Crime : மனைவிகளை மாற்றிக்கொள்ளும் Wife Swapping.. உடன்படாத பெண்ணுக்கு நடந்த கொடூர சித்ரவதை..
Crime: ராஜஸ்தானில் மனைவியை மாற்றிக் கொள்ள சம்மதம் தெரிவிக்காததால் அந்த பெண்ணை கணவர் தாக்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
Crime: ராஜஸ்தானில் மனைவியை மாற்றிக் கொள்ள சம்மதம் தெரிவிக்காததால் அந்த பெண்ணை கணவர் தாக்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
ராஜஸ்தான்: மனைவியை மாற்றிக் கொள்ள சம்மதம் தெரிவிக்காததால் அவரது கணவர் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பிகானேரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் மேலாளராக அமர் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் புகார் ஒன்று அளித்தார்.
அந்த புகாரில் கூறப்பட்டிருப்பதாவது, "சில நாட்களாவே தனது கணவர் ஹோட்டலில் உள்ள ஒரு அறையில் பூட்டிவிட்டார். அதன் பின் தனது செல்போனையும் எடுத்துச் சென்றார். இரண்டு நாட்களுக்கு பின்பு குடிபோதையில் வந்து என்னிடம் தகராறில் ஈடுபட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.
பின்பு கணவர் உன்னுடன் வாழ விருப்பமில்லை எனவும் அதனால் வேறு ஒருவருடன் இருக்க போவதாக தெரிவித்தாக கூறப்படுகிறது. இதற்கு மறுப்பு தெரிவித்த தனது மனைவியை கடுமையாக திட்டி தாக்கிவிட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு மறுப்பு தெரிவித்த அந்த பெண்ணுக்கு அவரது கணவருடன் இருக்க வரதட்சணையாக ரூபாய் 50 லட்சம் தர வேண்டும் என மாமியார் மற்றும் அவர்களது உறவினர் ஒருவர் கேட்டுக்கொண்டுள்ளனர். இதற்கு அந்த மறுப்பு தெரிவித்து புகார் ஒன்று அளித்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக, கணவர், அவரது மாமியார் மற்றும் அவரது உறவினர் ஒருவர் மீது வரதட்சணை தடைச் சட்டம் பிரிவு 377, 498a, 323, 506, 34, 3/4 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.
கணவர் தாக்கியதால் பலத்த காயமடைந்த அந்த பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்பு அவரது உறவினர் ஒருவரால் தாய் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார். பின்பு அந்த பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
பெண்களுக்கெதிரான குற்றங்கள் நின்றபாடில்லை. நெல்லை மாவட்டத்தில் மருமகள் கொடுமை காரணமாக அந்தோணி பிச்சை தனது மனைவியை கொன்று விட்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக கூறப்படுகிறது. பின்பு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அந்தோணி பிச்சை அனுமதிக்கப்பட்டார். மருமகள் கொடுமைப்படுத்தியதாக அவர் இந்த விபரீத முடிவை எடுத்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதுமை காலத்தில் வயதான கணவரே மனைவியைக் கொன்று விட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் உவரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து வள்ளியூர் டிஎஸ்பி யோகேஷ் குமார் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
Also read Crime: மிஸ்ட் கால் மூலம் வளர்ந்த காதல்.. மனைவி எடுத்த முடிவு.. கொலை செய்த காதலன்!