Chennai : பெண்கள் பள்ளிக்கு பின்னால் சடலம்! வயிறு கிழிக்கப்பட்டு சிறுவன் கொடூர கொலை!
அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. அப்பள்ளியின் பின்புறம்தான் புழல் ஏரிக்கரை உள்ளது. அங்குள்ள முட்புதரில்தான் சிறுவன் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
சென்னை புழலில் வயிறு கிழிக்கப்பட்ட இறந்து கிடந்த சிறுவன் விவகாரத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை செங்குன்றம் பகுதியில் சிறுவன் ஒருவன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏரிக்கரையில் கிடந்த அவரது சடலத்தை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க : அமைச்சர் அன்பில் மகேஷ் பேரை சொல்லி 8.5 லட்சம் மோசடி - முருகன் சிக்கியது எப்படி? தட்டித்தூக்கிய காவல்துறை..
பெண்கள் பள்ளிக்கு பின்புறம்..
சென்னை செங்குன்றத்தில் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. அப்பள்ளியின் பின்புறம்தான் புழல் ஏரிக்கரை உள்ளது. அங்குள்ள முட்புதரில்தான் சிறுவன் சடலம் கண்டெடுக்கப்பட்டது. கொலை செய்யப்பட்ட சிறுவனின் சடலம் முட்புதரில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலை அடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற செங்குன்றம் போலீசார் சடலத்தை பார்வையிட்டனர். வயிற்றுப்பகுதியில் கத்தியால் கிழித்தும், உடலில் பல்வேறு இடங்களில் கத்தியால் குத்தியும் சிறுவன் கொல்லப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
யார் இந்த சிறுவன்?
இதனைத் தொடர்ந்து உயிரிழந்த சிறுவன் தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கினர். அதன்படி கொல்லப்பட்டது, செங்குன்றம் நேதாஜி நகரைச் சேர்ந்த கோபி என்பவரின் மகன் நாகராஜ் (15) என்பது தெரியவந்தது.
கஞ்சா போட்டியா?
இந்த கொலை கஞ்சா போட்டியால் நடந்திருக்கலாம் எனத் தெரிகிறது. அந்தப்பகுதியில் கஞ்சா விற்பனை தீவிரமாக நடைபெறுவதாகவும் அதில் ஏற்பட்ட தொழில்போட்டியால் இந்தக்கொலை நடைபெற்று இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவன் வயிறு கிழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் செங்குன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இதேபோன்று சென்னையில் கல்லூரி மாணவியைக் கடத்தி வீட்டில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த வேன் ட்ரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த முனுசாமி (26) என்பவர் சிறுமி படித்த அதே கல்லூரியில் வேன் ட்ரைவராக பணியாற்றி வந்துள்ளார். அப்போது சிறுமியோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகளைக் கூறி திருச்சிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இதனை அடுத்து முனுசாமி மீது போக்சோ வழக்கு தொடர்ந்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்