மேலும் அறிய
Advertisement
அனுமதி இன்றி மின்வேலி அமைத்தால் கடும் நடவடிக்கை - மதுரை எஸ்.பி எச்சரிக்கை
’’மின்சார வேலி மீது மிதித்து அதில் கிருஷ்ணன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அதைப்பார்த்து தடுக்கச் சென்ற அவரது மனைவி அக்கம்மாள் படுகாயம்’’
மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அனுமதி இன்றி மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகளவு உயிர்பலி ஏற்பட்டு வருகிறது. தற்போது கள்ளக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட டி.வலையங்குளம் ஊராட்சி துணைத் தலைவர் கதிர்வேலின் வயலில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி விவசாயி கிருஷ்ணன் என்பவர் இறந்தார். இந்நிலையில் அனுமதி இன்றி மின்சார வேலிகளை வயல்வெளிகளில் அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” - என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் எச்சரித்துள்ளார்கள். மேலும் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்.
#Abpnadu
— Arunchinna (@iamarunchinna) December 16, 2021
விதிமுறைகளை பின்பற்றவும் வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் பாதுகாப்பின்றி மனித உயிருக்கும் விலங்குகளுக்கும் தீங்கிழைக்கும் வகையில் மின்சார வேலிகளை வயல்வெளிகளில் அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
”மதுரை மாவட்டத்தில் தற்சமயம் எவ்வித அனுமதியும் இன்றி தங்களது வயல்வெளிகளில் காட்டு விலங்குகளை தடுப்பதற்காக மின்சார வேலி களை அமைத்து வருகின்றனர். இதன் காரணமாக உயிர் சேதங்கள் ஏற்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் சமீப காலங்களில் காட்டு விலங்குகள் பன்றிகள் போன்றவற்றை விவசாய நிலங்களில் தடுப்பதற்காக சிலர் எவ்வித அரசு அனுமதி இன்றியும் உரிய வழிகாட்டுதல்கள் மற்றும் பாதுகாப்பு முறைகளை பின்பற்றாமல் தன்னிச்சையாக மின்சார வேலிகளை தங்கள் வயல்வெளிகளில் அமைத்து வருகின்றனர். அவ்வாறு உரிய பாதுகாப்பு முறைகளை பின்பற்றாமல் அமைத்து வரும் மின்சார வேலிகள் மீது அந்த பகுதியில் விவசாயம் செய்யக்கூடிய விவசாயிகள் தவறுதலாக மின்சார வேலையின் மீது மிதித்து விடுவதாலும் அல்லது தொட்டு விடுவதாலும் உயிருக்கு ஊறு விளைவிக்கும் விபத்துகள் நேர்கின்றது.
சமீபத்தில் சிந்துபட்டி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சாத்தங்குடி கிராமத்தில் முத்தையா மகன் கருப்பசாமி என்பவர் புல் அறுக்க சென்றவர் அங்கு போடப்பட்ட மின்சார வேலியின் மீது மிதித்ததில் சம்பவ இடத்திலேயே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். அதேபோல் இன்று கள்ளிக்குடி காவல் நிலைய சரகம் வலையங்குளம் கிராமத்தில் தண்டி தேவர் மகன் கிருஷ்ணன் என்பவரும் அவருடைய மனைவி அக்கம்மாள் என்பவரும் தங்களுடைய வயலில் பருத்தி எடுக்க சென்றபோது அவர்களது வயலுக்கு பக்கத்து வயலில் போடப்பட்ட மின்சார வேலி மீது மிதித்து அதில் கிருஷ்ணன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அதைப்பார்த்து தடுக்கச் சென்ற அவரது மனைவி அக்கம்மாள் படுகாயமடைந்துள்ளார்.
இதுபோன்று அரசு அனுமதி பெறாமலும் உரிய விதிமுறைகளை பின்பற்றவும் வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் பாதுகாப்பின்றி மனித உயிருக்கும் விலங்குகளுக்கும் தீங்கிழைக்கும் வகையில் மின்சார வேலிகளை வயல்வெளிகளில் அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் எச்சரித்துள்ளார்கள்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ஒருவர் கை பக்குவத்தில் ஊரே சமைக்கும் எண்ணெய் சுக்கா! இது தான் மதுரையோடு பக்கா!
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
உலகம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion