மேலும் அறிய
சென்னையில் கொசுவை விரட்ட வீட்டில் புகை: மூச்சு திணறி 2 பேர் பலி; 2 பேர் கவலைக்கிடம்!
சென்னை பல்லாவரம் அருகே கொசுவை விரட்டுவதற்காக போடப்பட்ட புகை மூட்டத்தால் இருவர் உயிரிழந்தனர். மேலுமு் இருவர் கவலைக்கிடமாக உள்ளனர்.

மூச்சு திணறி இறந்த பெண்
சென்னை பல்லாவரம் அடுத்த, பம்மல், திருவள்ளுவர் தெரு, பொன்னி நகரில் ஒரு வீட்டில் நான்கு பேர் இரவு தூங்கியுள்ளனர்.இன்று காலை வீடு முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்து வீட்டில் இருந்து புகை வெளியே வரத்துவங்கியுள்ளது. இதனை கண்ட மேல் தளத்தில் குடியிருக்கும் பெண் ஒருவர் வீட்டின் உரிமையாளர் மகனுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலின் பேரில் மகன் வந்து கதவை தட்டியும் திறக்காததால் வீட்டில் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது நான்கு பேர் படுத்த நிலையில் இருந்துள்ளனர். நான்கு பேரையும் மீட்டு ஆட்டோ மூலம் குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் புஷ்பலட்சுமி (55) என்ற பெண் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

மீதமுள்ள மூவரின் நிலை மோசமாக இருப்பதாக கூறி மேல் சிகிச்சைகாக இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் 11 வயது சிறுவனை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.மருத்துவமனையில் சொக்கலிங்கம் (61), இவரது மகள் மல்லிகா (38), மல்லிகாவின் மகன் விஷால் (11), ஆகியோர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், விஷால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சொக்கலிங்கம் குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனியில் கம்பவுண்டராக இருந்து ஓய்வு பெற்றவர். போலீசார் விசாரணையில் வீட்டிற்கு வெளியே சிறிய தட்டில் அடுப்பு கரியை கொண்டு எரியவிட்டு புகை போட்டுள்ளனர். அதே போல் வீட்டின் சமையலறையில் அடுப்பில் எண்ணெய் டின்னில் கரியை போட்டு எரித்து கொசுவை விரட்ட முயற்சித்துள்ளனர். பின்னர் அனைவரும் படுக்கையறையில் ஏசியை போட்டு விட்டு படுத்து உறங்கியுள்ளனர்.

கொசுவை விரட்ட போடப்பட்ட புகையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு நான்கு பேரும் மயக்க நிலைக்கு சென்றுள்ளனர். ஏற்கனவே புஷ்பலட்சுமி உயிரிழந்த நிலையில் தற்போது மருத்துவமனையில் விஷால் (11), என்ற சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பாக சங்கர் நகர் போலீசார் விசாரித்து வரும் நிலையில் பிரேத பரிசோதனையில் முடிவில் தான் இறப்பிற்கான காரணம் தெரியவரும் என்கின்றனர். கொசுவை விரட்ட புகை மூட்டம் போட்டதால் ஒருவர் உயிரிழந்த நிலையில் மூன்று பேர் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி இருக்கும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாம் அலட்சியமாக செய்யும் சிறு தவறுகள் கூட நோயும் நம்மை சுற்றியுள்ளவர்கள், உயிருக்கே ஆபத்தாக போய் முடிந்து விடும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது இந்த சம்பவம்.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
ஐபிஎல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion