மேலும் அறிய

குழந்தைக்கு பாலூட்டுவதைப் பார்த்ததாக ஒருவர் அடித்து கொலை - கோவையில் அதிர்ச்சி

குழந்தைக்கு பால் கொடுப்பதை பார்த்தாக கூறி 58 வயதான நபரை அடித்து கொலை செய்த இந்து மக்கள் பிரமுகர்கள் இருவர் உட்பட 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்

கோவையில் குழந்தைக்கு பால் கொடுப்பதை பார்த்தாக கூறி 58 வயதான நபரை அடித்து கொலை செய்த இந்து மக்கள் பிரமுகர்கள் இருவர் உட்பட 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கோவை சாய்பாபா காலனி பெரிய சுப்பன்ன கவுண்டர்  வீதியை சேர்ந்தவர் முஸ்தாக் அஹமத். 58 வயதான இவர், மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் முஸ்தாக் அகமதிடம் சிலர் தகராறு செய்வதாக, கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதன் பேரில் சாய்பாபா காலனி காவல் நிலைய காவலர்கள் அப்பகுதிக்கு சென்று பார்த்த போது, அப்பகுதியை சேர்ந்த ராகுல் (24) மற்றும் அவரது அண்ணன் மணிகண்ட மூர்த்தி ஆகியோர் முஸ்தாக் அகமது உடன் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கிய விபரம் தெரியவந்தது.

காவல் துறையினர் விசாரணை நடத்திய போது, முஸ்தாக் அகமது ராகுலின் மனைவி அவரது கைக்குழந்தைக்கு தாய்ப்பாலூட்டுவதை பார்த்ததாக எழுந்த சந்தேகத்தின் பேரில் கடந்த 8 ம் தேதியன்று இரவு ராகுல் அவரது  வீட்டிற்கு சென்று தகராறு செய்து அவரை அடித்ததாகவும், அதே பிரச்சனைக்காக ராகுல் இந்து மக்கள் கட்சியில் உள்ள அவரது அண்ணன் மணிகண்ட மூர்த்தி (27) மற்றும் அவரது நண்பரான மனோஜ் (26) ஆகியோருக்கு போன் மூலம் தகவல் கொடுத்து வரவழைத்து தகராறில் ஈடுபட்டு அடித்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் ராகுல் தரப்பினரை கடுமையாக எச்சரித்து விட்டு, மறுநாள் காலை விசாரணைக்கு இருதரப்பினரும் சாய்பாபா காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகுமாறும், அதுவரையில் யாரும் எவ்வித பிரச்சனையிலும் ஈடுபடக்கூடாது என்றும் எச்சரித்து சென்றுள்ளனர்.

இந்நிலையில் சாய்பாபா காலனி பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் தலையில் காயத்துடன் முஸ்தாக் அகமது பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில் சாய்பாபா காலனி காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது காவல் துறையினர் சென்ற பிறகு, ராகுல், மணிகண்ட மூர்த்தி மற்றும்  மனோஜ் ஆகியோர் மீண்டும் முஸ்தாக் அகமதுடன் தகராறில் ஈடுபட்டு அவரை கடுமையாக தாக்கியுள்ளார்கள் என்பதும், அவர்களால் தாக்கப்பட்ட முஸ்தாக் அகமது அவர் வீட்டிற்கு செல்லும் வழியில் அவரது வீட்டின் முன்பாக உள்ள சாக்கடை கால்வாயில் விழுந்து உயிரிழந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

மேலும் படிக்க : கோவையில் தமிழ் எழுத்துக்களால் வடிவமைக்கப்பட்ட பிரமாண்ட திருவள்ளுவர் சிலை; சிறப்பம்சங்கள் என்னென்ன?

 

தலைப்பு செய்திகள்

காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Embed widget