மேலும் அறிய

Manikandan Case: மாஜி அமைச்சர் மணிகண்டன் முன் ஜாமின் மனு தள்ளுபடி; கைதாக வாய்ப்பு?

திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய வழக்கில் முன் ஜாமின் கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தவர் மணிகண்டன். அதிமுக ஆட்சியில் இருக்கும்போதே இவரை அமைச்சர் பொறுப்பில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கியதுடன், கடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் மறுக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த மாதம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், புகார் அளித்த நாடோடி புகழ் நடிகை சாந்தினி. முன்னாள் அமைச்சர் மணிகண்டன், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாகவும், அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும் புகார் அளித்தார். முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

Manikandan Case: மாஜி அமைச்சர் மணிகண்டன் முன் ஜாமின் மனு தள்ளுபடி; கைதாக வாய்ப்பு?

இந்த வழக்கு நீதிபதி அப்துல்குத்தூஸ் முன்பு  விசாரணைக்கு நடைபெற்று வந்தது. முன்னாள்  அமைச்சர் மணிகண்டன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மணிகண்டன் திருமணமானவர் என தெரிந்து தான் அவருடன் நடிகை சாந்தினி குடும்பம் நடத்தியுள்ளதாக தெரிவித்தார். நடிகையை காயப்படுத்தியதாக கூறுவதற்கு எந்த மருத்துவ ஆதாரங்களும் இல்லை எனவும் வாதிட்டார். மேலும், அறிமுகம் ஆன மூன்று மாதங்களில் கருக்கலைப்பு செய்ததாக காவல்துறை தெரிவிப்பது தவறானது எனவும்  முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தரப்பில் இருந்து வாதிடப்பட்டது. 

தான் குற்றவாளி என்பதற்கு முகாந்திரம்  இருந்தால் தன்னை காவல்துறையினர் கைது செய்யட்டும் என தெரிவித்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தரப்பு, ஏப்ரல் 15 ஆம் தேதி வரை தன்னுடன் சாந்தினி வசித்ததாக கூறுவதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் நீதிமன்றத்தில் தெரிவித்தது. மேலும், காவல்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருப்பதால் தனக்கு  முன் ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

காவல்துறை தரப்பில்,  விசாரணை தற்போது ஆரம்ப கட்டத்தில்  உள்ள நிலையில், சாந்தினி மற்றும் மருத்துவர்களின் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

மூன்று முறை சாந்தினி கருக்கலைப்பு செய்துள்ளதாகவும் முக்கிய சாட்சிகளை விசாரித்து ஆதாரங்கள் சேகரிக்க  வேண்டியுள்ளதால் முன் ஜாமின் வழங்ககூடாது என நடிகை சாந்தினி தரப்பில் வாதிடப்பட்டது. மணிகண்டனுக்கு முன் ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைத்து விடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டது. சாந்தினி தரப்பில், தன்னை திருமணம் செய்து கொள்வதான தோற்றத்தை ஏற்படுத்தியதால் தான் உறவுக்கு ஒப்புதல் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டது. மேலும், 'திருமணம் செய்து கொள்வதாக அளித்த வாக்குறுதியை மீறினால், உறவுக்கு அளித்த ஒப்புதலை ஒப்புதலாக கருத வேண்டாம்' என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டிய சாந்தினி தரப்பு வழக்கறிஞர் முன் ஜாமின் வழங்க கூடாது என வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மணிகண்டனின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தலைப்பு செய்திகள்

" உன் அக்காவை காதலிக்கச் சொல் " 10-ம் வகுப்பு மாணவிக்கு மிரட்டல் !! வாலிபர் போக்சோவில் கைது
ஓய்வு பெற்ற கோட்டாட்சியர் மர்ம மரணம்... வழக்கறிஞர் தம்பதி வீட்டில் போலீஸ் அதிரடி சோதனை: நாச்சியார்கோவில் அருகே பரபரப்பு
ஓய்வு பெற்ற கோட்டாட்சியர் மர்ம மரணம்... வழக்கறிஞர் தம்பதி வீட்டில் போலீஸ் அதிரடி சோதனை: நாச்சியார்கோவில் அருகே பரபரப்பு
மேல விழுந்து மயக்கி ரூ.1 கோடி தங்கம் அமுக்கிய பெண்! காட்டிக்கொடுத்த சிசிடிவி - சென்னை பஸ்ஸில் நடந்த பகீர் திருட்டு!
மேல விழுந்து மயக்கி ரூ.1 கோடி தங்கம் அமுக்கிய பெண்! காட்டிக்கொடுத்த சிசிடிவி - சென்னை பஸ்ஸில் நடந்த பகீர் திருட்டு!
பிரிந்து சென்ற மனைவி.. பிறந்தநாளில் ஆசையாக காத்திருந்த கணவன்.. கடைசியில் நடைபெற்ற சோகம்!
பிரிந்து சென்ற மனைவி.. பிறந்தநாளில் ஆசையாக காத்திருந்த கணவன்.. கடைசியில் நடைபெற்ற சோகம்!

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By Election Results LIVE Blog : 2 தொகுதிகளிலும் தவெக முன்னிலை- 2ஆம் இடத்தில் யார்.?
TN By Election Results LIVE Blog : 2 தொகுதிகளிலும் தவெக முன்னிலை- 2ஆம் இடத்தில் யார்.?
TN By Election: கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
TN By Election Result 2026: தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
IAS Transfer: உள்துறை செயலாளர் மாற்றம்..! IAS அதிகாரிகளை கலைத்து போட்ட CM விஜய் - தமிழக அரசு புதிய உத்தரவு
உள்துறை செயலாளர் மாற்றம்..! IAS அதிகாரிகளை கலைத்து போட்ட CM விஜய் - தமிழக அரசு புதிய உத்தரவு
Kilambakkam: அடுத்த பிரச்னை ஓவர்..! இனி கிளாம்பாக்கத்திற்கு ஈசியா ரயிலில் போகலாம் - ரயில் இணைப்பில் அப்க்ரேட்
அடுத்த பிரச்னை ஓவர்..! இனி கிளாம்பாக்கத்திற்கு ஈசியா ரயிலில் போகலாம் - ரயில் இணைப்பில் அப்க்ரேட்
TN Weather News: 9 மாவட்டங்களில் இன்று கனமழை பொளக்க போகுது..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
9 மாவட்டங்களில் இன்று கனமழை பொளக்க போகுது..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Embed widget