'அட்ரஸ் தாங்க.. காரை கொண்டுவரேன்' - மூதாட்டியோடு சேர்த்து காரை திருடிச்சென்ற நபர்!

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரின் மாடல் டவுன் பகுதி வாலிபன் காருக்குள் இருந்த 77 வயது மூதாட்டியுடன் அந்த காரை திருடிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US: 

கடந்த திங்கள்கிழமை பிற்பகல், 77 வயதான பல்வீர் கவுர் தனது வீட்டில் இருந்து தனது காரில் ஓட்டுநருடன் அருகிலுள்ள சந்தைக்குச் சென்றுள்ளார். அப்போது பொருட்கள் வாங்க அந்த டிரைவர் காரில் இருந்து இறங்கியுள்ளார். ஆனால் ஏர் கண்டிஷனிங் சிஸ்டம் தொடர்ந்து இயங்குவதாக அவர் வண்டி என்ஜினை நிறுத்தாமல் தொடர்ந்து இயங்கும் வண்ணம் வைத்துவிட்டு சென்றுள்ளார். அட்ரஸ் தாங்க.. காரை கொண்டுவரேன்' - மூதாட்டியோடு சேர்த்து காரை திருடிச்சென்ற நபர்!

இந்நிலையில் அந்த வழியாக வந்த வாலிபன் ஒருவன் வண்டியை அந்த மூதாட்டியோடு திருடி சென்றுள்ளார். கடையை விட்டு வெளியே வந்த காரின் ஓட்டுநர் மூதாட்டியோடு கார் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் சிறுது தூரம் காரை ஓட்டிச்சென்ற அந்த திருடன் ஓர் இடத்தில் அந்த மூதாட்டியை இறக்கிவிட்டு 'ஆண்ட்டி ஜி, உங்களை காயப்படுத்த நான் விரும்பவில்லை. உங்கள் முகவரியை தாருங்கள் நாளை நிச்சயம் உங்கள் வீட்டிற்கு வந்து வண்டியை தருகிறேன்' என்று கூறிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்அட்ரஸ் தாங்க.. காரை கொண்டுவரேன்' - மூதாட்டியோடு சேர்த்து காரை திருடிச்சென்ற நபர்!
அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது!

அதன் பிறகு தனது டிரைவரை தொடர்பு கொண்டு வீடு திரும்பியுள்ளார் பல்வீர் கவுர். போலீஸ் அவர் அளித்த புகாரின் அடிப்படையில் அடையாளம் தெரியாத அந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அந்த திருடனை போலீசார் தேடி வருகின்றனர். கவுர் அமெரிக்காவில் தனது குடும்பத்துடன் வசித்து வருவதாகவும், தற்போது மாடல் டவுனில் உள்ள தனது வீட்டில் உள்ள அவர் சம்பவத்தன்று தனது தொலைபேசியை விற்க அருகிலுள்ள வருமான வரி காலனி சந்தைக்கு சென்றதாகவும் விசாரணையில் கூறியுள்ளார். 

திருடனை போலீசார் தேடிவரும் நிலையில் தற்போது வரை அந்த கார் வீடு திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags: Jalandhar Car theft Old Woman Car Theft Balveer Kaur Jalandhar

தொடர்புடைய செய்திகள்

குழந்தை உயிரிழப்பு: மருத்துவமனையை அடித்து சூறையாடிய உறவினர்!

குழந்தை உயிரிழப்பு: மருத்துவமனையை அடித்து சூறையாடிய உறவினர்!

கண்டித்தும் தொடர்ந்த கள்ளக்காதல்; மகளை வெட்டி வீசிய தந்தை!

கண்டித்தும் தொடர்ந்த கள்ளக்காதல்; மகளை வெட்டி வீசிய தந்தை!

மாணவிக்கு பாலியல் தொல்லை.. செல்போனால் தெரிய வந்த உண்மை

மாணவிக்கு பாலியல் தொல்லை.. செல்போனால் தெரிய வந்த உண்மை

கோவை : போதை மாத்திரைகளை கரைத்து ஊசி மூலம் ஏற்றும் கொடூரம்: இளைஞர்களே குறி ! 4 பேர் கைது!

கோவை : போதை மாத்திரைகளை கரைத்து ஊசி மூலம் ஏற்றும் கொடூரம்:  இளைஞர்களே குறி ! 4 பேர் கைது!

கோவையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி.. வெளியான வீடியோ

கோவையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி.. வெளியான   வீடியோ

டாப் நியூஸ்

PM Modi in J&K Meeting: பிரதமர் உடனான சந்திப்பு நிறைவு: பல கோரிக்கைகளை முன்வைத்த ஜம்மு-காஷ்மீர் தலைவர்கள்

PM Modi in J&K Meeting: பிரதமர் உடனான சந்திப்பு நிறைவு:  பல கோரிக்கைகளை முன்வைத்த ஜம்மு-காஷ்மீர் தலைவர்கள்

Youtuber Sattai Duraimurugan: சாட்டை துரைமுருகனின் ஆட்டையை கலைத்தவர் திமுகவில் இணைந்தார்!

Youtuber Sattai Duraimurugan: சாட்டை துரைமுருகனின் ஆட்டையை கலைத்தவர் திமுகவில் இணைந்தார்!

RajaKalakkalRani Comedy Show: விஜய் டிவியின் புதிய நிகழ்ச்சி ‘comedy ராஜா கலக்கல் ராணி’ ..!

RajaKalakkalRani Comedy Show: விஜய் டிவியின் புதிய நிகழ்ச்சி ‘comedy ராஜா கலக்கல் ராணி’ ..!

JioPhone Next Features: ஜியோ ஃபோன் நெக்ஸ்ட் சிறப்பு அம்சங்கள் தெரியுமா? விலை இவ்வளவு தானா?

JioPhone Next Features: ஜியோ ஃபோன் நெக்ஸ்ட்  சிறப்பு அம்சங்கள் தெரியுமா? விலை இவ்வளவு தானா?