மேலும் அறிய

 ABP Nadu Exclusive: ‛சேஸிங்… ரன்னிங்… எஸ்கேப்…’ தனது இன்னும் பல ‛க்ரைம்’ காலங்களை பகிரும் ‛வரிச்சூர்’ செல்வம்!

‛‛அப்போ எல்லாம் குதூகலமா இருக்கும். போலீஸ் வர, நான் ஓட; அது ஒரு மாய உலகம். எப்படின்னே தெரியாமல் ஒரு 10 வருசம் ஓடிடுச்சு. அப்புறம் தான் அது அசிங்கம்னு தெரிஞ்சது,’’ என்கிறார் வரிச்சூர் செல்வம். அவரின் இன்னும் பல க்ரைம் திரில் பக்கங்களை பேட்டியில் அறியலாம்.

‛தடி எடுத்தவனெல்லாம் ரவுடினு’ கிராமத்தில் ஒரு சொல்லாடல் உண்டு. இன்றைய நிலையும் அப்படி தான். ஊருக்கு ஒரு ரவுடி இருந்த நிலை மாறி, ஊரெல்லாம் ரவுடியாகிவிட்டது. ‛நம்மை பார்த்து, நான்கு பேர் மிரள வேண்டும்,’ என்கிற மனநிலை பல இளைஞர்களை, இன்னும் சொல்ல வேண்டுமானால் சிறுவர்களை ரவுடிகளாக மாற தூண்டியிருக்கிறது. இன்று இவர்களின் எண்ணிக்கை அதிகம். அவ்வாறு இருப்பவர்கள், குற்றச்செயலில் ஈடுபடும் போது தான் அடையாளமாகிறார்கள். அதுவே ஒரு 10 வருடத்திற்கு பின் சென்று பார்த்தால் குற்றச்செயலில் ஈடுபடுபவர்களாக சிலரை தான் குறிப்பிடுவார்கள். அவர்களில் ஒருவர் தான் வரிச்சூர் செல்வம். மதுரை அருகே இருக்கக்கூடிய ஒரு கிராமம் தான் வரிச்சூர். தன் ஊர் பெயரை , தன் பெயருக்கு முன்னால் சேர்ப்பது 90களில் ஒருவிதமான கெத்து. அது தான் இன்று வரை ‛வரிச்சூர்’ செல்வம் என அடையாளப்படுத்துகிறது. சேஸிங், ரன்னிங், டீலிங் என ஒரு காலத்தில் நாளிதழ்களில் க்ரைம் பக்கங்களை அலங்கரித்த வரிச்சூர் செல்வம் இப்போது என்ன செய்கிறார்? இன்றைய குற்ற சம்பவங்களை எப்படி பார்க்கிறார்? நவீனம், குற்றங்களிலும் புகுந்துள்ளதா? என்பது குறித்து அவரிடம் பேசினோம். ABP நாடு செய்தி குழுமத்திற்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டி இதோ:

 ABP Nadu Exclusive:  ‛சேஸிங்… ரன்னிங்… எஸ்கேப்…’ தனது  இன்னும் பல  ‛க்ரைம்’ காலங்களை பகிரும் ‛வரிச்சூர்’ செல்வம்!

கேள்வி:

10 ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் வாழ்க்கை எப்படி இருந்தது?

வரிச்சூர் செல்வம்:

உண்மையை சொல்லனும்னா… 10 வருசத்துக்கு முன்னாடி நிம்மதியா தூங்க முடியாது. எப்போ போலீஸ் வரும், எப்போ என்ன நடக்கும்னு ஒரே பதட்டமா இருக்கும். எனக்கு பெரிய பிரச்னையே அது தான். போலீஸ் கூட போராட்ட வாழ்க்கையா இருந்துச்சு. எந்நேரமும் ஜெயில் வாடை தான். இப்போ தான் அந்த வாடை இல்லாம இருக்கேன். 

கேள்வி:

எது உங்களை ரவுடியா மாத்துச்சு?

வரிச்சூர் செல்வம்:

நான் 7வது தலைமுறை ரவுடியை பாக்குறேன். நெல்பேட்டை சீனி காலத்திலிருந்து லோடு முருகன் காலம் வரை பார்த்தவன் நான். அத்தனை ரவுடிகளும் எனக்கு நல்லா தெரியும். ஆனால் நான் ரவுடி இல்ல. ரவுடினா அதுக்கு அர்த்தம் வேற. பொன்னு பொருளுக்காக, ஆசைக்காக இறங்குறான் பாருங்க, அவன் தான் ரவுடி. நான் சொந்த பிரச்னைக்காக விழுந்தவன். என் அப்பாவை வெட்டுனாங்க. அந்த சூழ்நிலை, பழிக்கு நான் இறங்குனேன். சூழ்நிலை என்னை குற்றவாளியா மாத்துச்சு. அந்த குற்றத்தில் கெடச்ச பழக்க, வழக்கம் தான் நான் சந்திச்ச இவ்வளவு பிரச்னைக்கும் காரணம். 

