Sexual Assault: சிறுமிகளை குறி வைத்து பாலியல் சீண்டல்.. ஒரே மாதத்தில் 4 சிறுமிகள்.! வலை வீசி தேடும் காவல்துறை!
ஒரே மாதத்தில் 4 சிறுமிகளுக்கு பாலியல் சீண்டல் நடைபெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டே வருகின்றன. அதிலும் குறிப்பாக சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை குற்றங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் ஒரே பகுதியில் ஒரே மாதத்தில் 4 சிறுமிகள் பாலியல் சீண்டல் செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனின் கிழக்கு லண்டன் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்குள் 4 சிறுமிகளுக்கு பாலியல் சீண்டல் சம்பவம் நடைபெற்றுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்குகள் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த குற்ற சம்பவங்கள் நடந்த விதத்தை வைத்து பார்க்கும் போது இவை அனைத்தையும் ஒருவரோ அல்லது ஒரு குழுவோ செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க:லீவ்ல பேங்க்போய் திருட போறேன்.. யூட்யூப் பார்த்து பயிற்சி செய்த சாப்ட்வேர் இன்ஜினியர்!
காவல்துறையினருக்கு வந்த புகார்களின்படி கடந்த டிசம்பர் 16ஆம் தேதி 13 வயது சிறுமி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது பின்னால் இருந்த வந்த ஒருவர் வேகமாக வந்து பாலியல் சீண்டல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் அந்த சிறுமி சத்தமிட்ட போது அவர் தப்பி ஓடியுள்ளார். இதைத் தொடர்ந்து ஜனவரி மாதம் 12ஆம் ஆண்டு 16 வயது சிறுமி ஒருவரிடம் ஒருநபர் முகவரி விசாரிக்க வருவது போல் வந்து பாலியல் சீண்டல் செய்துள்ளதாக தெரிகிறது. அந்த நபரும் சிறுமி சத்தமிட்ட போது தப்பி ஓடியுள்ளார்.
அதேபோல் ஜனவரி 13ஆம் தேதி 17 வயது சிறுமியை ஒருவர் பேருந்திலிருந்து பின் தொடர்ந்து பாலியல் சீண்டல் செய்ததாக தெரிகிறது. அந்த நபரும் சிறுமி சுதாரிப்பதற்குள் தப்பி ஓடியுள்ளார். கடைசியாக கடந்த 18ஆம் தேதி 16 வயது சிறுமி ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது முகவரி விசாரிப்பது போல் ஒருவர் வந்து பாலியல் சீண்டல் செய்தாக கூறப்படுகிறது. ஆகவே இந்த 4 சம்பவங்களுக்கு ஒரு சில ஒற்றுமைகள் உள்ளதால் குற்றவாளி யார் என்பதை கண்டறிய காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த விவகாரத்தில் குற்றவாளியை விரைந்து பிடிக்க காவல்துறை அப்பகுதி மக்களின் உதவியை நாடியுள்ளது. இந்த குற்ற சம்பவம் தொடர்பாக ஏதாவது தகவல் தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: 37 லட்சத்துக்கு குழந்தை கிடைக்குமா? சூப்பர் மார்கெட் வாசலில் ஷாக் கொடுத்த பெண்!