TN Schools Holiday: சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை - தீபாவளிக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை!
நாளை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை நான்கு நாட்கள் விடுமுறை என்பதால் சொந்த ஊர் சொல்வோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் வரும் வியாழக்கிழமை தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழ்நாட்டில் வருகிற 6ஆம் தேதி சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பல்வேறு ஆசிரியர் சங்கங்களில் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகள் அடிப்படையில் விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே நவம்பர் 4 மற்றும் 5 ஆகிய நாட்களில் அரசு விடுமுறை விடப்பட்ட நிலையில் 6ஆம் தேதியும் விடுமுறை விடப்பட்டுள்ளது. நாளை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை நான்கு நாட்கள் விடுமுறை என்பதால் சொந்த ஊர் சொல்வோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
#JUSTIN | நவ.6ம் தேதி (சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை - பள்ளிக்கல்வித்துறை https://t.co/wupaoCz9iu | #TNSchools | #Diwali | #Diwali2021 pic.twitter.com/3WBPq3Iv2M
— ABP Nadu (@abpnadu) November 3, 2021
முன்னதாக, தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுவதை தொடர்ந்து, அதற்கு அடுத்த நாளான நவம்பர் 5-ஐ( வெள்ளிக்கிழமை) விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது,
“ வரும் நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பணியாளர்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்று விழாவை மகிழ்வுடன் கொண்டாட ஏதுவாக 5-ந் தேதி வெள்ளிக்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்குமாறு பலதரப்பில் இருந்தும் கோரிக்கைகள் அரசுக்கு வரப்பெற்றன.
அக்கோரிக்கைகளை அரசு கவனமுடன் பரிசீலித்து, தீபாவளிக்கு அடுத்த நாளான 5-ந் தேதி வெள்ளிக்கிழமை தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்தும், அந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையிலும் வரும் 20-ந் தேதி அன்று பணிநாளாக அறிவித்தும் ஆணை வெளியிடப்படுகிறது.
மேற்கண்ட உள்ளூர் விடுமுறை தினமானது செலவாணி சட்டம் 1981ன்படி அறிவிக்கப்படவில்லை என்பதால் அவசர அலுவல்களை மேற்கொள்ளும் பொருட்டு தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கருவூலங்கள் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படுவதற்கு அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்