மேலும் அறிய
போதையில் தாயை அடித்த தந்தை, தடுக்க முயன்ற மகனால் நேர்ந்த விபரீதம்! சோகத்தில் குடும்பம்
மதுரையில் மதுபோதையில் தாயிடம் சண்டையிட்ட தந்தையை தடுத்த மகன்- கீழே கிடந்த கத்திரிகோல் மீது தவறிவிழுந்து படுகாயமடைந்து உயிரிழந்த தந்தை - குடிப்பழக்கத்தால் நிற்கதியாகி போன குடும்பம்.

மதுபோதையால் ஏற்பட்ட பிரச்னை - மாதிரிப்படம்
Source : whats app
மதுரயில் அதீத குடிப்பழக்கத்தால் தாயை அடித்த தந்தையை தடுக்க முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் தந்தை உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரையே மீளாத்துயருக்கு ஆளாக்கியுள்ளது.
மதுபோதைக்கு அடிமையாகிய கூலித்தொழிலாளி
மதுரை மாநகர் ஆனையூர் முத்துநகர் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான கண்ணன் என்பவர் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்துவந்தார். கண்ணனின் மனைவி தையல் மற்றும் பாசி மாலைகள் செய்வது போன்ற வேலைகளை செய்துவந்துள்ளார். மதுபோதைக்கு அடிமையாகிய கூலித்தொழிலாளியான கண்ணன் தினசரி மது அருந்திவிட்டு மனைவியிடம் சண்டையிடுவதும், அடிப்பதையுமே வழக்கமாக கொண்டுள்ளார்.
மது போதையில் வாக்குவாதம்
இதே போன்று நேற்று இரவு மது போதையில் வீட்டிற்கு வந்த கண்ணன், தனது மனைவியிடம் வாக்குவாதம் செய்து சண்டையிட்டபடி அடிக்க சென்றுள்ளார். அப்போது வீட்டிற்குள் இருந்த குழந்தைகள் முன்பாகவே தாய் மீது சண்டையிட்டபோது கண்ணனை அவரது மகன் தடுத்துள்ளார். அப்போது மகனையும் கண்ணன் அடிக்க வந்தபோது அருகே சேர் மீது மதுபோதையில் விழுந்துள்ளார். அப்போது அங்கிருந்த கூர்மையான கத்திரிக்கோல் கண்ணனின் வயிற்றிக்கு கீழ் குத்தி ஆழமான காயம் ஏற்பட்டுள்ளது.
தந்தை உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரையே மீளாத்துயருக்கு ஆளாக்கியுள்ளது
ஆனால் இது வெளியில் தெரியாத நிலையில் திடீரென வயிற்றில் இருந்து ரத்தம் வெளியேற தொடங்கியதால் கண்ணனின் மனைவி மற்றும் குழந்தைகள் பதற்றமடைந்தனர். இதையடுத்து ரத்த காயத்துடன் மயக்கமடைந்த கண்ணனை ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது செல்லும் வழியிலயே பரிதாபமாக கண்ணன் உயிரிழந்தார். அதீத குடிப்பழக்கத்தால் தாயை அடித்த தந்தையை தடுக்க முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் தந்தை உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரையே மீளாத்துயருக்கு ஆளாக்கியுள்ளது. இது குறித்து கூடல்புதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உடலை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















