மேலும் அறிய

Crime: நகை கடைக்காரர் மகன்கள் கடத்தல்: பெங்களூரில் பதுங்கி இருந்த 3 பேர்துப்பாக்கி முனையில் கைது!

திருவண்ணாமலை நகை கடைக்காரர் மகன்களை 70 லட்சம் ரூபாய் பணத்திற்காக கடத்தப்பட்ட விவகாரத்தில் பெங்களூருவில் பதுங்கி இருந்த 3 நபர்களை போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர்

திருவண்ணாமலை அய்யகுளம் தெருவை சேர்ந்த நரேந்திர குமார் இவர் திருவண்ணாமலை கள்ளக்கடை சந்திப்பில் நகை கடை வைத்துள்ளார்.  இவரது மகன்களான ஜித்தேஷ் வயது (29), அரியந் வயது (27) ஆகிய இருவரும் அவருடைய தந்தையின் கடையை பார்த்துக்கொள்கின்றனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு  இருவரும் வழக்கம் போல் கடையில் வியாபாரம் முடிந்ததும் வீட்டுக்கு புறப்பட்டனர்.  இரவு 10 மணிக்கு இவர்களுடைய இருசக்கர வாகனத்தில்  சென்ற போது காரில் வந்த ஒரு மர்ம கும்பல் திடீரென இரு சக்கர  வாகனத்தை வழிமறித்து இருவரையும் வலுக்கட்டாயமாக காரில்  ஏற்றி கண்ணிமைக்கும் நேரத்தில் கடத்தி சென்றுள்ளர். இந்த செயலை அங்கிருந்தவர்கள் கண்டதும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் நரேந்திர குமாரை கடத்தல் கும்பல் தொலைபேசியில்  தொடர்பு கொண்டு உங்கள் மகன் விடுவிக்க வேண்டுமெனில் 70 லட்சம் ரூபாய் தர வேண்டும். பணத்தை எங்கு வைத்து கொடுக்க வேண்டும் என பின்னர் கூறுகிறோம் என்று கூறி இணைப்பை துண்டித்துள்ளனர்.

Crime: நகை கடைக்காரர் மகன்கள் கடத்தல்: பெங்களூரில் பதுங்கி இருந்த 3 பேர்துப்பாக்கி முனையில் கைது!

நகை கடைக்காரர் மகன்கள் கடத்தல்

அதன் பிறகு சிறிது நேரம் கழித்து மீண்டும் அவரை தொடர்பு கொண்டு என்னிடம் இவ்வளவு தொகை இல்லை என அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்கு இடையே  பேரம் நடந்து ஒரு வழியாக 10 லட்சம் ரூபாய் தர முடிவு செய்யப்பட்டது. பின்னர் அந்த பணத்தை திருக்கோவிலூர் சாலையில் அருகே வந்து தருமாறு கூறியுள்ளார். இது குறித்து காவல்துறைக்கு எந்தவித  தகவலும் தெரிவிக்க கூடாது என்றும், கடத்தல் கும்பல் மிரட்டி உள்ளது. இருப்பினும் நரேந்திர குமார் இது குறித்து திருவண்ணாமலை நகர காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னால் கடத்தல் கும்பல் கூறியது; உடனடியாக  பத்து லட்சம் ரூபாய் உடன் அவர்கள் சொன்ன இடத்திற்கு சென்று பணத்தை கொடுத்தார் பணத்தைப் பெற்றுக் கொண்டதும் ஜித்தேஷ் அரியந்து ஆகிய இரண்டு பேரை காரில் இருந்து இறக்கிவிட்டு பணத்துடன் தப்பினர். இந்த நிலையில் அந்த நபர்களை  பின்தொடர்ந்து சென்ற காவல்துறையினர் செங்கம் அருகே மடக்கினர்.

Crime: நகை கடைக்காரர் மகன்கள் கடத்தல்: பெங்களூரில் பதுங்கி இருந்த 3 பேர்துப்பாக்கி முனையில் கைது!

கடத்துவதற்கு மூளையாக இருந்த சித்தப்பா உட்பட 4 பேர் கைது

அதனை தொடர்ந்து காரில் இருந்த பெங்களூரைச் சேர்ந்த விக்ரம், மனு, வாசிம் ஆகிய மூன்று பேரையும் காவல்துறையினர் பிடித்து அவர்களிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர். அதனை தொடர்ந்து நடத்திய விசாரணையில் நரேந்திர குமாரின்  தம்பியும் கடத்தப்பட்ட இரண்டு பேரின் சித்தப்பாவுமான திருவண்ணாமலை சேர்ந்த அன்ஸராஜ் என்பவர் இதில் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.  இதனை அடுத்து அன்ஸ்ராஜ் விக்ரம், மனு, வாசிம் ஆகிய நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் பெங்களூருவை சேர்ந்த பில்லா என்பவர் இதற்கு மூளையாக செயல்பட்டதும், திருவண்ணாமலை அடுத்த பறையம்பட்டு  பகுதியைச் சேர்ந்த சீனு, அண்ணாமலை, பிரவீன்குமார் ஆகியோர் கடத்தலில்  ஈடுபட்டதும் அவர்கள் அனைவரும்  பெங்களூரில் பதுங்கி இருப்பதும் தெரியவந்துள்ளது.

