓசி’ நுங்கு தராததால் வியாபாரி மீது கொலை வெறித்தாக்குதல்

ஒரு கட்டத்தில் தகராறு முற்றிய நிலையில், நுங்கு வெட்ட பயன்படுத்திய அரிவாளால் பறித்த வேலன், வியாபாரி வீரபத்திரனை தலை, கழுத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சராமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளார்.

படுகாயமடைந்து ரத்தவெள்ளத்தில் கிடந்த வீரபத்திரனை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை 108 மூலம் வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாடிப்பட்டி போலீசார், தப்பியோடிய வேலனை தீவிர தேடினர். ஒரு இடத்தில் மறைந்திருந்த அவரை மடக்கி பிடித்த போலீசார், வாடிப்பட்டி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ‛ஓசி’ நுங்கு தராததால் வியாபாரி மீது கொலை வெறித்தாக்குதல்

‛இயற்கையாக கிடைக்கும் நுங்கிற்கு எதற்கு காசு கேட்க வேண்டும்; அதனால் தான் வெட்டினேன்,’ என போலீசாரிடம் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்தாராம் வேலன். தனது பகுதியில் விற்பனை செய்து விட்டு தனக்கு நுங்கு தராமல் தகராறு செய்ததால் இந்த முடிவுக்கு வந்ததாகவும், மற்றபடி வேறு எந்த முன்விரோதமும் வீரபத்திரனிடம் இல்லை என்றும் வேலன் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. ‛ஓசி’ நுங்கு தராததால் வியாபாரி மீது கொலை வெறித்தாக்குதல்

20 ரூபாய்க்கு விற்கும் நுங்கை பணம் கொடுத்து வாங்காமல், அதற்காக வியாபாரி மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tags: crime palm fruit

தொடர்புடைய செய்திகள்

சென்னை : நீலாங்கரையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு, விற்க முயன்ற 3 இளைஞர்கள் கைது!

சென்னை : நீலாங்கரையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு, விற்க முயன்ற 3 இளைஞர்கள் கைது!

ஆம்புலன்ஸ் மூலம் மது கடத்தல்; மூன்று பேர் கைது

ஆம்புலன்ஸ் மூலம் மது கடத்தல்; மூன்று பேர் கைது

பாலியல் தொல்லை: தந்தை மீது மகள் போலீசில் புகார்

பாலியல் தொல்லை: தந்தை மீது மகள் போலீசில் புகார்

போலி இந்திய குடியுரிமை: கனடா செல்ல மதுரையில் பதுங்கிய இலங்கையர் 23 பேர் கைது!

போலி இந்திய குடியுரிமை: கனடா செல்ல மதுரையில் பதுங்கிய இலங்கையர் 23 பேர் கைது!

ஒரிஜினல் ‛சிங்கம் -2 டேனி’ தூத்துக்குடியில் கைது; படத்தில் போன்று நிஜத்திலும் நடந்த சேஸிங்!

ஒரிஜினல் ‛சிங்கம் -2 டேனி’ தூத்துக்குடியில் கைது; படத்தில் போன்று நிஜத்திலும் நடந்த சேஸிங்!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News :தமிழ்நாட்டில் இன்று 15,108 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு

Tamil Nadu Coronavirus LIVE News :தமிழ்நாட்டில் இன்று 15,108 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு

புதிய வேலையில் களமிறங்கிய பிக்பாஸ் நிஷா : வைரலாகும் இன்ஸ்டா ஸ்டோரீஸ்..!

புதிய வேலையில் களமிறங்கிய பிக்பாஸ் நிஷா : வைரலாகும் இன்ஸ்டா ஸ்டோரீஸ்..!

கோவை : 2000-க்கு கீழ் குறைந்த கொரோனா தொற்று! துளிர்க்கும் நம்பிக்கையில் மக்கள்!

கோவை : 2000-க்கு கீழ் குறைந்த கொரோனா தொற்று! துளிர்க்கும் நம்பிக்கையில் மக்கள்!

Samsung M 32 | 6000mAh பேட்டரி திறன் கொண்ட புதிய ஸ்மார்ட் போன் ; அசத்தும் சாம்சங் நிறுவனம்

Samsung M 32 | 6000mAh பேட்டரி திறன் கொண்ட புதிய ஸ்மார்ட் போன் ; அசத்தும் சாம்சங் நிறுவனம்