மேலும் அறிய

’கொலை மாவட்டமாக மாறும் திண்டுக்கல்’ - தொடர் குற்றங்களுக்கு பூட்டுப்போடுமா? போலீஸ்..!

’’கடந்த 5 நாட்களில் திண்டுக்கல்லில் 3 கொலை மற்றும் கொலை முயற்சி சம்பவங்கள் நடந்துள்ளதால் பரபரப்பு’’

திண்டுக்கல் சந்துக்கடை பகுதியைச் சோந்தவா் மு. மீரான்பாபு (35). திமுக வடக்கு பகுதி இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ளாா். அதிமுக பிரமுகரான மோகன்ராஜ் (38) என்பவருக்கும், மீரான்பாபு தரப்பினருக்கும் இடையே அரசியல் ரீதியாக மோதல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், திண்டுக்கல் தெற்கு ரத வீதியில் சென்று கொண்டிருந்த மீரான்பாபு மற்றும் திமுக பிரமுகர் விஜயராஜ் ஆகிய இருவரையும், மோகன்ராஜ் உள்ளிட்ட 4 பேர் புதன்கிழமை வெட்டிவிட்டு தப்பியோடி விட்டனா். இதில் காயமடைந்த மீரான்பாபு மற்றும் விஜயராஜ் ஆகிய இருவரும் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

’கொலை மாவட்டமாக மாறும் திண்டுக்கல்’ - தொடர் குற்றங்களுக்கு பூட்டுப்போடுமா? போலீஸ்..!

 பட்டப்பகலில் நடந்த இந்த கொலை வெறி தாக்குதல் சம்பவம் குறித்து நகர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த தனிப்படை போலீசார் அதில் பதிவான காட்சிகளை கொண்டு திண்டுக்கல் பெரியகடைவீதி பகவதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த நாகராஜ் (29), அதே பகுதியைச் சேர்ந்த சாதிக்பாட்சா (48) ஆகியோரை கைது செய்தனர்.

’கொலை மாவட்டமாக மாறும் திண்டுக்கல்’ - தொடர் குற்றங்களுக்கு பூட்டுப்போடுமா? போலீஸ்..!

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை போலிசார் தேடி வந்தனர். இந்த நிலையில் திண்டுக்கல் பெரியகடைவீதியை சேர்ந்த மாநகராட்சி 21-வது வார்டு முன்னாள் பெண் கவுன்சிலரின் மகன் மோகன்ராஜ் (31), திமுக பிரமுகர்கள் கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய குற்றவாளி என்று கூறி சேலம் கோர்ட்டில் சரண் அடைந்தார். இதையடுத்து அவருடைய தந்தை விஜயகுமாரை (65) பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலை முயற்சி வழக்கில் அவருக்கு தொடர்பு இருப்பதை ஒப்புக்கொண்டார். இதனைதொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த அதே பகுதியைச் சேர்ந்த சஞ்சய் குமார் (23), சிவசூரியன் (23), சுகுமார் (33), முகமது ஆரிப் (23), ஆகியோர் பதுங்கியிருக்கும் இடம் குறித்தும் போலீசாரிடம் விஜயகுமார் தெரிவித்தார். அதனடிப்படையில் சஞ்சய்குமார் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் இரண்டாவது நாளாக

’கொலை மாவட்டமாக மாறும் திண்டுக்கல்’ - தொடர் குற்றங்களுக்கு பூட்டுப்போடுமா? போலீஸ்..!

திண்டுக்கல் பேகம்பூா் பகுதியைச் சோந்தவா் முகமது இப்ராஹீம் (27). அதே பகுதியைச் சோந்தவா்கள் லத்தீப் மவுலானா மற்றும் சேக் அப்துல்லா. இவா்களுக்கு இடையே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் தெற்கு காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.  திண்டுக்கல் அடுத்துள்ள குட்டியப்பட்டி அருகே வியாழக்கிழமை சென்று கொண்டிருந்த முகமது இப்ராஹீமை வெட்டி விட்டு தப்பியோடி விட்டனா். இதில் பலத்த காயமடைந்த முகமது இப்ராஹீம், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேலும் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதனிடையே தப்பி ஓடிய லத்தீப் மவுலானா மற்றும் ஷேக் அப்துல்லா ஆகியோரை திண்டுக்கல் தாலுகா போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முகமது இப்ராஹிம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து லத்தீப் மவுலானா மற்றும் சேக் அப்துல்லா ஆகியோர் மீதான கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த தொடர் சம்பவம் அதிர்ச்சி மறைவதற்குள் மற்றொரு சம்பவமும்  மூன்றாவது நாளாக சின்னாளபட்டியில் அரங்கேறியுள்ளது. 

’கொலை மாவட்டமாக மாறும் திண்டுக்கல்’ - தொடர் குற்றங்களுக்கு பூட்டுப்போடுமா? போலீஸ்..!