Crime: நகை கடைக்காரர் மகன்கள் கடத்தல்: பெங்களூரில் பதுங்கி இருந்த 3 பேர்துப்பாக்கி முனையில் கைது!

பெங்களூருவில் பதுங்கி இரந்த மூன்று பேர் கைது

அதனை தொடர்ந்து காவல்துறையினர் நேற்று முன்தினம் பெங்களூர் சென்று அங்கு பதுங்கி இருந்த பில்லா வயது (23) திருவண்ணாமலை அடுத்த பறையம்பட்டு பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் வயது (24), சதீஷ் வயது (25) ஆகிய மூன்று பேரையும் பிடித்து திருவண்ணாமலைக்கு காலை அழைத்து வந்தனர். பின்னர் அவர்கள் மூன்று பேரையும்  மாலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இதுவரை இந்த கடத்தல் வழக்கில் ஏழு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக பறையம்பட்டை சேர்ந்த சீனு, அண்ணாமலை, பிரவீன் குமார் உட்பட பலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Fishermen Arrest: கொதிப்பில் தமிழகம் - மீண்டும் 23 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை
TN Fishermen Arrest: கொதிப்பில் தமிழகம் - மீண்டும் 23 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை
TN Rain Update: தமிழகமே உஷார் - 5 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை - புயல் வருகிறதா? சென்னை வானிலை அறிக்கை
TN Rain Update: தமிழகமே உஷார் - 5 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை - புயல் வருகிறதா? சென்னை வானிலை அறிக்கை
ஒரு கொடி கம்பம் நடுவதற்கு ஒரு யுத்தம் செய்ய வேண்டியுள்ளது - பொங்கிய திருமாவளவன்
ஒரு கொடி கம்பம் நடுவதற்கு ஒரு யுத்தம் செய்ய வேண்டியுள்ளது - பொங்கிய திருமாவளவன்
டிரம்ப் பேசும்போது
டிரம்ப் பேசும்போது "மோடி, மோடி" என பறந்த கோஷம்?. ஆனால் உண்மையில் என்ன நடந்தது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Salem Prisoner Attacks Police : ’’எனக்கு சிகரெட் வேணும்’’போலீஸை அடிக்க பாய்ந்த கைதி..Gujarat Car Funeral Ceremony : ’லக்கி’ காருக்கு இறுதிச்சடங்கு! வியக்க வைத்த விவசாயிTVK Vijay Meet Army Officers | ராணுவ வீரர்களுடன் விஜய் திடீர் சந்திப்பு ஏன்? கதறும் பாஜகவினர்Muthusamy | முத்துசாமியின் உள்ளடி வேலை! ஷாக்கில் ஈரோடு திமுக! யாரும் எதிர்பார்க்காத அறிவிப்பு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Fishermen Arrest: கொதிப்பில் தமிழகம் - மீண்டும் 23 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை
TN Fishermen Arrest: கொதிப்பில் தமிழகம் - மீண்டும் 23 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை
TN Rain Update: தமிழகமே உஷார் - 5 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை - புயல் வருகிறதா? சென்னை வானிலை அறிக்கை
TN Rain Update: தமிழகமே உஷார் - 5 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை - புயல் வருகிறதா? சென்னை வானிலை அறிக்கை
ஒரு கொடி கம்பம் நடுவதற்கு ஒரு யுத்தம் செய்ய வேண்டியுள்ளது - பொங்கிய திருமாவளவன்
ஒரு கொடி கம்பம் நடுவதற்கு ஒரு யுத்தம் செய்ய வேண்டியுள்ளது - பொங்கிய திருமாவளவன்
டிரம்ப் பேசும்போது
டிரம்ப் பேசும்போது "மோடி, மோடி" என பறந்த கோஷம்?. ஆனால் உண்மையில் என்ன நடந்தது?
"ஆணாதிக்கம் ஒன்னும் உங்களை தடுக்கிறதில்ல" நிர்மலா சீதாராமன் நறுக்!
ISRO Sivan:
"2040 ஆம் ஆண்டில் நிலவில் இந்திய ஆராய்ச்சியாளர்கள் கால் பதிப்பார்கள்" - இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன்
"அம்பேத்கரை அவமானப்படுத்திட்டாங்க.. இந்த இடஒதுக்கீட்டை ஏத்துக்க மாட்டோம்" அமித் ஷா அதிரடி
4B movement: ட்ரம்புக்கா ஓட்டு போட்டீங்க..! நோ டேட்டிங், நோ கல்யாணம், உடலுறவு - ஆண்களுக்கு எதிராக அமெரிக்க பெண்கள் போராட்டம்
4B movement: ட்ரம்புக்கா ஓட்டு போட்டீங்க..! நோ டேட்டிங், நோ கல்யாணம், உடலுறவு - ஆண்களுக்கு எதிராக அமெரிக்க பெண்கள் போராட்டம்
Embed widget