மேலும் அறிய

Crime : ஜேஇஇ தேர்வில் மோசடி.. மென்பொருள் ஹேக்கிங்.. மோசடி நபரை சிபிஐ வளைத்துப்பிடித்தது எப்படி?

கடந்த 2021ஆம் ஆண்டு, லட்சகணக்கான மாணவர்கள் எழுதிய இந்த தேர்வு முடிவுகளில் மோசடி நடந்துள்ளதாக மத்திய புலனாய்வு அமைப்பு இன்று தெரிவித்துள்ளது.

நாட்டின் புகழ்பெற்ற உயர் கல்வி நிலையங்களான ஐஐடி போன்றவற்றில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இது ஜேஇஇ முதல்நிலை மற்றும் முதன்மை தேர்வு என இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது. ஜேஇஇ முதல்நிலை தேர்வு, கணினி வழியாக நாடு முழுவதும் நடத்தப்பட்டது. சுமார் 10 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர்.

கடந்த 2021ஆம் ஆண்டு, லட்சகணக்கான மாணவர்கள் எழுதிய இந்த தேர்வு முடிவுகளில் மோசடி நடந்துள்ளதாக மத்திய புலனாய்வு அமைப்பு இன்று தெரிவித்துள்ளது. மோசடிக்கு காரணமான ரஷியாவை சேர்ந்த நபரிடம் விசாரணை செய்து வருவதாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டில், உலகப் புகழ்பெற்ற டிசிஎஸ் நிறுவனம் உருவாக்கிய தேர்வுக்கான மென்பொருளை ரஷியரான மிகைல் ஷார்கின் ஹேக் செய்ததாக சிபிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. மேலும், கஜகஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வந்து இறங்கிய ஷார்கின் டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த தேர்வில் மோசடி செய்ததற்காக ஷார்கின் தேடப்பட்டு வருவது விமான நிலைய அலுவலர்களுக்கு தெரியும். ஜேஇஇ முதல்நிலை தேர்வுக்கான தளமாக இருந்த டிசிஎஸ் மென்பொருளை ஹேக் செய்து, தேர்வெழுதும் விண்ணப்பதாரர்களின் கணினி முனையங்களைக் அவர் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஷார்கின் ஹேக்கிங் செய்ததன் மூலம், மாணவர்கள் ஏமாற்ற முடிந்தது. குறிப்பிட்ட மாணவரின் கணினி வழியாக அவருக்கு பதிலாக வேறொருவர் தேர்வை எழுத இந்த ஹேக்கிங் பயன்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் அமைந்துள்ள அஃபினிட்டி எஜுகேஷன் என்ற தனியார் பயிற்சி நிறுவனத்தின் ஊழியர்களுக்கு மாணவர்கள் தலா 12 முதல் 15 லட்சம் வரை வழங்கி வினாவுக்கு பதில் எழுத வைத்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடியில் பல வெளிநாட்டவர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

20 மாணவர்கள் ஏமாற்றியதாக நம்பப்பட்டு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தேர்வெழுத அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அதன்பிறகு, பல்வேறு நகரங்களில் சோதனை நடத்தி சிபிஐ வழக்குப் பதிவு செய்து, மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட மடிக்கணினிகள் மற்றும் பிற உபகரணங்களை பறிமுதல் செய்தது.

தலைப்பு செய்திகள்

"நகைக் கொள்ளை வழக்கில் சிக்கிய பெண் காவலர்" பணியிடை நீக்கத்தால் விபரீதம் -இறுதியில் நடந்த சோகம்
"வேலை பார்க்காவிட்டால் டிரான்ஸ்பர் வாங்கிப் போங்க" - மருத்துவர்களை மிரட்டியதாக மயிலாடுதுறை எம்.எல்.ஏ மீது புகார் மனு..
" வேலை தேடும் இளைஞர்கள் , பெண்கள் தான் டார்கெட் " G - Pay -யில் லட்சக் கணக்கில் மோசடி
குளித்தலை அருகே ஒரே கோயிலை குறி வைத்து மீண்டும், மீண்டும் திருடும் கொள்ளையர்கள்... மக்கள் அதிர்ச்சி
குளித்தலை அருகே ஒரே கோயிலை குறி வைத்து மீண்டும், மீண்டும் திருடும் கொள்ளையர்கள்... மக்கள் அதிர்ச்சி

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Narendra Modi: மெட்ரோ ஓபனிங் மட்டுமல்ல... பல பிளான்களுடன் சென்னை வரும் பிரதமர் மோடி.. லிஸ்ட் இதோ!
Narendra Modi: மெட்ரோ ஓபனிங் மட்டுமல்ல... பல பிளான்களுடன் சென்னை வரும் பிரதமர் மோடி.. லிஸ்ட் இதோ!
CM Vijay PM Modi: முதல்முறையே இப்படியா..! PM மோடியின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் CM விஜய்? முழு விழா பட்டியல்
முதல்முறையே இப்படியா..! PM மோடியின் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் CM விஜய்? முழு விழா பட்டியல்
TN Govt: தயாராகும் விலையில்லா சிலிண்டருக்கான பட்டியல்..! யார் யாருக்கு? எந்தெந்த நாட்களில் கிடைக்கும்? விவரம்
தயாராகும் விலையில்லா சிலிண்டருக்கான பட்டியல்..! யார் யாருக்கு? எந்தெந்த நாட்களில் கிடைக்கும்? விவரம்
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு வார்னிங் - இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு வார்னிங் - இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
"நான் வரேன் வடசென்னைக்கு.. தமிழ்நாட்டை தொட விட மாட்டேன்".. கர்ஜித்த ராகுல் காந்தி!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
Embed widget