மேலும் அறிய
நெல்லை : 5 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு..!
நெல்லையில் தொடரும் செல்போன் கொள்ளை - 5 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

செல்போன்கள்_ஒப்படைப்பு
நெல்லை மாநகரில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களில் செல்ஃபோன்கள் திருட்டு, வழிப்பறி, மாயமானதாக பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக, மாநகர சைபர் கிரைம் போலீசார் செல்போன்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி போலீசார் கடந்த 2020-ம் ஆண்டு பெறப்பட்ட 6 மனுக்கள் மற்றும் இந்த ஆண்டு பெறப்பட்ட 38 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து ரூ.5 லட்சத்து 4 ஆயிரம் மதிப்பிலான 43 செல்போன்கள் மீட்கப்பட்டு உள்ளன.
(இந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும் -ஒருவர் கை பக்குவத்தில் ஊரே சமைக்கும் எண்ணெய் சுக்கா! இது தான் மதுரையோடு பக்கா!
அந்த செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நெல்லை மாநகர போலீஸ் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாநகர போலீஸ் கமிஷனர் (பொறுப்பு) பிரவீன்குமார் அபிநபு கலந்துகொண்டு, செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















