மேலும் அறிய
Advertisement
மாணவிகளை கடத்தி ரூபாய் 1 கோடி கேட்டு கொலை மிரட்டல்; 2 பெண்கள் உள்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை
1.5 கோடி பணம் கேட்டு மாணவிகளை கடத்தி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் மதுரை தெப்பகுளம் பகுதியை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட மகிளா நீதிமன்றம் உத்தரவு
மதுரையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் கார்த்திகை செல்வம் என்பவரது இரண்டு மகள்களை கடந்த 2017 டிசம்பர் 16- ஆம் தேதியன்று பள்ளி முடிந்து வீட்டிற்கு ஓட்டுனர் பாண்டி என்பவர் அழைத்து வந்துள்ளார். அப்போது காவல்துறையினர் போல வேடமிட்ட ஒரு கும்பல் இடைமறித்து வாகனத்தின் ஆவணங்களை கேட்டு சரிபார்த்தனர். பின்னர் ஆவணங்களில் குழப்பம் இருப்பதாகவும் தங்களை பின் தொடரவேண்டும் என அழைத்து சென்று கருப்பாயூரணி அருகே ஓட்டுனர் பான்டியை தாக்கிவிட்டு அவருக்கு மயக்கமருந்தினை ஊசி மூலமாக செலுத்திவிட்டு இரண்டு மாணவிகளையும் மர்ம கும்பல் கடத்தி சென்றுவிட்டது.
இது தொடர்பாக ஓட்டுனர் அளித்த தகவலின் அடிப்படையில் சிறுமிகளின் பெற்றோர் தெப்பகுளம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். சினிமா பட பாணியில் கடத்தல்காரர்கள் சிறுமியர்களின் தந்தையிடம் பேசும் ஆடியோவை பதிவு செய்து அவர்களின் செல்போனின் தொடர்பு எண்ணை வைத்து அவர்களின் இருப்பிடங்களை பின் தொடர்ந்தனர்.
இந்நிலையில் கடத்தல் கும்பல் குழந்தைகளை ஒப்படைக்க ஒரு கோடி கேட்டுள்ளனர். பின்னர் நேரம் போக போக 50 லட்சம்ரூபாய் தருமாறு கேட்டு அதனை ஒரு இடத்தில் ஒப்படைக்குமாறும் கேட்டுள்ளனர். கடத்தல் கும்பலின் கோரிக்கையை ஏற்று 50 லட்சம் வழங்கப்பட்டது. பின்னர் குழந்தைகளை அவர்களது வீட்டின் அருகிலேயே நள்ளிரவில் இறக்கிசென்றுவிட்டனர். கடத்தல்காரர்களை நெருங்கிய போதிலும் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி கும்பலை கைது செய்ய இயலாமல் போனது. இது குறித்த புகாரின் பேரில் தெப்பகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து இதே பகுதியைச் சேர்ந்த ரவீந்திரனன், கண்ணன் மணிராஜூ, மணி கண்டன், வைரமுத்து, குணசேகரன், ராதாகிருஷ்ணன், கலாதேவி,, ஜீவிதா, சின்னதுரை ஆகிய 10 பேரை கைது செய்தனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - DRUNK AND DRIVE: வாகன ஓட்டிகள் இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது: மதுரையில் புதிய வகை ப்ரீத் அனலைசர் !
இது குறித்து மகிளா நீதிமன்றத்தில் வழக்கு தொடத்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் மதுரம், தீர்ப்பு வழங்கினார். இதில் குற்றம் சாட்டப்பட்ட 2 பெண்கள் உள்பட 10 பேரும் குற்றவாளிகள் என உறுதி அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். இதனையடுத்து 10 பேரும் மதுரை மத்திய சிறைக்கு அழைத்துசெல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion