கர்ப்பிணி மனைவியையும் 6 வயது மகளையும் கொலை செய்த நபர்! - காரணம் என்ன?
மனைவி மற்றும் மகளை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்ய முயன்ற நிலையில் தற்போது மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுள்ளார்.
கரூரில் கணவரால் கொலை செய்யப்பட்ட மனைவி மற்றும் மகள் சொந்த ஊரான தென்காசி மாவட்டத்திற்கு நல்லடக்கம் செய்ய உறவினரிடம் உடலை ஒப்படைத்து அதன் தொடர்ச்சியாக உறவினர்கள் இரவோடு இரவாக தென்காசி புறப்பட்டனர்.
மனைவி மற்றும் மகளை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்ய முயன்ற நிலையில் தற்போது மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுள்ளார்.
கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்த செல்வகணேஷ் இவர் தென்காசி பகுதியை சேர்ந்தவர். 20 வருடங்களுக்கு முன்பு கரூர் வந்த இவர் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில், கடந்த 7 ஆண்களுக்கு முன்பு கல்பனா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சாரதிபாலா ( 6) என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில், தற்போது மனைவி கல்பனா 4 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிகிச்சைக்காக இரத்த பரிசோதனை செய்த போது தீர்க்க முடியாத நோய் தொற்று இருப்பது தெரியவந்ததாகவும், இதனால், மன உலைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இது சமுதாயத்தில் தெரிந்தால் அவமானம் என தன்னை மட்டுமல்ல தனது மனைவி, குழந்தைகள் அனைவரையும் ஒதுக்கி வைத்து விடுவார்கள் என அச்சமடைந்த செல்வகணேஷ் தனது மனைவி மற்றும் மகளை கழுத்தறுத்து கொலை செய்து விட்டு தானும் மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளதாக முதல் கட்ட தகவலில் செல்வகணேஷ் தெரிவித்துள்ளார் என போலீசார் தெரிவித்த நிலையில் தொடர்ந்து அவருக்கு ரத்தம் மாதிரி பரிசோதனை நடைபெற்ற நிலையில் தீர்க்க முடியாத நோய் தொற்று பாதிப்பு இல்லை என வந்ததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
முதலில் தீர்க்க முடியாத நோய் தொற்று பாதிப்பு இருப்பதாக கூறிய செல்வகணேஷ் அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்த நிலையில் தற்போது தீர்க்க முடியாத நோய் தொற்று பாதிப்பு இல்லை என ரிப்போர்ட் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த கொலைக்கான மர்மம் நீடிப்பதாகவும் போலீசார் தங்களுக்கு உரிய பாணியில் விசாரணை மேற்கொள்ளும் பொழுது கொலை காண முழு காரணம் தெரியவரும் என தகவல் வெளியாகி உள்ளது.
இது நிலையில் செல்வகணேசால் உயிரிழந்த மனைவி கல்பனா மகள் சாரதி பாலா உள்ளிட்டோர் உடலை போலீசார் பிரதோ பரிசோதனைக்கு பின்னர் உறவினிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் உறவினர்கள் கல்பனாவின் சொந்த ஊரான தென்காசி மாவட்டத்தில் இரவோடு இரவாக கொண்டு சென்று அங்கு இறுதிச் சடங்கு நடைபெற்று உள்ளது.
மேலும் மனைவி மகளைக் கொன்ற செல்வகணேஷ் தற்போது காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் அவரிடம் விசாரணை நடத்த இருப்பதாகவும் போலீஸ் வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.