‛பேங்க்’ல பணம் இருக்கா இல்லையா... பொதுப்பணித்துறை பொறியாளர் வீட்டில் கட்டுக்கட்டாய் புதிய நோட்டுகள்!
பொதுப்பணித்துறை செயல் பொறியாளர் இல்லத்தில் நடத்திய ரெய்டில் ரூ.2.06 கோடி பணம் சிக்கியது. மேலும், காஞ்சிபுரத்தில் வீட்டில் இருந்து விநாயகர் நடனமாடும் வடிவத்தில் இருக்கும் சிலை பறிமுதல் செய்யப்பட்டது.
ஓசூரில் உள்ள பொதுப்பணித்துறை செயல் பொறியாளர் (தொழில்நுட்ப கல்வி பிரிவு) சி.என்.ஷோபானாவின் இல்லத்தில் இருந்து ரூ.2.06 கோடி ரொக்க பணத்தை லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், 11 வங்கியில் இருந்து 38 சவரன் தங்கம் மற்றும் 1 கிலோ வெள்ளிப் பொருட்களையும் பறிமுதல் செய்யப்பட்டன. வேலூரைச் சேர்ந்த அவரது அலுவலகம் மற்றும் கல்லூரிகளுக்கான கட்டிடத்தை அங்கீகரிப்பதில் எட்டு மாவட்டங்களுக்கு பொறுப்பானவர் அவர். இதுதொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
#JUSTIN | அரசு பொறியாளர் வீட்டில் ரூ.2.06 கோடி பறிமுதல் https://t.co/wupaoCQKa2 | #DVAC | #PWD pic.twitter.com/8BJSkmXjDB
— ABP Nadu (@abpnadu) November 3, 2021
TN Schools Holiday: சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை - தீபாவளிக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை!
400 ஆண்டு பழமையான சிலை பறிமுதல்
இதேபோல், காஞ்சிபுரத்தில் ஒரு வீட்டில் இருந்து விநாயகர் நடனமாடும் வடிவத்தில் இருக்கும் ரித்திய விநாயகர் சிலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டுக்கு விற்பனை செய்ய முயன்ற 130 கிலோ எடையும், 5.25 அடி உயரமும் கொண்ட சிலை பறிமுதல் செய்யப்பட்டது. ரகசிய தகவலின் அடிப்படையில் சென்னையில் இருந்து சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினார்கள். இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Chennai Air Cargo Customs has seized a 130 kg brass Nrithya Ganapathi idol which is over 400 years old as it was about to be exported from a house in Kanchipuram @THChennai #Chennai pic.twitter.com/825vuFCHhW
— Sunitha Sekar (@SunithaSekar) November 3, 2021
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்