Crime : பட்டப்பகலில் கொடூரம்...நடுரோட்டில் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை...என்ன நடந்தது?
மதுரையில் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் அருள்தாஸ்புரத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவருடைய மகன் சரவணக்குமார்(33). ஓட்டுநரான இவர் தற்போது கோவையில் கண்ணாடி கடையில் வேலை பார்த்து வந்தார். விடுமுறை எடுத்துவிட்டு நேற்று முன்தினம் மதுரை வந்தார். இந்தநியையில் நேற்று மதியம் அவர் தத்தனேரி பகுதியில் இருந்து மோட்டார் சைக்களில் வைகை வடகரை ரோட்டில் சென்றார்.
அப்போது, பின்னால் காரில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் அவரின் மோட்டார் சைக்கிளை இடித்து கீழே தள்ளியது. அதில் அவர் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். உடனே காரில் இருந்து இறங்கிய கும்பல் அரிவாளால் அவரை சராமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடினர்.
காரணம் என்ன?
இந்த சம்பவம் குறித்து செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். அதில் சரவணக்குமார் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து கடந்த 7 ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஆண் குழந்தை உள்ளது.
இதற்கிடையில், குடும்பத் தகராறில் அவரது மனைவி பிரிந்து குழந்தையுடன் சென்றுவிட்டார். பின்னர் அவர் பரத் என்பவரை மறு திருமணம் செய்து கொண்டார். இதனை தொடர்ந்து சரவணக்குமார், தனது குழந்தையை கேட்டு, மனைவிக்கு, 2-வது கணவருக்கும் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இதுதொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மதுரை வந்த அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே சரவணக்குமாருக்கு கொலையில், அவரது மனைவியின் 2-வது கணவர் பரத் மற்றும் அவரது மைத்துனர் வல்லரசு ஆகியோருக்கு தொடர்பு இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அதன் அடிப்படையில் அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, தருமபுரி மாவட்டம் புலிகரை பகுதியை சேர்ந்த விவசாயி கிருஷ்ணன் (55)-கந்தம்மாள் தம்பதிக்கு பிரேம்குமார் (30), ரஞ்சித்குமார் (28) என்ற 2 மகன்கள் உள்ளனர். தனது மகன்கள் 2 பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிருஷ்ணன் சூது, மது பழக்கத்தால், மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் மனைவி தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் புலிகரை அருகே உள்ள தோட்டத்தில் கிருஷ்ணன் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த மதிகோன்பாளையம் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று கிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது கொலை சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதனை தொடர்ந்து கிருஷ்ணனின் பிரேம்குமார், ரஞ்சித்குமார் ஆகிய இருவரையும் மதிகோன்பாளையம் காவல் துறையினர் கைது செய்தனர்.





















