மேலும் அறிய

கடலூரில் பகீர்.. கள்ளக்காதலுக்காக கணவனை கொன்று வாழைமரத்துக்கு உரமாக்கிய மனைவி..

தனது கணவர் சண்டையிட்டு அடிக்கடி வெளியூர் சென்றபோது, அதேபகுதியை சேர்ந்த மோகன் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறினார்.

கள்ளக்காதலை தட்டிக்கேட்ட கணவரை கள்ளத்காதலனுடன் சேர்ந்து கொன்று வாழை தோப்பில் புதைத்த மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் கடலூரில் நடந்தேறியுள்ளது.

கடலூர் மாவட்டம் எஸ்.புதுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 47). விவசாயியான இவர், தனது அக்கா மகள் விஜயலட்சுமியை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். திருமணம் ஆகி 18 ஆண்டுகள் ஆகியும், மனைவியிடம் சண்டையிட்டு அடிக்கடி வெளியூர் சென்றுவிடுவாராம் ராஜசேகர்.

தம்பி அடிக்கடி கேட்டதால் உண்மையை கூறிய அக்கா

இப்படி அடிக்கடி ராஜசேகர் வெளியூர் சென்றுவிடுவதால், அவருக்கும் மனைவிக்கும் இடையேயான உறவு தூரமாகிவிட்டது. இந்த நிலையில், சண்டையிட்டு வெளியூர் சென்ற ராஜசேகர் 9 மாதங்கள் ஆகியும் வீட்டுக்கு திரும்பாமல் இருந்திருக்கிறார். மாமா குறித்து விஜயலஷ்மியின் தம்பி சிவக்குமார் கேட்டுள்ளார். அதற்கு விஜயலஷ்மி கூறிய பதிலால் அதிர்ச்சி அடைந்தார். தனது கணவரை கொலை செய்து வாழைத்தோப்பில் புதைத்துவிட்டதாக கூறினார். 

மேலும் படிக்க: Crime : லோன் ஆப்பில் கடன்வாங்கிய பெண்ணுக்கு மார்ஃபிங் செய்து பாலியல் தொந்தரவு.. குற்றவாளி சிக்கியது எப்படி?

விஜயலஷ்மி தனது கணவரை செய்தது குறித்து போலீசாருக்கு தெரியவர, சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸ் உயரதிகாரிகள் வாழைத்தோட்டத்தை சோதனை செய்தனர். அப்போது, விஜயலஷ்மியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. தனது கணவர் சண்டையிட்டு அடிக்கடி வெளியூர் சென்றபோது, அதேபகுதியை சேர்ந்த மோகன் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டதாகவும், இதனை கணவர் கண்டித்ததாகவும் கூறினார். மேலும், 9 மாதங்களுக்கு முன்பு இதுதொடர்பாக பிரச்னை ஏற்பட்டதாகவும், அப்போது தானும், மோகனும் சேர்ந்து தனது கணவர் ராஜசேகரை கொலை செய்து அவருக்கு சொந்தமான வாழைத்தோப்பில் சடலத்தை புதைத்ததாகவும், தனது தம்பி கணவர் குறித்து அடிக்கடி கேட்ட வந்த நிலையில் உண்மையை கூறிவிட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க: Watch Video: 'வருவார்.. அலேக்காக தக்காளி பெட்டியை தூக்குவார்' சேலத்தை அலறவைத்த தக்காளி திருடன்!

கள்ளக்காதலன் எஸ்கேப்

விஜயலஷ்மி கூறிய தகவலால் ராஜசேகர் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதனைத்தொடர்ந்து, ராஜசேகர் சகோதரர் நடுவீரப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விஜயலட்சுமியை கைது செய்தனர். இந்த விவகாரத்தில் முக்கியமானவரான கள்ளக்காதலன் மோகன் எஸ்கேப் ஆகிவிட்டார். அவரை போலீசார் தேடிவருகின்றனர்.  