கேள்வி:

ஆனாலும் வரிச்சியூர் செல்வம் ரவுடியா தானே அறியப்படுறார் ?

 ABP Nadu Exclusive:  ‛சேஸிங்… ரன்னிங்… எஸ்கேப்…’ தனது  இன்னும் பல  ‛க்ரைம்’ காலங்களை பகிரும் ‛வரிச்சூர்’ செல்வம்!

வரிச்சூர் செல்வம்:

நான் ஒன்னும் ப்யூர் ரவுடி கிடையாது. நான் ஜெயிலுக்குள்ள இருந்தா கூட தனி அறை தான் வாங்குவேன். விவிஐபி கேட்டகிரியில் தான் தங்குவேன். ஜெயிலர், சூப்பிரண்டு கூட தான் பேசுவேன். உள்ளே கஞ்சா, பீடி இழுத்து எவனாவது மாட்டி அழுதா, அவங்களை காப்பாத்தி அறிவுரை தருவேன். ஜெயில்ல நிறைய கேங்க் இருக்கும். யாரோடும் கூட்டு வெச்சிக்க மாட்டேன். 56 முறை ஜெயிலுக்கு போயிருக்கேன். 10 குண்டாஸ் பார்த்திருக்கேன். 6 மாசத்துல இருந்து 1 வருசம் வரை ஜெயில்ல தண்டனை வாங்குன கேஸ் தான் அதிகம். எத்தனை நாள் இருந்தாலும், நான் தனியா தான் இருப்பேன். எந்த குரூப்லயும் சேர மாட்டேன். அப்படி சேர்ந்திருந்தா நீங்க சொல்றது சரி.

கேள்வி:

புலி வாலை தொட்டுட்டோமேனு எப்போ புரிஞ்சது? 

வரிச்சூர் செல்வம்:

எவ்வளவு வேதனை… யப்பா… சொல்லவே முடியாது. கோடீஸ்வரன் வாழ்க்கை வாழ்றவன் நான். ஆனால் ஜட்டியோட போலீஸ் ஸ்டேஷன்ல படுத்திருக்கேன். ஸ்டெஷன்ல தெரிஞ்ச ஆளுங்க தான் இருப்பாங்க, ‛செல்வம்… ஆபிசர் வர்றாரு.. பேண்ட் கழட்டிரு.. கத்துவாருன்னு…’னு சொல்லுவாங்க. அசிங்கமா இருக்கும். என் வீட்டில ஒரு கொசு அடிச்சா அவங்களுக்கு 10 ரூபாய் தருவேன். ஆனால், மதுரை அண்ணா நகர் போலீஸ் ஸ்டேஷன்ல கையையும், காலையும் கட்டி படுக்க வெச்சிட்டுங்க. ஒரு லட்சம் கொசு கடுச்சுச்சு.எதுக்குடா இதெல்லாம் அனுபவிக்கனும்னு தோணும். அதெல்லாம் பெரிய பாடம்.

கேள்வி:

பொதுவா உங்களை மாதிரி இருக்கிறவங்களுக்கு நிறைய அரசியல் நெருக்கம் கிடைக்கும்னு சொல்லுவாங்களே…? 

வரிச்சூர் செல்வம்:

என்னோட அப்பா ஒரு கட்சியோட அனுதாபி. அவரை முதன் முதலில் வெட்டும் போது அதில் அரசியல் இருந்துச்சு. அதனாலயே எனக்கு எந்த அரசியலும் சின்ன வயசுல இருந்து பிடிக்காது. ஆனால் பாக்குறவங்க சொல்லுவாங்க, ‛நான் அவருக்கு பழக்கம், இவருக்கு பழக்கம்னு,’. ஆனால் உண்மையை சொல்றேன், எனக்கு யாருமே பழக்கம் இல்ல. என்னோட பெயரில் தான் நான் வாழ்ந்திருக்கேன். 

 ABP Nadu Exclusive:  ‛சேஸிங்… ரன்னிங்… எஸ்கேப்…’ தனது  இன்னும் பல  ‛க்ரைம்’ காலங்களை பகிரும் ‛வரிச்சூர்’ செல்வம்!

கேள்வி:

அப்புறம் எப்படி, இவ்வளவு நகை, லக்ஸரி கார்…? 

