மேலும் அறிய
ஸ்ரீபெரும்புதூரில் கழிவுநீர் தொட்டியில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு - இருவர் கைது
மீண்டும் கழிவுநீர் தொட்டியில் உயிரிழக்கும் சம்பவம் தொடர்கதை ஆகியுள்ளது.

நவீன்குமார், திருமலை ,ரங்கநாதன்
3 பேர் உயிரிழப்பு
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பல ஆண்டுகளாக பிரபல தனியார் ஓட்டல் ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்த பிரபல தனியார் ஓட்டலில் இன்று கழிவுநீர் தொட்டியில் நிரம்பிய காரணத்தினால், தனியார் மூலம் கழிவு நீரை வெளியேற்ற முயற்சி மேற்கொண்டுள்ளனர். அப்பொழுது காஞ்சிபுரம் மாவட்டம், கட்சிப்பேடு பகுதியை ரங்கநாதன் (51), நவீன் குமார் (18), திருமலை (31) மூன்று பேரும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

நீண்ட நாளா திறக்காமல் இருந்த தொட்டியில் மூன்று பேரும் வேலை புரிந்ததால், திடீரென அங்கிருந்து விஷ வாயு தாக்க துவங்கியுள்ளது. இதன் காரணமாக முதலில் ரங்கநாதன் விஷவாயு காரணமாக தொட்டிக்குள் மயங்கி விழுந்துள்ளார். இதனை அடுத்து அவரைக் காப்பாற்ற சக நண்பர்கள் இருவரும் முயற்சி செய்த பொழுது அவர்கள் இருவரும் அடுத்த தொட்டியில் மயங்கி விழுந்துள்ளனர்.
கழிவுநீர் தொட்டி
இந்த கழிவுநீர் தொட்டியில் அதிக அளவு நீர் இருந்ததால் மூன்று பேரும் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தனர். உடனடியாக தனியார் ஹோட்டல் ஹோட்டல் மூலம் ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினருக்கு மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்புத்தூரியனருக்கு, தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு பிறந்த காவல் துறையினர் , ஹோட்டல் நிர்வாகிகளிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினர் நீரை வெளியேற்றி உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். உயிரிழந்த ரங்கநாதன் மற்றும் நவீன் குமார் ஆகிய இருவரின் உடலை மீட்டனர். இதனை அடுத்து, திருமலையின் உடலை தீவிரமாக கழிவுநீர் தொட்டியில் தேடி வருகின்றனர்.
இருவர் கைது
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் விடுதி மேலாளர் முரளி மற்றும் ஒப்பந்ததாரர் ரஜினி ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கழிவுநீர் அகற்றியபோது 5 ஆண்டுகளில் 321 பேர் உயிரிழப்பு: மக்களவையில் அரசு தகவல்

கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்தபோது கடந்த 5 ஆண்டுகளில் நாட்டில் 321 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மனிதர்கள் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் முறையை ஒழித்துவிட்டாலும் கடந்த ஆண்டுகளில் நாட்டில் ஆங்காங்கே சில சம்பவங்கள் நடக்கின்றன.
கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் முறையில் எத்தனைபேர் உயிரிழந்துள்ளார்கள் என பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.பி. கிரிஷ் சந்திரா, தெலங்கு தேசம் கட்சியின் எம்.பி. கேசினேனி ஸ்ரீனிவாஸ் ஆகியோர் கேள்வி எழுப்பினர். இதற்கு மக்களவையில் சமூக நீதிதித்துறை அமைச்சர் வீரேந்திர குமார் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில் அவர் கூறுகையில் “ நாட்டில் மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதை தடை செய்வது, கழிவுநீர் தொட்டிகளை மனிதர்கள் சுத்தம் செய்வதில் இருக்கும் இலக்குகளை மத்திய அரசு அடைய முடியும். கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் தொழிலாளர்களைக் கண்டுபிடித்து அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணிகள், திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் எழுப்பிய கேள்விக்கு சமூக நீதித்துறை இணைஅமைச்சர் ராமதாஸ் அத்வாலே பதில் அளிக்கையில் “ கடந்த 5 ஆண்டுகளில் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும்போது நடந்த விபத்துகளில் 321 தொழிலாளர்கள் உயிரழந்துள்ளனர். ஆனால், மனிதக்கழிவுகளை அகற்றியபோது உயிரிழந்ததாக எந்த புகாரும் இல்லை.
கழிவுநீர் தொட்டிகள், வழிகாட்டி விதிகளின்படி முறைப்படி கட்டவில்லை என்பதால்தான் இந்த விபத்துகள் நடந்துள்ளன. அதிகபட்சமாக 2019-ம் ஆண்டில் 119 பேர் உயிரிழந்துள்ளனர். 2020ம் ஆண்டில் 19 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். மனிதர்கள் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் முறை இந்தியாவில் தடை செய்யப்பட்டுவிட்டது” எனத் தெரிவி்த்தார்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
தஞ்சாவூர்
கல்வி
தஞ்சாவூர்
Advertisement
Advertisement