தொடர் பைக் திருட்டு ! அதிரடி காட்டிய காவல்துறை ! இரண்டு வழக்கில் 50 பைக்குகள் பறிமுதல் !
வழக்கை பதிவு செய்த 72 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்களிடம் இருந்து 41 திருட்டு பைக்குகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
பைக் திருட்டு :
கர்நாடக மாநிலம் பெங்களூரு சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக தொடர்ந்து பைக் திருட்டு குறித்தான வழக்குகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. கடந்த ஜூலை மாதம் முதல் பைக் திருட்டு வழக்குகள் அதிகமானதால் , காவல்துறையினர் இந்த வழக்கு விசாரணையில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.
ಪಿಎಸ್ಐ ಶಿಕಾರಿಪುರ ಟೌನ್ ಪೊಲೀಸ್ ಠಾಣೆ & ಸಿಬ್ಬಂಧಿಗಳ ತಂಡವು ದ್ವಿ ಚಕ್ರ ವಾಹನ ಕಳ್ಳತನ ಮಾಡುತ್ತಿದ್ದ ಆರೋಪಿಯನ್ನು ದಸ್ತಗಿರಿ ಮಾಡಿ, ಆತನಿಂದ 09 ದ್ವಿ ಚಕ್ರ ವಾಹನಗಳನ್ನು ಅಮಾನತ್ತು ಪಡಿಸಿಕೊಂಡಿರುತ್ತಾರೆ. @DgpKarnataka @alokkumar6994 pic.twitter.com/AWcOgAaoQX
— SP Shivamogga (@Shivamogga_SP) August 1, 2022
குற்றவாளிகள் கைது ;
ஷிகாரிபுரா நகர காவல் நிலைய எல்லையில் பைக்குகளைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை சிவமொக்கா போலீஸார் திங்கள்கிழமை கைது செய்து, அவரிடமிருந்து 9 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.இது குறித்து சிவமொக்கா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் (SP) ஐபிஎஸ் அதிகாரியுமான பிஎம் லக்ஷ்மி பிரசாத் திங்கள்கிழமை தனது ட்விட்டர் பக்கத்தில் “ஷிகாரிபுரா டவுன் காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழு இரு சக்கர வாகனங்களைத் திருடிய குற்றவாளியைக் கைது செய்து திருடப்பட்ட 9 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளது. ” என குறிப்பிட்டிருந்தார்.
ವಿವಿಧ ಪ್ರಕರಣಗಳಲ್ಲಿ ಕಳ್ಳತನವಾಗಿದ್ದ 41ಮೊಟಾರು ಸೈಕಲ್ಗಳನ್ನು ನಿಪ್ಪಾಣಿ ಗ್ರಾಮೀಣ ಠಾಣೆಯ ಪೊಲೀಸರು ಪತ್ತೆಮಾಡಿದ್ದು, ಕಳ್ಳತನದಲ್ಲಿ ಭಾಗಿಯಾಗಿದ್ದ 4ಜನ ಆರೋಪಿಗಳನ್ನು ಬಂಧಿಸಿದ್ದಾರೆ. ಪ್ರಕರಣ ದಾಖಲಾದ 72ಗಂಟೆಗಳಲ್ಲಿ ಪ್ರಕರಣವನ್ನು ಪತ್ತೆ ಮಾಡಿದ್ದು, ಪತ್ತೆ ಕಾರ್ಯದಲ್ಲಿ ಶ್ರಮಿಸಿದ ಎಲ್ಲ ಅಧಿಕಾರಿ/ಸಿಬ್ಬಂದಿಯವರ ಕಾರ್ಯ ಪ್ರಶಂಸನೀಯ. pic.twitter.com/UIGja1wANs
— SP Belagavi (@SPBelagavi) August 1, 2022
41 வாகனங்கள் பறிமுதல் :
இதே போன்ற மற்றுமொரு திருட்டு வழக்கில் நிப்பானி கிராமப்புற காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்,பல்வேறு வழக்குகளில் பைக் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேர் கொண்ட கும்பலை போலீஸார் கைது செய்தனர்.வழக்கை பதிவு செய்த 72 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்களிடம் இருந்து 41 திருட்டு பைக்குகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.இதனை பெலகாவி மாவட்ட எஸ்பியாக இருக்கும் ஐபிஎஸ் அதிகாரி டாக்டர் சஞ்சீவ் எம் பாட்டீல் தெரிவித்தார். இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அவர் “ பல்வேறு வழக்குகளில் திருடப்பட்ட 41 மோட்டார் சைக்கிள்களை நிப்பாணி கிராமப்புற காவல் நிலைய போலீஸார் மீட்டு, திருட்டில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்துள்ளனர். வழக்கு பதிவு செய்யப்பட்ட 72 மணி நேரத்திற்குள் கண்டறியும் பணியில் கடுமையாக உழைத்த அனைத்து அதிகாரிகள்/ஊழியர்களின் பணி பாராட்டுக்குரியது” என குறிப்பிட்டுள்ளார்.