Crime: பாலியல் வன்கொடுமை; ரத்தப்போக்குடன் அரை நிர்வாண கோலத்தில் உதவி கேட்ட சிறுமி! செத்துப்போன மனித நேயம்!
மத்திய பிரதேசத்தில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, சாலையில் அரை நிர்வாணத்துடன் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Crime: மத்திய பிரதேசத்தில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, சாலையில் அரை நிர்வாணத்துடன் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடரும் கொடூரங்கள்:
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் சம்பங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நடக்கும் பாலியல் வன்முறை குற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனையும் விதிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கூட, ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக வடமாநிலங்களில் நடக்கும் வன்முறை சம்பவங்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அந்த வகையில், தற்போது மத்திய பிரதேசத்தில் நடந்த சம்பவம் நாம் எப்படிப்பட்ட சமுதாயத்தில் இருக்கிறோம் என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி உதவி கேட்கும்போது யாரும் உதவி செய்யாமல் பார்த்துக் கொண்டிருப்பது தான் வேதனையின் உச்சம்.
அரை நிர்வாணத்துடன் உதவி கோரிய சிறுமி:
மத்திய பிரதேச மாநிலம் பட்நகர் என்ற பகுதியில் 12 வயது சிறுமி அடையாளம் தெரியாத நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து அரை நிர்வாணத்துடன் நடுரோட்டில் தூக்கி வீசப்பட்டுள்ளார். மயக்க நிலையில் இருந்த அந்த சிறுமி சிறிது நேரத்திற்கு கண் விழித்துள்ளார். அப்போது, அரை நிர்வாணத்துடன் இருந்துள்ளார். மேலும், ரத்தப்போக்குடன் வீடு வீடாகச் சென்று உதவி கேட்டிருக்கிறார். ஆனால், சிறுமிக்கு உதவி செய்ய சிலர் மறுத்துள்ளனர். மேலும், ஒரு நபரை உதவிக்கு அந்த சிறுமி அணுகியபோது, அவர் விரட்டி இருக்கிறார். தெருவில் அரை நிர்வாணத்துடன் சில நிமிடங்களில் சுற்றித் திரிந்திருக்கிறார். இறுதியில் அங்குள்ள ஒரு ஆசிரமத்திற்கு சென்றுள்ளார்.
பாலியல் வன்கொடுமை:
அங்குள்ள ஒரு பாதிரிரியர் சிறுமி ரத்துப்போக்குடன் வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர், சிறுமியை துண்டால் மறைத்து அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியானது. சிறுமிக்கு காயங்கள் அதிகளவில் ஏற்பட்டதால் இந்தூருக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது சிறுமியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதற்கிடையில், சிறுமி அரை நிர்வாணத்துடன், ரத்தக் போக்குடன் சாலையில் உதவி கோரும் சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது.
மேலும் படிக்க
Crime: ஓடும் காரில் இப்படியா? சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை...கத்திமுனையில் மிரட்டிய கொடூரம்!