மேலும் அறிய

Crime: கணவரை உதறிதள்ளிவிட்டு காதலருடன் தற்கொலை செய்துகொண்ட பெண்! - லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் ஷாக்!

லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த காதல் ஜோடி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime: லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த காதல் ஜோடி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

என்ன நடந்தது?

மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் 20 வயதான சௌமினி. இவர் பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.  இவர் சில மாதங்களுக்கு முன்பு 29 வயதான அபில் ஆபிரகாம் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்திருக்கிறார். இவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர்கள் இருவரும் பெங்களூருவில் தங்கி வந்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு இருவரும் காதலித்து வந்த நிலையில், தனியாக வீடு எடுத்து லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளனர். 

இந்நிலையில், சம்பவத்தன்று காலை இருவரும் வீட்டிற்குள் தீக்குளித்து உள்ளனர். இவர்கள் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் வந்து தீயை அணைக்க முயன்றனர். பின்னர், பெண் சௌமினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின்னர், படுகாயம் அடைந்த அபிலை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனையில் செய்ததில் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். 

என்ன காரணம்? 

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், உயிரிழந்தவர்களின் செல்போன்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கிடையில்,  பெண் சௌமினி கடந்த வாரம் தனது சொந்த ஊரான மேற்கு வங்கத்துக்கு  சென்றிருக்கிறார். பெண் சௌமினிக்கு ஏற்கனவே திருமணம் நடந்துள்ளது. இதனால், தன்னுடைய திருமணம் மீறிய உறவு பற்றி தனது கணவரிடம் சொல்லிருக்கிறார். பின்னர்,  உங்களுடன் வாழ விருப்பமில்லை என்று  தனது கணவரிடம் கூறிவிட்டு பெங்களூருவுக்கு சென்றிருக்கிறார். சௌமினியின் கணவர் தொடர்ந்து அவர் அழைப்பு விடுத்திருந்தாக கூறப்படும் நிலையில், சௌமினி மற்றும் அபில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

மேலும் படிக்க

Karnataka Accident : கர்நாடகாவில் அதிரவைக்கும் சோக சம்பவம்.. கால்வாய்க்குள் கார் கவிழ்ந்து 5 பேர் உயிரிழப்பு..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: அனுமதி கொடுத்த காவல்துறை... பரந்தூர் பறக்கும் விஜய்.. பின்னணி என்ன?
TVK Vijay: அனுமதி கொடுத்த காவல்துறை... பரந்தூர் பறக்கும் விஜய்.. பின்னணி என்ன?
SVAMITVA Scheme; சொத்த காப்பாத்த இப்படி ஒரு வழியா.? ஸ்வமித்வா சொத்து அட்டைகள் வழங்கிய மோடி
சொத்த காப்பாத்த இப்படி ஒரு வழியா.? ஸ்வமித்வா சொத்து அட்டைகள் வழங்கிய மோடி
Union Budget 2025-26: மாறப்போகும் நிதிநிலை..! குறையுமா வரி? உயருமா வருமானம்? - பிப்.1ம் தேதி மத்திய அரசு பட்ஜெட்
Union Budget 2025-26: மாறப்போகும் நிதிநிலை..! குறையுமா வரி? உயருமா வருமானம்? - பிப்.1ம் தேதி மத்திய அரசு பட்ஜெட்
Anbumani: உயிரோடு எரித்த கொடூரம்.. கொதித்து எழுந்த அன்புமணி..‌ சரமாரி கேள்வி..
Anbumani: உயிரோடு எரித்த கொடூரம்.. கொதித்து எழுந்த அன்புமணி..‌ சரமாரி கேள்வி..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay to meet Parandur protesters : விஜய் வைத்த REQUEST! OK சொன்ன காவல்துறை! பரந்தூர் விசிட் ப்ளான்TN BJP president: தலைவர் ரேஸில் 3 பேர்! BJP தலைமை போடும் கணக்கு! நெருக்கும் சீனியர்கள்Rahul Tiky : ”அம்மாவ சிரிக்க வைக்கணும்” INSTA பிரபலம் மரணம்! கண்கலங்கும் ரசிகர்கள்கையை விரித்த கூட்டணியினர்! கழற்றி விடப்பட்ட காங்கிரஸ்! என்ன செய்யப் போகிறார் ராகுல்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: அனுமதி கொடுத்த காவல்துறை... பரந்தூர் பறக்கும் விஜய்.. பின்னணி என்ன?
TVK Vijay: அனுமதி கொடுத்த காவல்துறை... பரந்தூர் பறக்கும் விஜய்.. பின்னணி என்ன?
SVAMITVA Scheme; சொத்த காப்பாத்த இப்படி ஒரு வழியா.? ஸ்வமித்வா சொத்து அட்டைகள் வழங்கிய மோடி
சொத்த காப்பாத்த இப்படி ஒரு வழியா.? ஸ்வமித்வா சொத்து அட்டைகள் வழங்கிய மோடி
Union Budget 2025-26: மாறப்போகும் நிதிநிலை..! குறையுமா வரி? உயருமா வருமானம்? - பிப்.1ம் தேதி மத்திய அரசு பட்ஜெட்
Union Budget 2025-26: மாறப்போகும் நிதிநிலை..! குறையுமா வரி? உயருமா வருமானம்? - பிப்.1ம் தேதி மத்திய அரசு பட்ஜெட்
Anbumani: உயிரோடு எரித்த கொடூரம்.. கொதித்து எழுந்த அன்புமணி..‌ சரமாரி கேள்வி..
Anbumani: உயிரோடு எரித்த கொடூரம்.. கொதித்து எழுந்த அன்புமணி..‌ சரமாரி கேள்வி..
TVK Vijay: கோட்டைவிட்ட விஜய் - புலம்பும் தவெக நிர்வாகிகள் - ஈரோடு கிழக்கில் சீமான் அறுவடை பலிக்குமா?
TVK Vijay: கோட்டைவிட்ட விஜய் - புலம்பும் தவெக நிர்வாகிகள் - ஈரோடு கிழக்கில் சீமான் அறுவடை பலிக்குமா?
சென்னை ரிட்டர்ன் வர்றீங்களா? எக்கச்சக்க மாற்றங்கள்! வாகன ஓட்டிகளே உஷார்..!
சென்னை ரிட்டர்ன் வர்றீங்களா? எக்கச்சக்க மாற்றங்கள்! வாகன ஓட்டிகளே உஷார்..!
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி; முதல் பரிசு ரூ.30 ஆயிரம்- கலந்துகொள்வது எப்படி?
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி; முதல் பரிசு ரூ.30 ஆயிரம்- கலந்துகொள்வது எப்படி?
Israel Hamas War: அடடா..! காஸா போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்..! என்று முதல் அமல் தெரியுமா?
Israel Hamas War: அடடா..! காஸா போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்..! என்று முதல் அமல் தெரியுமா?
Embed widget