மேலும் அறிய

58 இடங்கள்... அதிரடியாக புகுந்த அதிகாரிகள்: அதிர்ச்சியான அதிமுக முன்னாள் அமைச்சர்! எஃப்.ஐ.ஆரில் இருப்பது என்ன?

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதைனையின்போது பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர் தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் எப்.ஐ.ஆர். வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் மொத்தம் 13 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஏ-1 ஆக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, இரண்டாவது குற்றவாளியாக அவரது சகோதரர் அன்பரசன், அதற்கு அடுத்து அன்பரசன் மனைவி ஹேமலதா, பின்னர், சந்திரசேகர், சந்திரபிரகாஷ் என குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடத்தப்பட்ட  லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் எப்.ஐ.ஆர். வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பது,

ஏ.1. ஆக குற்றம்சாட்டப்பட்டுள்ள எஸ்.பி.வேலுமணிக்கு டி.ஆர்.ஆர். சந்திரசேகர் மிகவும் நெருங்கியவர் என்பது தெரியவந்தது. இருவரும் இணைந்து நியாயம்றற டெண்டர்களை வழங்குவது உள்ளிட்ட குற்றவியல் சதியில் ஈடுபட்டுள்ளனர்.

58 இடங்கள்... அதிரடியாக புகுந்த அதிகாரிகள்: அதிர்ச்சியான அதிமுக முன்னாள் அமைச்சர்! எஃப்.ஐ.ஆரில் இருப்பது என்ன?

மேற்கண்ட கூற்றுகளின்படி எஸ்.பி.வேலுமணியின் சேமிப்பு மற்றும் செலவுகள் ஈட்டப்பட்ட வருமானத்திற்கு அதிகமாக உள்ளது. 27.4.2016 மற்றும் 15.3.2021 காலகட்டத்திற்கு இடையில் காசோலை மூலமாக ரூபாய் 33 லட்சத்து 70 ஆயிரத்து 16 ரூபாய் ஆகும். மேற்கூறிய காலகட்டத்திற்கு இடைவேளையில் எஸ்.பி.வேலுமணி அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும், மகன், மகள், உறவினர்கள் மற்றும் கூட்டாளிகள் ஆகியோரது பெயர்களில் சட்டவிரோதமாக ரூபாய் 58 கோடியே 23 லட்சத்து 97 ஆயிரத்து 52 ஆக உள்ளது. இது வருமானம் மற்றும் மொத்த வருமானத்தில் 3928 சதவீதமாக வந்துள்ளது.

எஸ்.பி.வேலுமணி தவறாக சம்பாதித்த பணத்தை பல்வேறு நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளார். இதில், டி.ஆர்.ஆர். சந்திரசேகர், டி.ஆர்.கே. சந்திரபிரகாஷ் மற்றும் அவர்களது உறவினர்கள் பங்குதாரர்கள் அல்லது அந்த நிறுவன இயக்குனர்கள் அதிகவற்றை வாங்கியிருக்கிறார்கள். தமிழ்நாட்டிலும் அதைச்சுற்றியுள்ள இடங்களிலும், வெளியிடங்களிலும் அதிக சொத்துக்களை அவரது  உறவினர்கள் மற்றும் கூட்டாளிகள் பெயரில் பல்வேறு இடங்களில் வைத்துள்ளனர்.

58 இடங்கள்... அதிரடியாக புகுந்த அதிகாரிகள்: அதிர்ச்சியான அதிமுக முன்னாள் அமைச்சர்! எஃப்.ஐ.ஆரில் இருப்பது என்ன?

அதேபோல, எஸ்.பி.வேலுமணியின் சகோதரர் அன்பரசனின் மனைவி ஹேமலதா  ஸ்ரீமஹா கணபதி ஜூவல்லர்ஸ் பிரைவேட் லிமிடெட்  நிறுவனத்தில் 99 சதவீத பங்குகளை வைத்துள்ளார். 2016-17 முதல் 2020-21 வரையிலான ரூபாய் 292 கோடி மற்றும் அதன் பொது நிறுவன காட்டிய விற்பனை அளவு அந்த காலகட்டத்திற்கு உட்பட்ட சட்ட மற்றும் வணிக நடவடிக்கை உண்மையானவற்றுடன் பொருந்தவில்லை. மேற்குறிப்பிட்ட காலத்தில் டி.ஆர்.சந்திரசேகர் சிங்கப்பூருக்கு மூன்று முறை பயணம் செய்துள்ளார். 2019ம் ஆண்டு மொத்தம் 14 நாட்கள் அங்கு தங்கியிருந்தார்.   

மேற்குறிப்பிட்ட குற்றங்களுக்காக கிரிமினல் சதி, குற்றவியல் தவறான நடத்தை மற்றும் தூண்டுதல், தண்டனைக்குரிய 120 பி ஐ.பி.சி. பிரிவு 13(2), 13 (ஐ) (இ) ஊழல் தடுப்புச் சட்டம், 13 (2) 13 (ஐ)(பி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.”

இவ்வாறு எப்.ஐ.ஆரில் உள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
"அம்பேத்கர் எனக்கு கடவுள், அவர் வழிப்படி நான் அரசியல் செய்கிறேன்" -அண்ணாமலை
Retired Players in 2024: அஷ்வின் முதல் வார்னர்! 2024-ல் விடைப்பெற்ற கிரிக்கெட் வீரர்கள்! சோகத்தில் ரசிகர்கள்
Retired Players in 2024: அஷ்வின் முதல் வார்னர்! 2024-ல் விடைப்பெற்ற கிரிக்கெட் வீரர்கள்! சோகத்தில் ரசிகர்கள்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
"அம்பேத்கர் எனக்கு கடவுள், அவர் வழிப்படி நான் அரசியல் செய்கிறேன்" -அண்ணாமலை
Retired Players in 2024: அஷ்வின் முதல் வார்னர்! 2024-ல் விடைப்பெற்ற கிரிக்கெட் வீரர்கள்! சோகத்தில் ரசிகர்கள்
Retired Players in 2024: அஷ்வின் முதல் வார்னர்! 2024-ல் விடைப்பெற்ற கிரிக்கெட் வீரர்கள்! சோகத்தில் ரசிகர்கள்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
TVK Vijay:
TVK Vijay: "ஃப்ரேம் பாருங்க ஜீ" கீர்த்தி சுரேஷை வாழ்த்திய தளபதி விஜய்! ட்ரெண்டாகும் போட்டோ!
Tamilnadu Roundup: அமித்ஷாவை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்! சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழை - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: அமித்ஷாவை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்! சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழை - தமிழகத்தில் இதுவரை
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "கிறிஸ்தவன், முஸ்லீம், இந்து எல்லாமே நான்தான்" துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
Embed widget