மாமனை கொலை செய்த மச்சான்... ஜாமீனில் வந்தவரை கொலை செய்த மர்மநபர்கள்.. ஜோலார்பேட்டையில் பரபரப்பு
சில தினங்களுக்கு முன்பு ஜாமினில் வெளிய வந்த சக்கரவர்த்தியை மர்ம நபர்கள் நோட்டமிட்டதாக வந்ததாக கூறப்படுகிறது.

ஜோலார்பேட்டை அருகே நில பிரச்சனை காரணமாக சொந்த மாமனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு சிறைக்கு சென்ற மச்சான் ஜாமினில் வெளிய வந்த நிலையில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிலத்தகராறு:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம் பட்டி பகுதியைச் சேர்ந்த திம்மராயன் (48) ரியல் எஸ்டேட் வேலை செய்து வந்தார். இவருடைய அக்கா மகன் சக்கரவர்த்தி என்பவருக்கும் நில சம்மந்தமான பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
மாமவை கொன்ற மச்சான்:
இதன் காரணமாக கடந்த பிப்ரவரி 17 தேதி அன்று ஜோலார்பேட்டை காந்தி நகர் பகுதியில் உள்ள நிலத்தில் வாழை தோப்பில் திம்மராயன் இருந்தபோது அவரை பின்தொடர்ந்து வந்த சக்கரவர்த்தி மறைத்து வைத்திருந்த அறிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.
பின்னர் ஒன்பது நாட்களுக்குப் பின்னர் போலீசார் சக்கரவர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர். சில தினங்களுக்கு முன்பு ஜாமினில் வெளிய வந்த சக்கரவர்த்தியை மர்ம நபர்கள் நோட்டமிட்டதாக வந்ததாக கூறப்படுகிறது.
மர்ம நபர்கள் தாக்குதல்:
இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் உள்ள காவல் நிலையத்தில் கையெழுத்து போட சக்கரவர்த்தியும் அவருடைய மனைவி கௌரி ஆகிய இருவரும் செல்ல இருந்தனர், அப்போது பொன்னேரி பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு வெளியே வந்தபோது அங்கு இவர்களை நோட்டமிட்ட ஸ்கார்பியோ காரில் வந்த மர்ம நபர்கள் ஐந்து பேர் கண்ணிமைக்கும் நேரத்தில் சக்கரவர்த்தியை சாராமாரியாக வெட்டினர்.
இதனை தடுக்கச் சென்ற கௌரிக்கும் சுண்டுவிரலில் வெட்டு விழுந்தது. பின்னர் இருவரும் மயங்கிய நிலையில் அங்கிருந்து மர்ம நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு:
இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பெயரில் ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரையும் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் மருத்துவமனையில் சக்கரவர்த்தி தலையில் ஆறு தையல்கள் போடப்பட்டது மேலும் தோள்பட்டை மற்றும் உடலில் பல்வேறு இடங்களிலும் காயம் ஏற்பட்டுள்ளது.இதனால் மேல் சிகிச்சைக்காக வேலூர் மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்த நிலையில் செல்லும் வழியில் சக்கரவர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார்.
போலீசார் விசாரணை:
மேலும் இது குறித்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா மற்றும் ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு தீவிர விசாரணை மேற்கொண்டார். சொந்த மாமனை சொத்து பிரச்சனை காரணமாக வெட்டி படுகொலை செய்து ஜாமீனில் வெளியே வந்த மச்சானை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






















