மேலும் அறிய

Diwali Fire : பறந்து போயி விழுந்த பட்டாசு தீப்பொறி..! எரிந்து சாம்பலாகிய கோச்சிங் சென்டர், வீடுகள்..! புதுவையில் அசம்பாவிதம்..

புதுச்சேரி: வில்லியனுாரில் பட்டாசு தீப்பொறியால் கூரை கொட்டகையில் இயங்கி வந்த கோச்சிங் சென்டர் முற்றிலும் எரிந்து சாம்பலானது.

புதுச்சேரி : வில்லியனுாரில் பட்டாசு தீப்பொறியால், மாடியில் கூரை கொட்டகையில் இயங்கி வந்த கோச்சிங் சென்டர் முற்றிலும் எரிந்து சாம்பலானது. வில்லியனுார் நவ சன்னதி வீதி - மேற்கு மாடவீதி சந்திப்பில், வீட்டின் இரண்டாம் தளத்தின் மாடியில் கூரை கொட்டகையில் தனியார் கோச்சிங் சென்டர் இயங்கி வருகிறது.

தீபாவளியை முன்னிட்டு நேற்று இரவு 7.10 மணியளவில் அப்பகுதியில் வெடித்த பட்டாசு தீப்பொறி விழுந்ததில், கோச்சிங் சென்டர் கொட்டகை தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்த வில்லியனுார் தீயணைப்பு நிலைய அதிகாரி கிருஷ்ணமூர்த்தி, செல்வம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் கோச்சிங் சென்டர் முழுவதும் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்தில் கோச்சிங் சென்டரில் இருந்த நாற்காலி, மேசை, பீரோ, புத்தகம் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமாயின. இதன் மதிப்பு ரூ. 2 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இதேபோல் தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம் பெருமாள் கார்டனில் நேற்று தீபாவளி பண்டிகையையொட்டி சிலர் சாலையில் வெடி வெடித்தனர்.அப்போது அருகில் இருந்த தண்டபாணி, 47, என்பவர் கூரை வீட்டில் தீ பொறி விழுந்தது. அதில் கூரை தீ பிடித்து எரியத் துவங்கியது. உடன் அருகில் இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால், அதற்குள் தீ அருகில் உள்ள சிவநாதன்,42  என்பவரின் வீட்டிற்கும் பரவியது. தகவலறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இரு வீடுகளும் முற்றிலுமாக எரிந்ததில், வீடுகளில் இருந்த டி.வி. கம்ப்யூட்டர், பைக் உள்ளிட்ட ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து தவளக் குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறையில் நடுங்க வைக்கும் கொலைச் சம்பவம் - அதிர்ச்சியில் உறைந்த கிராமம்! 
மயிலாடுதுறையில் நடுங்க வைக்கும் கொலைச் சம்பவம் - அதிர்ச்சியில் உறைந்த கிராமம்! 
முந்திரி தோட்டத்தில் மரப்பெட்டிக்குள் காத்திருத்த அதிர்ச்சி: அரியலூர் போலீசார் அதிரடியில் இருவர் கைது
முந்திரி தோட்டத்தில் மரப்பெட்டிக்குள் காத்திருத்த அதிர்ச்சி: அரியலூர் போலீசார் அதிரடியில் இருவர் கைது
நகை கொள்ளை ; திருமணம் மீறிய உறவு !! கள்ளக் காதலனுடன் சேர்ந்து மனைவியே அரங்கேற்றிய சம்பவம்
நகை கொள்ளை ; திருமணம் மீறிய உறவு !! கள்ளக் காதலனுடன் சேர்ந்து மனைவியே அரங்கேற்றிய சம்பவம்
"திருமணம் மீறிய உறவு " தட்டிக் கேட்டால் கொலை மிரட்டல் !! குழந்தைகளுக்கு சூடு - நடந்தது என்ன ?

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
TVK Vs DMK: டம்மி அரசு! உளறிக் கொட்டும் உளறல்நிதி! உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி!
TVK Vs DMK: டம்மி அரசு! உளறிக் கொட்டும் உளறல்நிதி! உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி!
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Cauvery Issue: ”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
TVK:
TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Reliance: ”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
Embed widget