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

தலைப்பு செய்திகள்

" ஜி.எஸ்.டி மோசடி வழக்கும்...கடத்தல் பிளானும் " டீக்கடையில் விரித்த வலை !! சிக்கிய கும்பல்
" என் கணவரை பிடிக்கல " வெளியூரில் ரூம் போட்டு திருமணம் மீறிய உறவு - சிக்கிய எலக்ட்ரிஷியன்
பட்டுக்கோட்டை ராஜா அக்‌ஷயா வழக்கு...சிறையில் இருந்து வந்து ராஜா உணர்ச்சிகரமாக வீடியோ
பட்டுக்கோட்டை ராஜா அக்‌ஷயா வழக்கு...சிறையில் இருந்து வந்து ராஜா உணர்ச்சிகரமாக வீடியோ
இயற்கையைச் சூறையாடிய விவகாரம்: மயிலாடுதுறையில் ரூ.49 லட்சம் அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை..
இயற்கையைச் சூறையாடிய விவகாரம்: மயிலாடுதுறையில் ரூ.49 லட்சம் அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை..

வீடியோ

Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi Injured: குண்டுக்கட்டாக அள்ளிய போலீசார்.. மூக்கில் வழிந்த ரத்தம்.! மனம் தளராத ராகுல்; போராட்டம் தொடரும் என அறிவிப்பு
குண்டுக்கட்டாக அள்ளிய போலீசார்.. மூக்கில் வழிந்த ரத்தம்.! மனம் தளராத ராகுல்; போராட்டம் தொடரும் என அறிவிப்பு
Rahul Gandhi Arrested: சமாதான முயற்சிகள் தோல்வி.! டெல்லி பிரதமர் இல்லம் முற்றுகை; இளைஞர்களுடன் போராடிய ராகுல், பிரியங்கா கைது
சமாதான முயற்சிகள் தோல்வி.! டெல்லி பிரதமர் இல்லம் முற்றுகை; இளைஞர்களுடன் போராடிய ராகுல், பிரியங்கா கைது
Tasmac cigarettes ban : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! இனி டாஸ்மாக் பார்களில் சிகரெட்டிற்கு தடை- வெளியானது புதிய கட்டுப்பாடுகள்
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! இனி டாஸ்மாக் பார்களில் சிகரெட்டிற்கு தடை- வெளியானது புதிய கட்டுப்பாடுகள்
Iran Starts Nuclear Program: தலைக்கு தில்ல பாத்தியா.! அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்கும் ஈரான்.? இஸ்ரேல் பரபரப்பு தகவல்
தலைக்கு தில்ல பாத்தியா.! அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்கும் ஈரான்.? இஸ்ரேல் பரபரப்பு தகவல்
Minister Rajmohan: பாடப்புத்தம் இனி படப்புத்தகம், குறையும் பை சுமை, கதைவழி கணிதம்: அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
Minister Rajmohan: பாடப்புத்தம் இனி படப்புத்தகம், குறையும் பை சுமை, கதைவழி கணிதம்: அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
Singer Arivu arrest : தலைமைச்செயலகத்திற்குள் சவுண்டு விட்ட பாடகர் அறிவு.! கூட்டி வரச் சொன்ன சிஎம் விஜய்- என்ன காரணம்.?
தலைமைச்செயலகத்திற்குள் சவுண்டு விட்ட பாடகர் அறிவு.! கூட்டி வரச் சொன்ன சிஎம் விஜய்- என்ன காரணம்.?
Galaxy S25 Ultra Price Crash: அடேங்கப்பா, ரூ.50,000-க்கு மேல தள்ளுபடியா.?! கேலக்ஸி எஸ்25 அல்ட்ராவிற்கு இதுவரை இல்லாத ஆஃபர்; விட்றாதீங்க
அடேங்கப்பா, ரூ.50,000-க்கு மேல தள்ளுபடியா.?! கேலக்ஸி எஸ்25 அல்ட்ராவிற்கு இதுவரை இல்லாத ஆஃபர்; விட்றாதீங்க
குறைந்த விலையில் சொகுசு! ரூ. 8.75 லட்சத்தில் சிட்ரோயன் பசால்ட் எடிஷன்- SUV புது அத்தியாயம்!
குறைந்த விலையில் சொகுசு! ரூ. 8.75 லட்சத்தில் சிட்ரோயன் பசால்ட் எடிஷன்- SUV புது அத்தியாயம்!
Embed widget