வரிச்சூர் செல்வம்:

இதெல்லாம் இப்போ சேர்த்த சொத்து இல்ல. மதுரை மதிச்சியத்தில் அப்பவே எங்களுக்கு 30 வீடு இருந்துச்சு. எங்கப்பா பெரிய வட்டிக்காரர். சின்ன வயசிலயே நாங்க பணக்காரங்க தான். படையப்பால வருமே றெக்கை வெச்ச கார், 1991ல் நான் அதை வெச்சிருந்தேன். அப்பவே அது ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய். எனக்கு வசதி இருந்ததால் தான் , பணத்துக்கு இவன் போகமாட்டான்னு போலீஸ் அப்பவே என்னை கண்டுக்க மாட்டாங்க. 1993ல் பென்ஸ், பிஎம்டபில்யூ கார் எல்லாம் வெச்சிருந்தேன். நகை இன்னைக்கு நேத்து போடலே, 30 வருசமா போடுறேன். ஆனால் இதெல்லாம் ஒரு தோரணையா தான் இருக்கு.ஒரு இடத்துல போய் இறங்கும் போது, பேசுறாங்கல்ல. அது எனக்கு பிடிச்சிருக்கு,

கேள்வி:

திருந்த நினைப்பவர்களுக்கு போலீஸ் இடையூறு இருக்கா? 

வரிச்சூர் செல்வம்:

இப்போ இருக்கிற போலீஸ் மாறிட்டாங்க. இப்போ இருக்கிறவங்க லிஸ்ட் எடுக்குறாங்க. கேஸ் இல்லைனா விட்டுறாங்க. முன்னாடி அப்படி இருக்காது. ஒரு ஸ்டேஷன்ல ஒரு ஏட்டு இருந்தாருன்னா, ‛அய்யா… கேஸ் இல்லை… அவன் மேல போடுங்கனு,’ போட்டு விட்ருவாங்க. இப்போ இருக்கிற போலீஸ் எல்லாரும் படிச்சுட்டு வந்துட்டாங்க. அவங்க இந்த மாதிரி கேஸ் போடுறது இல்ல. பிரச்னையும் பெருசா இல்ல.

கேள்வி:

இப்பவும் போலீஸ் தேடி வர்றாங்களா…?

வரிச்சூர் செல்வம்:

15 வருசத்துக்கு முன்னாடி போலீஸ் அடிக்கடி வருவாங்க.  இப்போ அந்த மாதிரி யாரும் வர்றதில்லை. முன்னாடி நிறையா அந்த தொல்லை இருந்தது உண்மை தான்.

 ABP Nadu Exclusive:  ‛சேஸிங்… ரன்னிங்… எஸ்கேப்…’ தனது  இன்னும் பல  ‛க்ரைம்’ காலங்களை பகிரும் ‛வரிச்சூர்’ செல்வம்!

 கேள்வி:

ஆனாலும் இன்னும் வரிச்சூர் செல்வம்னு போலீஸ் ஸ்டேஷனில் உச்சரிக்கப்படுதே?

வரிச்சூர் செல்வம்:

கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி, அப்போ எல்லாம் குதூகலமா இருக்கும். போலீஸ் வர, நான் ஓட; அது ஒரு மாய உலகம். எப்படின்னே தெரியாமல் ஒரு 10 வருசம் ஓடிடுச்சு. அப்புறம் தான் அது அசிங்கம்னு தெரிஞ்சது. அப்புறம் தேடுறாங்கனு தெரிஞ்சா, நானே போலீஸ் ஸ்டேஷன் போய், ‛சார்… தேடுனீங்களாமேனு..’ போய்டுவேன். இன்னைக்கு கூட காலையில நிலக்கோட்டை டிஎஸ்பி முருகன் சார் பேசுனாரு. ‛யாரையோ பிடிச்சிருக்காங்க… என் பெயரை சொல்லிருக்காங்க. 10 நாளா நான் வீட்டை விட்டு வெளியே போகல. ஆனால் என் பெயர் மிஸ் யூஸ் ஆகுது. இப்படி இழுத்துவிட்டு தான் நான் இந்த நிலைமையில் உட்கார்ந்திருக்கேன். 

கேள்வி

இப்போ வர்ற ரவுடிகளை பத்தி என்ன நினைக்கிறீங்க?

