Crime : ‘சேர்ந்து வாழத்தான் ஆசை’ : கணவனின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு வலிப்பு என நாடகம்.. மனைவி கைது!
கணவனுடன் வாழ விருப்பமில்லாததால் தனது காதலனுடன் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கணவனுடன் வாழ விருப்பமில்லாததால் தனது காதலனுடன் சேர்ந்து கழுத்தை நெரித்து கொன்ற பெண் செய்த விஷயங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரை அடுத்த கோனனகுன்டே பகுதியை சேர்ந்தவர் 30 வயதான மகேஷ். இவருக்கு 27 வயததில் சில்பாவிற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைப்பெற்றுள்ளது. இந்த நிலையில், திருமணத்திற்கு முன்பே சில்பாவிற்கும் சந்தோஷ் என்பவருக்கும் காதல் இருந்துள்ளது. இந்த காதலுக்கு சில்பாவின் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, மகேஷ் என்பவருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதன் காரணமாக சில்பா விருப்பமின்றி வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். இருப்பினும் அவ்வபோது தனது முன்னாள் காதலுடன் அடிக்கடி வெளியே செல்வது, ஊர் சுற்றுவது என்று கணவனுக்கு தெரியாமல் உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இப்படியே நாட்கள் செல்ல செல்ல எங்கே கணவனுக்கு தெரிந்துவிட்டால் பெரிய பிரச்சனையாகி விடுமோ என்ற பயத்தில் காதலுடன் சேர்ந்து சில்பா கணவனை கொல்ல திட்டமிட்டுள்ளார். அதன்படி, கடந்த செப்டம்பர் 2 ம் தேதி அன்று சில்பா தனது காதலுடன் இணைந்து மகேஷை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். தொடர்ந்து உயிரிழந்த மகேஷின் உடலை காரில் ஏற்றிக்கொண்டு மாண்டியாவுக்கு சென்றுள்ளனர். அங்கிருந்து கணவரின் குடும்பத்திற்கு போன் செய்து, கணவருக்கு வலிப்பு வந்துவிட்டதாகவும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்துவிட்டதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மகேஷின் பெற்றோர் மகனின் உடலை பார்த்து கதறி துடித்துள்ளனர். அப்போது மகேஷின் கழுத்து பகுதியில் காயம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து, சந்தேகத்தின்பேரில் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் மகேஷின் உடலை மீட்டு உடற்கூராய்வு செய்ய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனை அடிப்படையில் மகேஷ் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது.
முதலில் சேர்ந்து வாழத்தான் ஆசை என தெரிவித்துவந்துள்ளார். இதனையடுத்து, மகேஷின் மனைவி சில்பாவிடம் காவல்துறையினர் கிடுக்குப்பிடி விசாரனையில் நடந்த அனைத்தும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். கணவருடன் வாழ விருப்பமில்லை என்றும், அதனால் காதலுடன் இணைந்து கணவர் மகேஷை கொலை செய்து விட்டு வலிப்பு நோயால் இறந்துவிட்டதாகவும் நாடகமாடியதாகவும் தெரிவித்தார். வாக்குமூலத்தின் அடிப்படையில் சில்பா மற்றும் அவரது காதலன் சந்தோஷும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.