Crime: தலைக்கு ஏறிய போதை! கேரள போலீசின் விரலைக் கடித்த தமிழ்நாட்டு இளைஞர்!
ஆலப்புழாவில் குடிபோதையில் கைது செய்யப்படுவதை எதிர்த்து, அம்மாநில போலீஸ் அதிகாரியின் விரலை கடித்த தமிழக வாலிபர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரியைச் சேர்ந்த விஜி (38) என்பவர் செவ்வாய்க்கிழமை இரவு ஆலப்புழாவில் உள்ள கேஎஸ்ஆர்டிசி டிப்போவில் மது போதையில் அலப்பறையில் ஈடுப்பட்டுள்ளார். இவர் அங்கு வந்த சிறியவர்கள், பெரியவர்கள் மற்றும் பெண்கள் உட்பட அங்கு வந்த பயணிகள் அனைவரிடமும் ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதனால் பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்பட்டுள்ளது.
மதுபோதையில் தகராறு:
தொடக்கத்தில் அங்கிருந்தவர்கள் அவரை எச்சரித்துள்ளனர். ஆனால் யாரேனும் எச்சரித்தால் சிறுது நேரம் மட்டும் அமைதியாக இருந்துவிட்டு மீண்டும் பின்னர் ரகளையில் ஈடுபட்டு வந்தார் விஜி. இந்நிலையில் அங்கிருந்த பொதுமக்களில் சிலர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவே, உடனே சம்பவ இடத்திற்கு விரைந்தனர் கேரள போலீசார்.
சம்பவ இடத்துக்கு வந்த கேரள போலீசார் விஜிவை கட்டுப்படுத்த முயற்சித்துள்ளனர். ஆனால் தொடர்ந்து அட்ராசிட்டியில் ஈடுபட்டு வந்த விஜியை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முடிவு செய்து அவரை போலீசாரின் வாகனத்தில் ஏற்ற முயற்சி செய்தனர்.
ஆனால், போலீசார் தன்னை வாகனத்தில் ஏற்ற முயன்றதற்கு விஜி ஒத்துழைக்கவில்லை. தெற்கு காவல் நிலைய கேரள போலீஸ் அதிகாரியான ஹரி என்பவர், மது போதையில் ரகளையில் ஈடுபட்டு வந்த விஜியை போலீஸ் ஜீப்பில் ஏற்ற முயன்றபோது, விஜி திடீரென போலீசாரின் வலது கை விரலில் கடித்துள்ளார். விரலை கடித்து விட்டு தப்பிக்க முயற்சி செய்துள்ளார். தப்பிக்க முயற்சி செய்த விஜியை உடன் இருந்த மற்ற போலீஸ்காரர்களான சந்திரபாபு, சாலிமோன் (எஸ்ஐ) மற்றும் அனுராக் ஆகியோர் மடக்கிப் பிடித்து காவல்துறை வாகனத்தில் குற்றம் சாட்டப்பட்டவரை வலுக்கட்டாயமாக அடக்கி சிறையில் அடைத்தனர்.
இஸ்ரேல் நாட்டுப் பெண்ணை கொலை செய்து தற்கொலைக்கு முயன்ற கேரள வாலிபர் கைது
கேரளாவின் கொல்லத்தில் உள்ள முகத்தலாவில் 35 வயது இஸ்ரேலிய பெண் வியாழக்கிழமை மாலை ஒரு வீட்டிற்குள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். இறந்த இஸ்ரேலியப் பெண்ணை அப்பகுதி மக்கள் ராதா என்று அழைத்து வந்துள்ளனர். ஆனால் அவரது பெயர் ஸ்வதா என விசாரணையில் தெரியவந்துள்ளது.
போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி, அவரது நண்பரும் யோகா மாஸ்டருமான கிருஷ்ண சந்திரன் அவரைத் தாக்கி தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. தற்போது அவர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கிருஷ்ண சந்திரனின் உறவினர் வீட்டில் ஸ்வதா வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளார். வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் கிருஷ்ண சந்திரன் ஸ்வதாவை தாக்கியதாக அவரிடம் விசாரணை நடத்திய காவல்துறை தெரிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட யோகா மாஸ்டர் இதற்கு முன்னர் உத்தரகாண்ட்டில் அதிக காலம் இருந்துள்ளார் எனவும் கூறப்படுகின்றது.