Crime : ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரபல நடிகை தற்கொலை.. வழக்கில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்.. என்ன நடக்குது?
டிவி நடிகை தற்கொலை செய்து கொண்டு பல அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
நடிகை தற்கொலை
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த தொலைக்காட்சி நடிகை துனிஷா சர்மா(21). துஷினா சர்மா சிறு வயதிலிருந்தே பாலிவுட் திரையுலகிற்கு அறிமுகமாகிவிட்டார். முதலில் குழந்தை நட்சத்திரமாக தனது பயணத்தை தொடங்கிய அவர் படிப்படியாக பிரபலமான நடிகையாக வலம்வரத் தொடங்கினார். சமீபத்தில் ’அலி பாபா தஸ்தான் இ காபூல்’ எனும் தொடரில் நடித்து வந்திருந்தார்.
இந்நிலையில் டிசம்பர் 24-ஆம் தேதி மும்பையில் உள்ள படப்பிடிப்பு தளத்தில் தனது அறைக்கு மேக்கப் போடுவதற்காக சென்றிருந்தார். அப்போது நீண்ட நேரம் ஆகியும் அவர் கதவை திறக்காததால், படப்பிடிப்பில் இருந்தவர்கள் கதவை உடைத்து பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கியவாறு இருந்தார். பின்னர், மருத்துவமனையில் அனுமதித்த அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் துனிஷா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
காதலன் கைது
இந்த விவகாரத்தில் சக நடிகரும் காதலனுமான ஷீசென் கானை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே, நடிகையின் தாயான வனிதாவிடம் நேற்று மீண்டும் விசாரணை செய்தனர். விசாரணையில் "தனது மகளை மதம் மாற்றம் செய்ய ஷீசன் கானின் குடும்பத்தினர் முயற்சித்ததாகவும், துனிஷா தற்கொலை செய்யவில்லை. கொலை செய்யப்பட்டுள்ளார்” என்றும் அதிர்ச்சி தகவலை முன்வைத்தார்.
தாய் பரபரப்பு குற்றச்சாட்டு
இதுகுறித்து நடிகையின் தாயார் போலீஸ் விசாரணையில், "தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த துனிஷாவின் உடலை மருத்துவமனைக்கு நடிகர் ஷூசன் எடுத்துச் சென்றது சந்தேகமாக உள்ளது. அந்த 15 நிமிடங்களில் என்ன நடந்தது என்பது விசாரிக்கப்பட வேண்டும். இருவரும் காதலித்து வந்த நிலையில், ஷீசேன் கானின் போனில் வேறு சில பெண்களுடன் தொடர்பில் இருப்பதைக் கண்டு, அவரிடம் துனிஷா கேட்டுள்ளார். அதற்கு பதிலளிக்க மறுத்து ஷீசன் கான், துனிஷாtவை தாக்கியுள்ளார். துனிஷாவை மதமாற்றம் செய்ய முயற்சித்துள்ளார்” எனவும் கூறினார்.
இதில் ஷீசன் கானின் தாயாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தொடர்பு உள்ளது. எனவே அவர்களை இந்த வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்க வேண்டும்" என்று தெரிவித்தார். இந்நிலையில் நேற்று ஒன்றிய அமைச்சர் ராம்தாஸ் அதாவ்லே, துனிஷா சர்மாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, இதில் தொடர்புடையோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி தெரிவித்தார்.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)