நடுரோட்டில் ஐடி பெண்ணுக்கு கொலை மிரட்டல்.. ஊர்க்காவல் படை வீரர் கைது
அத்துடன் வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும் வழியில் ஐடி ஊழியரை சந்தித்து தன்னை திருமணம் செய்யாவிட்டால் கொலை செய்து விடுவேன் என ஊர்க்காவல் படை வீரர் மிரட்டியுள்ளார்.
திருமணம் செய்யும்படி கட்டாயப்படுத்தி ஐடி பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த ஊர்க்காவல் படை வீரரை காவல் துறையினர் கைது செய்தனர்.
திருமணம் செய்துகொள்ளக்கூறி மிரட்டல்
கோயம்பேடு அடுத்த நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (26). கோயம்பேடு காவல் நிலையத்தில் ஊர்க்காவல் படை வீரராக இவர் பணியாற்று கிறார். இவர் தாம்பரத்தில் உள்ள ஐடி கம்பெனியில் பணியாற்றும் அமைந்தகரை பகுதியைச் சேர்ந்த 23 வயது பெண்ணை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அந்தப் பெண்ணுக்கு வேறு ஒருவருடன் நிச்சயிக்கப்பட்டதை அடுத்து சிவகுமாருடன் அப்பெண் பேசாமல் தவிர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிவகுமார், அந்த பெண்ணிடம் செல்போனில் பேசி மிரட்டல் விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: தாயின் உடலை புதைத்துவிட்டு அருகே அமர்ந்திருந்த மகன்...சீர்காழியில் சோகம்..!
அத்துடன் வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும் வழியில் சந்தித்து தன்னை திருமணம் செய்யாவிட்டால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். மேலும் தன் மீது புகார் கொடுத்தாலும் யாரும் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.
பெண்ணின் பெற்றோர் புகார்
இந்த நிலையில் நேற்று முன்தினம் (ஜூன்.24) இரவு வேலை முடித்து திரும்பிய அப்பெண்ணை கையைப் பிடித்து இழுத்து, தன்னை திருமணம் செய்துகொள்ளாவிட்டால் இருவரும் ஒன்றாக எடுத்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிடுவதாகக் கூறி மிரட்டியுள்ளார்.
இதனையடுத்து பயந்துபோன அந்தப் பெண், நடந்த சம்பவத்தை தன் பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதையடுத்து பெண்ணின் பெற்றோர், அமைந்தகரை காவல் நிலையத்தில் புகா ரளித்தனர். இந்தப் புகாரின் பேரி காவல் துறையினர் சிவகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க:
புதுச்சேரி: டைமிங் பிரச்னையால் அரசு பேருந்து ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம் - பயணிகள் அவதி
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்