மேலும் அறிய
Advertisement
தர்மபுரி: திரைப்பட பாணியில் அடித்துக்கொலை... சக தொழிலாளரை கொன்றவர் கைது!
பெங்களூர் சென்ற தனிப்படை காவல் துறையினர் ஆதித்ய சவுத்ரியை கைது செய்து அழைத்து வந்தனர். இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தருமபுரி அருகே கிரைணட் கம்பெனியில் பணியாற்றின சக தொழிலாளியை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த மேற்கு வங்க மாநில தொழிலாளியை காவல் துறையினர் கைது செய்தனர்.
தருமபுரி அடுத்த மாரவாடி பகுதியில் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியைச் சேர்ந்த சுதர்சனன்(34) என்பவர் கிரானைட் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் ஆதித்யா சவுத்திரி, பாபாய்(எ) சங்கர் பசுன்யா(25) ஆகிய 2 மேற்கு வங்க மாநில தொழிலாளர்கள் உட்பட பலர் வேலை செய்து வந்தனர்.
இதில் ஆதித்யா சவுத்திரி மற்றும் பாபாய் இருவரும் ஒரே அறையில் தங்கி வேலை செய்து வந்தனர். இந்நிலையில், கடந்த 6.3.22 அன்று இரவு மது அருந்தியதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு பணியாற்றி தொழிலாளர்கள் இருவரையும் சமாதானம் செய்துள்ளனர். இதனையடுத்து இரவு, இருவரும் அறையில் உறங்கச் சென்றுள்ளனர். அப்பொழுது மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது ஆத்திரமடைந்த ஆதித்யா சவுத்திரி, சுத்தியலால் பாபாயை அடித்து கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளார்.
இதையடுத்து தொழிலாளர்கள் கொடுத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மதிகோன்பாளையம் காவல் துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். இதனையடுத்து ஆதித்யா சவுத்திரி குறித்து விசாரணை நடத்தினர்.தொடர்ந்து அவரது செல்போன் சிக்னலை வைத்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அப்பொழுது பெங்களூரில் உள்ள ஒரு கல் குவாரியில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து பெங்களூர் சென்ற தனிப்படை காவல் துறையினர் ஆதித்ய சவுத்ரியை கைது செய்து அழைத்து வந்தனர். இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
பெட்ரோல், டீசல் கலால் வரி குறைப்பு.. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட 5 முக்கிய அறிவிப்புகள்..!#Petrol #Diesel #FMNirmalaSitharaman https://t.co/k2LOnN36Sc
— ABP Nadu (@abpnadu) May 21, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
உலகம்
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion