Delhi : சிறுநீர் தொட்டிக்குள் கிடந்த பணிப்பெண்! கேட்டாலே கண்கலங்கும் கொடுமை! டெல்லியில் நடந்த கொடூரம்!
வீட்டுப் பணிப்பெண்ணை அந்தத் தம்பதி கொடூரமாக தாக்கி, தலைமுடியை வெட்டி சிறுநீர் தொட்டியில் விட்டுச்சென்றுள்ளனர்.
தம்பதியால் கொடூரமாக தாக்கப்பட்ட வீட்டு பணிப்பெண் சிறுநீரில் கண்டெடுக்கப்பட்டார். இந்த கொடூர சம்பவம் தலைநகர் டெல்லியில் அரங்கேறியுள்ளது.
மனிதாபிமானம் இருக்கிறதா என்று சில நிகழ்வுகள் உங்களை கேள்விக் குள்ளாக்குகின்றன. மேலும் இதுபோன்ற ஒரு வழக்கு இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இருந்து பதிவாகியுள்ளது. மேற்கு டெல்லியின் ரஜோரி கார்டனில் வீட்டு பணிபுரிந்த 48 வயதுப் பெண்ணை அவரது முதலாளிகள் தாக்கி, அவரது தலைமுடியை வெட்டியதாக போலீஸார் கூறியுள்ளனர். இந்தச் சம்பவம் கடந்த வாரம் நடந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியைச் சேர்ந்த ரஜினி, டெல்லியில் வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணிபுரிந்து வந்தார். குற்றம் சாட்டப்பட்ட தம்பதியினர் அந்தப் பெண்ணுக்கு மாதம் 7,000 ரூபாய் சம்பளமாக கொடுத்து வந்தனர்.ஒரு ஏஜென்சியின் மூலம் ரஜினியை வீட்டுப்பணிக்கு அந்தத் தம்பதி பணியமர்த்தினர்.
இந்த நிலையில், வீட்டுப் பணிப்பெண்ணை அந்தத் தம்பதி கொடூரமாக தாக்கி, தலைமுடியை வெட்டி சிறுநீர் தொட்டியில் விட்டுச்சென்றுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை, ரஜினி உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறும் முதலாளிகளிடமிருந்து அழைப்பு வந்ததாகவும், அவர்கள் ரஜினியை தன் அலுவலகத்தில் இறக்கிவிட்டு சென்றதாகவும், பின்னர், அவர் சிறுநீரில் கிடந்ததைக் கண்டதாகவும் ஏஜென்சி உரிமையாளர் கூறினார். மேலும் அவர் கூறுகையில், ரஜினியால் அசைய முடியவில்லை. அவர்கள் அவளை அடித்துவிட்டார்கள். நான் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அங்கு தம்பதிகள் தன்னை தொடர்ந்து தாக்குவார்கள் என்று ரஜினி என்னிடம் கூறினார்” என்றும் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக அந்த தம்பதி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். போலீசார் மருத்துவமனைக்கு வந்து ரஜினியின் வாக்குமூலத்தை பதிவு செய்தனர். அதில் அவரது முதலாளி அபினீத் மற்றும் அவரது மனைவி தன்னைத் தாக்கி, தலைமுடியை வெட்டியதாக அவர் குற்றம் சாட்டினார்.
தானாக முன்வந்து காயப்படுத்துதல், தவறான காவலில் வைத்தல் மற்றும் தாக்குதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்ட தம்பதியினரைப் பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் போலீசார் கூறினர். ரஜினியின் கண்கள், முகம், கைகால்கள் மற்றும் வயிறு மற்றும் பிற உடல் பாகங்களில் காயங்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். கடந்த ஆண்டு செப்டம்பரில் அந்த பெண் தம்பதிக்கு வேலை செய்யத் தொடங்கினார் என்று போலீசார் தெரிவித்தனர்.
"இந்தத் தம்பதிகள் நீண்ட காலமாக ஏஜென்சியுடன் தொடர்பில் உள்ளனர். ரஜினிக்கு முன், அவர்கள் வேறொரு பெண்ணை வேலைக்கு அமர்த்தினர். ஆனால் அவர் திருடுவதாகக் கூறி, எலி விஷம் கலந்த உணவைக் கொடுத்ததாகக் கூறி பணிநீக்கம் செய்தனர்” என்று மற்றொரு அதிகாரி கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்