வரிச்சூர் செல்வம்:

முன்னாடியேல்லாம் ஒரு சம்பவம் நடந்தா, அது அவன் தான்னு கரைக்டா சொல்லுவாங்க. அப்படி தான் தனித்தன்மை இருந்துச்சு. இப்போ… கஞ்சா, பொண்ணுங்க மோகத்துல கத்தியை தூக்குறாங்க. அதுலயும் சின்ன சின்ன பசங்க. கஞ்சா, மாத்திரைனு சீரழியுறானுங்க. எங்க காலத்துல இருந்தான் பாருங்க, அவன் தான் உண்மையான ரவுடி. ஒத்தைக்கு ஒத்தை மோதுவானுங்க. இன்னைக்கு நாலு பேர் இல்லாமல் வெளியே போக மாட்றானுங்க. குவாட்டருக்கு, டீ க்கு கொலை பண்றானுங்க. சினிமா தான் எல்லாத்தையும் கெடுத்துருச்சு. கூலிப்படை கூலிப்படைனு சொல்லி, இன்னைக்கு வீட்டுக்கு நாலு ரவுடி இருக்கான். பேருக்கும், பெருமைக்கும் கொலை பண்றானுங்க, மதுரையே கூலிப்படையாயிடுச்சு. எல்லாத்துக்கும் காரணம் சினிமா தான்.

கேள்வி:

யராவது கூலிப்படை உதவிக்கு உங்களை தேடி வர்றாங்களா? 

வரிச்சூர் செல்வம்:

அந்த மாதிரி யாரும் என்னிடம் வந்ததில்ல. வீடு முழுக்க கேமரா வெச்சிருக்கேன். நல்லது, கேட்டதுனா உடனே ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்துடுவேன். எனக்கு கஞ்சா, சிகரெட் பழக்கம் இல்ல. அதனால் இந்த மாதிரி பிரச்னை இருந்ததில்லை.

 ABP Nadu Exclusive:  ‛சேஸிங்… ரன்னிங்… எஸ்கேப்…’ தனது  இன்னும் பல  ‛க்ரைம்’ காலங்களை பகிரும் ‛வரிச்சூர்’ செல்வம்!

கேள்வி:

ரவுடிசம் ஒரு தொழிலா மாறிட்டு இருக்கா?

வரிச்சூர் செல்வம்: 

அது எத்தனை நாளைக்கு வரும். 3 மாசம் ரவுடியா இருக்கான். நாலாவது மாசம் ஓலை பாய்ல கெடக்குறான். நிரந்தரமில்லாதவன் ரவுடினு சொல்றது அர்த்தம் இல்ல. பேரு, புகழுக்கு கொலை பண்றாங்க. அது வீரம் இல்லைன்னு அவங்களுக்கு புரியனும். அதெல்லாம் நீடிக்க முடியாது.

கேள்வி:

ரவுடிகள் திருந்த வாய்ப்பே இல்லையா?

வரிச்சூர் செல்வம்:

இந்த கொரோனா காலகட்டத்தில நீங்க எல்லாரும் வெளிய இருக்கிறவனை பத்தி நினைக்கிறீங்க… நான் உள்ளே இருக்கிறவனை பத்தி நினைக்கிறேன். இன்னைக்கு ஜெயிலில் இருப்பவனுக்கு பொண்டாட்டி, புள்ளைய பத்தி தெரியாது. அவனால எப்படி உள்ளே இருக்க முடியும்? பெயில் கிடைக்காது, எதுவும் கிடைக்காது. மனைவி, குழந்தைகளை பார்க்க முடியாமல் வாழ்றது ஒரு வாழ்க்கையா? இத்தனை நாள் கட்டி காப்பாத்துனதை வெச்சு என்ன செய்யுறது. திருந்தாதவனையும் கொரானா திருத்தும். இதுல திருந்தாதவன் எப்பவும் திருந்த முடியாது, என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!
ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!
எனக்கு தெரியாது; சி.எம்.தான் முடிவெடுக்கனும்! - பொங்கல் பரிசுத் தொகை குறித்து துணை முதலமைச்சர் பதில்! 
எனக்கு தெரியாது; சி.எம்.தான் முடிவெடுக்கனும்! - பொங்கல் பரிசுத் தொகை குறித்து துணை முதலமைச்சர் பதில்! 
TN Assembly Session LIVE: தொடங்கியது சட்டப்பேரவை - யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக தனித்தீர்மானம்!
TN Assembly Session LIVE: தொடங்கியது சட்டப்பேரவை - யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக தனித்தீர்மானம்!
TN birth Rate: சரியும் குழந்தை பிறப்பு விகிதம், தமிழக அரசே காரணம்? ஸ்ரீதர் வேம்புவின் தீர்வுகள், உண்மையா? சாத்தியமா?
TN birth Rate: சரியும் குழந்தை பிறப்பு விகிதம், தமிழக அரசே காரணம்? ஸ்ரீதர் வேம்புவின் தீர்வுகள், உண்மையா? சாத்தியமா?
Embed widget