திண்டுக்கல் அடுத்துள்ள ஏ. வெள்ளோடு பகுதியைச் சோந்தவா் ஜெரால்டு (45). இவா், இறைச்சி கடைகளுக்கு கூலித் தொழிலாளியாக வேலைக்குச் சென்று வந்தாா். இந்நிலையில், செட்டியப்பட்டி ரயில்வே கடவுப் பாதை அருகே பலத்த காயங்களுடன் சனிக்கிழமை காலை ஜெரால்டு சடலமாக கிடந்தாா். இதுகுறித்து அந்த வழியாகச் சென்றவா்கள் அம்பாத்துரை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் அங்கு சென்ற போலீஸாா், ஜெரால்டின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அவா் கொலை செய்யப்பட்டு ரயில்வே தண்டவாளத்தின் அருகே வீசப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

’கொலை மாவட்டமாக மாறும் திண்டுக்கல்’ - தொடர் குற்றங்களுக்கு பூட்டுப்போடுமா? போலீஸ்..!

கொலைக்களமாகும் திண்டுக்கல் மாவட்டம் 

திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து கொலைகளும், கொலை முயற்சிகளும் நடந்து வருவது பொது மக்களை பீதி அடையச் செய்துள்ளது. . திண்டுக்கல் புதிய எஸ்.பி. பதவியேற்றவுடன் மாவட்டத்தில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என ஒரே மாதத்தில் 24 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்தார். ஆனாலும் மாவட்டத்தில் தொடர் கொலைகளும், கொலை முயற்சிகளும் தொடர்ந்து நடப்பது போலீசாருக்கு கடும் நெருக்கடியை கொடுத்துள்ளது.

மேலும் படிக்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,

திண்டுக்கல் மாவட்டத்தில் , தொடர்ந்து கொலை , கொள்ளை , கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்ட 24 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர் .

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மு.க.ஸ்டாலின் VS உதயநிதி! இளைஞரணிச் செயலாளர் முதல் துணை முதல்வர் வரை - ஓர் அலசல்
மு.க.ஸ்டாலின் VS உதயநிதி! இளைஞரணிச் செயலாளர் முதல் துணை முதல்வர் வரை - ஓர் அலசல்
India vs Bangladesh:இந்தியா - வங்கதேசம் டி20! எங்கே? எப்படி பார்ப்பது? முழு விவரம் உள்ளே
India vs Bangladesh:இந்தியா - வங்கதேசம் டி20! எங்கே? எப்படி பார்ப்பது? முழு விவரம் உள்ளே
Tamilnadu Cabinet: தமிழக அமைச்சரவை மாற்றம் - எந்த அமைச்சருக்கு என்ன இலாகா? உதயநிதிக்காக ஸ்டாலின் இழந்த துறை என்ன?
Tamilnadu Cabinet: தமிழக அமைச்சரவை மாற்றம் - எந்த அமைச்சருக்கு என்ன இலாகா? உதயநிதிக்காக ஸ்டாலின் இழந்த துறை என்ன?
Watch Video:
Watch Video:"தல போல வருமா" - பண்ணை வீட்டில் ஜாலி மூட்! தோனியின் வைரல் வீடியோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TN Cabinet Shuffle | மீண்டும் அரியணையில் செ.பாலாஜி!புதிதாக சீனுக்கு வந்த 3 பேர்! யாருக்கு எந்த துறை?CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மு.க.ஸ்டாலின் VS உதயநிதி! இளைஞரணிச் செயலாளர் முதல் துணை முதல்வர் வரை - ஓர் அலசல்
மு.க.ஸ்டாலின் VS உதயநிதி! இளைஞரணிச் செயலாளர் முதல் துணை முதல்வர் வரை - ஓர் அலசல்
India vs Bangladesh:இந்தியா - வங்கதேசம் டி20! எங்கே? எப்படி பார்ப்பது? முழு விவரம் உள்ளே
India vs Bangladesh:இந்தியா - வங்கதேசம் டி20! எங்கே? எப்படி பார்ப்பது? முழு விவரம் உள்ளே
Tamilnadu Cabinet: தமிழக அமைச்சரவை மாற்றம் - எந்த அமைச்சருக்கு என்ன இலாகா? உதயநிதிக்காக ஸ்டாலின் இழந்த துறை என்ன?
Tamilnadu Cabinet: தமிழக அமைச்சரவை மாற்றம் - எந்த அமைச்சருக்கு என்ன இலாகா? உதயநிதிக்காக ஸ்டாலின் இழந்த துறை என்ன?
Watch Video:
Watch Video:"தல போல வருமா" - பண்ணை வீட்டில் ஜாலி மூட்! தோனியின் வைரல் வீடியோ
TN New Ministers: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு! மீண்டும் அரியணையில் செந்தில் பாலாஜி, நாசர்!
TN New Ministers: தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு! மீண்டும் அரியணையில் செந்தில் பாலாஜி, நாசர்!
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Rasi Palan Today, Sept 29: சிம்மம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது, கன்னிக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை:  உங்கள் ராசிக்கான பலன்
RasiPalan: சிம்மம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது, கன்னிக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை: உங்கள் ராசிக்கான பலன்
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
Embed widget