Crime : ப்ரேக்-அப் செய்ததால் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற இளைஞன்.. திட்டமிட்ட பயங்கரம்.. நடந்தது என்ன?
டெல்லியில் ப்ரேக் அப் செய்த காதலியை துப்பாக்கியால் காதலன் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் அமைந்துள்ளது பாரத்நகர் பகுதி. இந்த பகுதியில் கடந்த 28-ந் தேதி மதியம் 1.10 மணியளவில் போலீசாருக்கு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர்கள் போலீசாரிடம் பாரத்நகர் பகுதியில் மர்மமான முறையில் யாரோ உயிரிழந்திருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பெண் ஒருவர் தோட்டாக்கள் பாய்ந்த நிலையில் காயம்பட்ட நிலையில் உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளார். உடனடியாக, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அந்த பெண் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்ட்டார். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, போலீசார் அந்த பெண்ணின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். போலீசார் விசாரணையில் உயிரிழந்த பெண்ணின் பெயர் சல்மா என்றும், அவருக்கு வயது 45 என்றும் தெரியவந்தது. போலீசார் விசாரணையில் சல்மா உயிரிழந்த இடத்தில் மூன்று தோட்டாக்களை பறிமுதல் செய்தனர்.
சல்மா உயிரிழந்த இடத்தில் எந்தவொரு சி.சி.டி.வி. காட்சிகளும் இல்லாத காரணத்தால், போலீசார் மிகவும் தடுமாறியுள்ளனர். பின்னர், போலீசார் விசாரணையில் சல்மாவும், ரோகித்குப்தா என்ற சோனு (அவருக்கு வயது 29) என்ற இளைஞரை காதலித்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது.
சல்மாவும், சோனுவும் காதலித்து வந்த நிலையில் சோனுவுடன் பழகுவதை சல்மா நிறுத்தியுள்ளார். சல்மாவை தொடர்பு கொள்ள சோனு முயற்சித்தபோதும் அவருடன் பேசுவதை, சந்திப்பதை சல்மா தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது, சல்மா பேசாத காரணத்தால் சோனு மிகுந்த ஆத்திரம் கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது
இதனால், ஆத்திரமடைந்த சோனு சல்மாவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று சல்மாவை ரோகித்குப்தா துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில், படுகாயமடைந்த சல்மா ரத்த வெள்ளத்தில் அதே இடத்திலே சரிந்துள்ளார்.
சல்மாவை கொலை செய்த சோனு போலீசாரிடம் இருந்து தப்பிக்க பல்வேறு ஹோட்டல்களில் தங்கி வந்துள்ளார். மேலும், கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கியை அருகில் இருந்த கால்வாயில் வீசி தப்பிச்சென்றுள்ளார். இதுவரை அந்த துப்பாக்கி கண்டறியப்படவில்லை. இந்த நிலையில், அவரை போலீசார் அவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். காதலை முறித்துக்கொண்ட வயதில் மூத்த காதலியை காதலனே துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க : Crime : பதைபதைக்க வைக்கும் கொடூரம்.. துப்பாக்கியால் சுடப்பட்டு தரதரவென இழுத்து செல்லப்பட்ட நாய்கள்.. நடந்தது என்ன?
மேலும் படிக்க : Crime: வேலை கிடைத்ததால் இப்படி செய்றேன்.. நேர்த்திக்கடனாக தற்கொலை செய்துகொண்ட வங்கி அதிகாரி..