கரூர்: குடிபோதையில் கிணற்றில் விழுந்தவர் உயிரிழந்த சோகம்
கரூர் மாவட்டத்தில் நடந்த பல்வேறு செய்திகளை காணலாம்

குடிபோதையில் கிணற்றில் விழுந்தவர் உயிரிழப்பு.
கடவூர் தாலுக்கா மத்தகிரி அடுத்த குள்ளரங்கம் பட்டியைச் சேர்ந்தவர் பவுல்ராஜ். இவரது வீட்டில் உறவினர் ஜெயராஜ் தங்கி இருந்து தச்சு வேலை பார்த்து வந்தார். குடிபோதையில் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் பின்னர் வராததால் குடும்பத்தினர் தேடிச் சென்றனர். அருகே உள்ள விவசாய கிணற்றில் பிணமாக ஜெயராஜ் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து சிந்தாமணிபட்டி எஸ்ஐ கனகராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

முதியவர் தற்கொலை.
கா. பரமத்தி அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கரூர் மாவட்டம் சோளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பண்ணன். இவருக்கு குடிப்பழக்கத்தால் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலி இருந்தது. அதனால் கருப்பண்ணன் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கருப்பனின் மனைவி சரசாயி கொடுத்த புகாரின் பேரில் கா. பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மரத்தடியில் சடலம் மீட்பு.

திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி கூலித்தொழிலாளி. தொகை மலையில் உள்ள தனது அக்கா சந்திராவை பார்ப்பதற்கு சென்றார். இந்நிலையில் ஒயின் ஷாப் செல்லும் சாலையில் மரத்தடியில் பெரியசாமி இறந்து கிடந்தார். இது குறித்து தோகைமலை போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்று சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பெரியசாமி மனைவி பூங்கொடி கொடுத்த புகாரின் பேரில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சாலை விபத்தில் தொழிலாளி பலி.

கரூர் அருகே, சாலை விபத்தில் கூலி தொழிலாளி உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம், சின்ன கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் கூலித்தொழிலாளி. பஜாஜ் பிளாட்டினா டூவீலரில் மணப்பாறை கரூர் சாலை உப்பிடமங்கலம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக கிருஷ்ணராயபுரம் பகுதியைச் சேர்ந்த பாபு என்பவர் ஓட்டி வந்த மினி வேன் நந்தகுமார் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த நந்தகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து நந்தகுமாரின் மனைவி செல்வி கொடுத்த புகாரின் பேரில் வெள்ளியணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.





















