முன் சீட்டுக்கு தகராறு... தந்தையை துப்பாக்கியால் சுட்டு கொன்ற மகன்! தலைநகரில் அதிர்ச்சி
வடக்கு டெல்லியின் திமார்பூர் பகுதியில் 26 வயது மகன் தனது தந்தையை முன் சீட்டை வழங்க மறுத்ததற்காக துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவமானது அரங்கேறியுள்ளது.

தனக்கு முன் இருக்கை மறுக்கப்பட்டதால் தந்தையை மகன் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
தந்தை கொலை:
வடக்கு டெல்லியின் திமார்பூர் பகுதியில் 26 வயது மகன் தனது தந்தையை முன் சீட்டை வழங்க மறுத்ததற்காக துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவமானது அரங்கேறியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தெரிவித்ததாவது, குற்றஞ்செய்தவரின் பெயர் தீபக் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் சம்பவத்தில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட தந்தையின் உரிமம் பெற்ற துப்பாக்கி மற்றும் 11 காட்ரிஜில் இருந்த தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
சம்பவம் நடந்து எப்படி?
இந்த சம்பவம் வியாழக்கிழமை(26.06.25) மாலை 7.30 மணி அளவில் திமார் பூர் பகுதியில் உள்ள எம்.எஸ் பிளாக்கில் நடைபெற்றது. அந்த பகுதியில் போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது துப்பாக்கி சத்தம் கேட்டதையடுத்து விரைந்து சென்றுள்ளனர்.
அங்கு ஒரு நபர் ரத்தக் வெள்ளத்தில் கிடந்த நிலையில், பொதுமக்கள் கொலைசெய்த தீபக்கிடம் இருந்த துப்பாக்கியை பறிக்க முயற்சித்துள்ளனர்.
முன்னாள் சிஐஎஸ்எப் வீரர்:
அப்போது அவர் 60 வயதான சுரேந்திர சிங் என அடையாளம் காணப்பட்டார். முன்னாள் சிஐஎஸ்எப் (CISF) துணை ஆய்வாளர் என கூறப்படுகிறது. அவரை உடனடியாக அருகிலுள்ள ஹெச்.ஆர்.எச் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
முதற்கட்ட விசாரணையில் தெரியவந்த தகவலின்படி, சுரேந்திர சிங் சிஐஎஸ்எப்பில் இருந்து ஆறு மாதங்களுக்கு முன் ஓய்வுபெற்றுள்ளார். அதன் பின்னர் குடும்பத்தினர் தங்கள் சொந்த ஊரான உத்தரகண்ட் மாநிலத்திற்கு மாறி செல்லத் திட்டமிட்டுள்ளனர்.
இருக்கைக்கு தகராறு:
இதற்காக குடும்பத்தினர் ஒரு டெம்போ வாடகைக்கு எடுத்து, வீட்டு பொருட்களை ஏற்றி கொண்டிருந்தனர். அப்போது தந்தையும், மகனும் முன் சீட்டில் யார் அமர வேண்டும் என்ற விவகாரத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது.
சுரேந்திர சிங், ஏற்கனவே பொருட்கள் ஏற்றப்பட்டதால் தாமதம் ஏற்படக்கூடாது என்பதால், தாமாக முன் சீட்டில் அமர விரும்பியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தீபக் தந்தையின் உரிமம் பெற்ற துப்பாக்கியை எடுத்துத் தந்தையை நோக்கி சுட்டுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக தீபக் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






















