Crime: அடக்கொடுமையே! மனைவியின் விரலை கடித்து தின்ற கணவன்; கோபத்தால் வெறிச்செயல்...பெங்களூருவில் ஷாக்!
பெங்களூருவில் குடும்பத் தகராறில் பெண்ணின் கைவிரலை கணவன் கடித்து தின்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Crime: பெங்களூருவில் குடும்பத் தகராறில் பெண்ணின் கைவிரலை கணவன் கடித்து தின்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிந்து வாழ்ந்த பெண்:
பெங்களூரு குண்டே பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (45). இவரது மனைவி புஷ்பா (40). இந்த தம்பதிக்கு கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் 2-வது மகன் பிறந்த சில ஆண்டிலேயே கணவன்-மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் மனம் உடைந்த புஷ்பா,விஜயகுமாரை விட்டு பிரிந்து, 2 மகன்களுடன் தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளார்.
கைவிரலை கடித்து தின்றார்:
பெங்களூர் கோனனகுண்டே போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் அவர் தனியாக வீடு எடுத்து தங்கினார். இந்த நிலையில் கடந்த 28ஆம் தேதி விஜயகுமார், புஷ்பாவின் வீட்டுக்கு சென்று தகராறு செய்ததாக தெரிகிறது. அந்த சமயத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.
அப்போது, திடீரென்று ஆத்திரமடைந்த விஜயகுமார், மனைவியின் இடது கைவிரலை வாயால் கடித்துள்ளார். பின்னர், அவரது விரலை வாயில் போட்டு மென்று தின்றுவிட்டதாக தெரிகிறது.
மருத்துவமனையில் சிகிச்சை:
இதனால் புஷ்பா வலியால் அலறி துடித்துள்ளார். உடனே அக்கம்பக்கத்தினர் அங்கு வந்ததும், விஜயகுமார் அங்கிருந்து ஓடிவிட்டார். இதையடுத்து புஷ்பாவை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த நிலையில், புஷ்பாவுக்கு நடந்த சம்பவம் பற்றி கோனனகுண்டே போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், ”எனது வீட்டுக்கு வந்த விஜயகுமார், என்னிடம் தகராறு செய்து, எனது இடது கை விரலை கடித்து தின்று விட்டார். அத்துடன் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டுகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
போலீஸ் விசாரணை
அதன்பேரில் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தியதாக விஜயகுமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து கைதான விஜயகுமாரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத் தகராறில் மனைவியின் கை விரலை கணவர் கடித்து தின்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க
CM Stalin: மகளிர் உரிமைத் தொகை திட்டம்.. தீவிரமடையும் முதற்கட்ட பணிகள்.. முதலமைச்சர் இன்று ஆலோசனை