Crime : வேலைக்கு அமர்த்தப்பட்ட 14 வயது சிறுமி... சித்ரவதை செய்த தம்பதியினர்... ஜார்க்கண்டில் கொடூரம்
சரியாக வேலை செய்யாத ஆத்திரத்தில் 14 வயது சிறுமியை சித்ரவதை செய்த தம்பதியினரை போலீசார் தேடி வருகின்றனர்.
Crime : சரியாக வேலை செய்யாத ஆத்திரத்தில் 14 வயது சிறுமியை சித்ரவதை செய்த தம்பதியினரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் குர்கான் பகுதியைச் சேர்ந்த தம்பதினர் 14 வயது சிறுமியை 5 மாதங்களுக்கு முன் வேலைக்கு அமர்த்தினர். இந்த தம்பதிக்கு மூன்று வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்த குழந்தையை பார்த்துக் கொள்வதற்காக 14 சிறுமியை வேலைக்கு அமர்த்தினர்.
இந்நிலையில், அந்த சிறுமி சரியாக வேலை செய்யாததால், சிறுமியை சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. உணவு கொடுக்காமல் கடுமையாக அடித்து, சூடு வைத்ததாக தெரிகிறது. மேலும் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, இந்த சம்பவம் குறித்து ராஜ்சி உதவி மையம், காவல்நிலையத்தில் புகார் அளித்தது. புகாரின்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கூறுகையில், " குர்கான் பகுதியைச் சேர்ந்தவர்கள் இந்த தம்பதியினர். இவர்கள் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு மூன்று வயதில் ஒரு மகன் உள்ளார். இவர்கள் வேலைக்கு செல்வதால் குழந்தையை பார்த்துக் கொள்ள 14 வயது சிறுமியை வேலைக்கு அமர்த்தினர். அந்த சிறுமி முறையாக வேலை செய்யாததால் அவரை சித்ரவதை செய்துள்ளனர்.
அதன்படி, தினமும் ஈவு இரக்கமின்றி அடித்தனர். இரவு முழுவதும் சிறுமியை தூங்க விடாமல் செய்ததுடன், உணவும் அளிக்கப்படவில்லை. அதே சமயம் சிறுமியின் கை, கால், வாய் என உடல் முழுவதும் காயங்கள் இருந்தன. பலத்த காயமடைந்த அந்த சிறுமிக்கு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அந்த சிறுமி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக" போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள தம்பதியினரை போலீசார் தேடி வருகின்றனர். வேலைக்கு அமர்த்தப்பட்ட 14 வயது சிறுமி சித்ரவதை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிகரிக்கும் குற்றங்கள்
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கடந்த 2022-ஆம் ஆண்டு தேசிய மகளிர் ஆணையத்துக்கு சுமார் 31 ஆயிரம் புகார்கள் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து ஒப்பிடுகையில் இதுவே அதிமாகும். கடந்த 2014ல் 30,906 புகார்கள் மகளிர் ஆணையத்தில் பதிவாகி உள்ளது. நாட்டிலேயே உத்தர பிரதேசத்தில் 16,876 புகார்கள் கிடைக்கப் பெற்றன. இரண்டாவது இடத்தில் டெல்லி உள்ளது. டெல்லியில் 3,004 புகார்கள் கிடைக்க பெற்றன. மூன்றாவது இடமாக மகாராஷ்ராவில் 1,381 புகார்கள் பதிவாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க