ரயிலில் செல்லும் பெண்களை குறி வைத்து ஆபாச சில்மிஷம் - சென்னையில் ஆசாமி கைது
ரயிலில் செல்லும் பெண்களை குறி வைத்து ஆசாமி செய்யும் சில்மிஷ செய்கையால் புகார் அளித்த பெண்கள்.

பெண்களிடம் ஆபாச செய்கை
சென்னை வியாசர்பாடி பகுதியில் ரயிலில் செல்லும் பெண்களைப் பார்த்து ஒருவர் ஆபாச செய்கை செய்வதாகவும் நிர்வாணமான நிலையில் ஒருவரை அடிக்கடி அப்பகுதியில் மக்கள் பார்த்ததாகவும் அவ்வப் போது ரயிலில் செல்லும் பெண்கள் தெரிவித்து வந்தனர். இது குறித்து வியாசர்பாடி மற்றும் ஓட்டேரி போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், ஓட்டேரி போலீசார் வியாசர்பாடி காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த முனுசாமி (32) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது இவர் வியாசர்பாடி ரயில் நிலையத்திற்கும் , பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்திற்கும் இடையே ரயில் மெதுவாக செல்லும் போது ரயில் பெட்டியில் பெண்கள் பெட்டியில் உள்ள பெண்களை பார்த்து ஆபாசமான செய்கை செய்வதும் அவர்களைப் பார்த்து சுய இன்பம் செய்வதையும் வாடிக்கையாக கொண்டிருந்தது தெரிய வந்தது.
பல பேர் ரயிலில் செல்வதால் இது குறித்து புகார் அளிக்கவில்லை ரயில் வேகமாக செல்லுவது மற்றும் ரயிலில் இருந்து கீழே இறங்கி வர முடியாது என்பதால் தொடர்ந்து இவர் இது போன்று செய்து வந்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.
மேலும் முனுசாமிக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒன்றரை வயதில் மகனும் உள்ளார். இவர் கோயம்பேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஹவுஸ்கீப்பிங் வேலை செய்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து முனுசாமி மீது வழக்கு பதிவு செய்த ஓட்டேரி போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
வியாசர்பாடியில் பிரபல ரவுடி வெட்டி கொலை
சென்னை வியாசர்பாடி உதயசூரியன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ் (எ) தொண்டை ராஜ் (42) இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். மூன்று கொலை வழக்கு உட்பட இவர் மீது பதினைந்துக்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. இவர் வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் மெயின் ரோடு வழியாக தனது மனைவியுடன் செல்லும் போது இவரை வழிமடக்கிய இரண்டு பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டியது.

( கொலை செய்யப்பட்ட தொண்டை ராஜ் )
இதில் முகத்தில் பலத்த காயமடைந்த தொண்டை ராஜ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இது குறித்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த வியாசர்பாடி போலீசார் தொண்டைராஜின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் முன்வரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.
தந்தையின் கொலைக்கு பழி தீர்க்க நண்பர்களுடன் சேர்ந்து வெறிச் செயல்
வியாசர்பாடி பகுதியில் இவருக்கு அச்சுறுத்தல் அதிகமாக இருந்ததால் கடந்த சில மாதங்களாக மணலி சின்னசேக்காடு பகுதியில் தனது மனைவியுடன் தொண்டை ராஜ் தங்கி வந்துள்ளார். கடைசியாக எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் இவர் மீது கஞ்சா வழக்கு போடப்பட்டு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்தார். ஈஸ்டர் பண்டிகை முன்னிட்டு , மணலியில் இருந்து வியாசர்பாடிக்கு தனது உறவினர் வீட்டிற்கு ஆட்டோவில் தனது மனைவியுடன் வந்துள்ளார்.
வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் மெயின் ரோடு நான்காவது தெரு பகுதியில் ஆட்டோவில் இருந்து இறங்கி தொண்டை ராஜ் செல்லும் போது அங்கு நின்றிருந்த நான்கு பேர் கொண்ட கும்பல் தொண்டைராஜை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த தொண்டை ராஜ் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார்.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்து விட்டு தொண்டை ராஜ் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த வியாசர்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
2020 ம் ஆண்டு - பழிக்கு பழி
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கடந்த 2020 ஆம் ஆண்டு வியாசர்பாடி பகுதியில் ராஜீ என்பவரை தொண்டை ராஜ் வெட்டி படுகொலை செய்துள்ளார். அதற்கு பழி வாங்குவதற்காக அவரது மகன் சூர்யா தனது நண்பர்களுடன் சேர்ந்து இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனை யடுத்து துணைக் கமிஷனரின் தனிப்படை போலீசார் மற்றும் வியாசர்பாடி போலீசார் இணைந்து வியாசர்பாடி கூட்செட் பகுதியில் வைத்து நான்கு பேரை மடக்கிப் பிடித்தனர்.
அப்போது அவர்கள் போலீசாரிடம் இருந்து தப்பித்து ஓடும் போது கீழே விழுந்ததில் சூர்யாவிற்கு கை மற்றும் கால் உடைந்தது. மேலும் அவரது நண்பர்களான முருகன். அஜித் என்பவர்களுக்கு கையும் ஸ்ரீராம் என்பவருக்கு காலும் உடைந்தது. இதனை எடுத்து நான்கு பேரையும் அழைத்துச் சென்று மாவு கட்டு போட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டதில் வியாசர்பாடி பகுதியில் சேர்ந்த சூர்யா (27) ஸ்ரீராம் (25) அஜித் (எ) சப்பு மூக்கு (25) முருகன் 28 ஆகிய நான்கு பேரும் சேர்ந்து சூர்யா தனது தந்தையின் மரணத்திற்கு பழி வாங்கும் விதமாக தனது நண்பர்களுடன் சேர்ந்து இந்த செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதனை அடுத்து நான்கு பேர் மீதம் வழக்கு பதிவு செய்த வியாசர்பாடி போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த கொலை வழக்கில் மூன்று பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





















