Crime : சென்னை ரயில் நிலையத்தில் பரபரப்பு...ரயில் முன் பாய்ந்து பெண் வழக்கறிஞர் தற்கொலை..என்ன நடந்தது?
சென்னை பார்க் ரயில் நிலையத்தில் பெண் வழக்கறிஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பார்க் ரயில் நிலையம் எப்போதும் பயணிகள் கூட்டத்தால் பரபரப்பாக காணப்படும். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வரும் பயணிகள் பெரும்பாலும் தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு மார்க்கமாக செல்ல பார்க் ரயில் நிலையத்தைத்தான் பயன்படுத்துவர்கள். இதனால், எப்போதும், நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளை பார்க் ரயில் நிலையத்தில் காணமுடிவும்.
இந்நிலையில், நேற்று வழக்கம் போல் பார்க் ரயில் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. பயணிகளின் கூட்டமும் அலைமோதியது. மதியம் நேரத்தில் கும்மிடிப்பூண்டி நோக்கி மின்சார ரயில் ஒன்று வந்தது. ரயில் பூங்கா நிலையத்திற்குள் நுழைந்ததும், பயணிகள் அனைவரும் ரயிலில் ஏற அவர்கள் வைத்திருந்த உடமைகளுடன் தயாராக இருந்தனர். அப்போது, யாரும் எதிர்பார்க்காதபோது இளம்பெண் ஒருவர் வேகமாக வந்து ரயில் முன்பு பாய்ந்தார். அந்த இளம்பெணின் உடல் ரயில் மற்றும் தண்டவாளத்தில் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்பு, விபத்து குறித்து அறிந்த எழும்பூர் ரயில்வே போலீசார், சம்பவ இடத்திற்கு வந்த இளம்பெண் உடலை மீட்டனர். பின்பு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்பு இளம்பெண் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்தனர். அதில்,கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியை சேர்ந்த ஹேமாவதி (25) என்றும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
மேலும், ஹேமாவதி, சென்னை பழைய வண்ணாரப்பேட்டை தனது தோழிகளுடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்து, தினமும் மின்சார ரயில் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வந்து சென்றது தெரியவந்தது. அதன்படி, நேற்று வழக்கம் போல் ஹேமாவதி சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வந்த பணியை முடித்துவிட்டு மீண்டும் தனது வீட்டிற்கு செல்ல பார்க் ரயில் நிலையத்திற்கு வந்தது விசாரணையில் தெரியவந்தது. போலீசார் ஹேமாவதியின் செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஹேமாவதியுடன் தங்கியுள்ள தோழிகளிடமும், போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளம்பெண்ணின் தற்கொலையால் தாம்பரம் கடற்கரை மார்க்கத்தில் அரைமணி நேரத்துக்கு மேல் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)





















