குழந்தைகளுடன் வெளிநாட்டிற்கு பிரிந்து சென்ற மனைவி - கணவர் எடுத்த விபரீத முடிவு..!
அவரது மனைவி குழந்தைகளுடன் சுவிட்சர்லாந்திற்குச் சென்றதாகவும், சமூக வலைதளங்களில் அவரைத் தடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மனைவியுடனான உறவில் ஏற்பட்ட விரிசல் காரணமாக கணவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.
டெல்லி கிழக்கு உத்தம் நகரில் 41 வயதுடைய உமேஷ் தார் திரிவேதி என்பவர் தனது மனைவியுடனான உறவில் ஏற்பட்ட விரிசல் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் வியாழக்கிழமை தெரிவித்தனர். உமேஷ் தார் திரிவேதி தனது வீட்டின் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார் என்றும் கூறினர்.
மேலும் படிக்க: முந்தைய நாள் DP புகைப்படம்: மறுநாள் தற்கொலை: இளம் நடிகைக்கு நடந்தது என்ன?
அவர் எழுதிய நான்கு பக்க தற்கொலைக் கடிதத்தில், அவரது மனைவி குழந்தைகளுடன் சுவிட்சர்லாந்திற்குச் சென்றதாகவும், சமூக வலைதளங்களில் அவரைத் தடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
எவ்வளவு கூறியும் மனைவி திரும்ப வராததால், மனமுடைந்த அவர், கடந்த மே 30ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனைத்தொடர்ந்து, வியாழன் காலை பிந்தாபூர் காவல் நிலையத்திற்கு ஒரு அழைப்பு வந்ததாகவும், திரிவேதியின் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டதாகவும் காவல்துறை துணை ஆணையர் சங்கர் சவுத்ரி தெரிவித்தார்.
இறந்தவரின் குடும்ப உறுப்பினர்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: Crime : காதலில் இருந்து விலகி வேறொருவரை கரம்பிடிக்க முயற்சி.. இளைஞர் செய்த பயங்கரம்..
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்துகொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060).
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்