மேலும் அறிய

Melmaruvathur Marriage Hall: மேல்மருவத்தூரில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் துரிதம் ..! திருமண மண்டபம் இடிக்கப்பட்டு வருகிறது..!

மேல்மருவத்தூர் கோவிலுக்கு சொந்தமான திருமண மண்டபம் இடிக்கப்படும் புகைப்படங்கள் வேகமாக பரவி வருகிறது

மேல்மருவத்தூர்
 
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அடுத்த சோத்துபாக்கம் பகுதியை சேர்ந்த ராஜா என்பவர், சோத்துபாக்கம் மேல்மருவத்தூர், கீழ் மருவத்தூர், கேசவராயப்பேட்டை, பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை தூர்வார கோரியும், நீர்நிலை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2018 ஆம் ஆண்டு பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார். அதன் அடிப்படையில் கடந்த 2018-ஆம் ஆண்டு இந்த நான்கு கிராமங்களில் உள்ள ஏரிகள் குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைப் பகுதிகளில் வருவாய்த்துறையினர், அளவடி செய்தனர். அளவில் செய்து நீர் நிலையில் உள்ள ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
 

Melmaruvathur Marriage Hall: மேல்மருவத்தூரில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் துரிதம் ..! திருமண மண்டபம் இடிக்கப்பட்டு வருகிறது..!
 
குழப்பமான ரிப்போர்ட்
 
இதுகுறித்து அப்பொழுது காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது மாவட்ட ஆட்சியர் பொன்னையா சம்பந்தப்பட்ட பகுதியில் ஆக்கிரமிப்புகள் உள்ளது என நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்தார். அவ்வாறு குறிப்பிடப்பட்ட ஆய்வில், இடத்தை ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நபர்களின் குறித்த விவரங்கள் சரியாக தெரிவிக்கப்படவில்லை. இதனை தொடர்ந்து ராஜா என்பவர் மீண்டும் வழக்குத் தொடுத்து முழு விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
 
தொடர்ந்து நடந்த வழக்கு விசாரணை
 
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, நெடுங்காலமாக மக்களுக்கு நீராதாரமாக இருந்து வந்த இந்த ஏரி தற்போது கல்யாண மண்டபம், உணவு விடுதிகள், பேருந்து நிலையம், கார் பார்க்கிங் என முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு விட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கடந்த 2015 ஆம் ஆண்டு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தும் இது வரை எந்த நடவடிக்கைளும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
 
ஒரு மாதத்தில் அகற்ற வேண்டும்
 
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் கடந்த மார்ச் மாதம் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரம் ஆஜராகி, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். அதனை பதிவு செய்த நீதிபதிகள் ஆக்கிரமிப்பை ஒரு மாதத்தில் அகற்றி, அதுகுறித்த அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.

Melmaruvathur Marriage Hall: மேல்மருவத்தூரில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் துரிதம் ..! திருமண மண்டபம் இடிக்கப்பட்டு வருகிறது..!
முன்னதாக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், நாங்கள் வருகின்ற மார்ச் மாதம் 31-ஆம் தேதிக்குள் ஆக்கிரமிப்பை அகற்றி விடுவோம் என தெரிவித்திருந்தனர். ஏன் இதுவரை இன்னும் ஆக்கிரமிப்பை அகற்ற வில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதி, இனிமேல் காத்திருக்க முடியாது சரியாக ஒரே மாதத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டார். ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டு விட்டதா என மாவட்ட நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் இது குறித்து கால அவகாசம் வழங்க வேண்டும் என மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் சார்பில் தொடரப்பட்ட வழக்கு நிராகரிக்கப்பட்டது. 
 

Melmaruvathur Marriage Hall: மேல்மருவத்தூரில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் துரிதம் ..! திருமண மண்டபம் இடிக்கப்பட்டு வருகிறது..!
 
அதேபோல மேல்மருவத்தூர் கோவிலுக்கு சொந்தமான திருமண மண்டபம் நீர்நிலை ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ளது என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், ABP NADU இணையதளத்தில் செய்தி வெளியாகி இருந்தது. பின்னாளில், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் மேல்மருத்தூர் பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வந்த நிலையில், நாளை மறுதினம் ( 08/06/22) அன்று மேலும் இருக்கும் ஆக்கிரமிப்புகளை நோட்டீஸ் வழங்கி உள்ளது. செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம். புல எண் 13/2 அடிகளார் திருமண மண்டபத்தின் ஒரு பகுதியையும். புல எண் 59 இல்,  உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளும் அகற்றப்பட்டுதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து சென்ற பொழுது நேர அவகாசம் கோரப்பட்டது, இதனை ஏற்றுக் கொண்டு வருவாய்த்துறை என நேர அவகாசம் அளித்தனர். இதனையடுத்து தற்போது ஆக்கிரமிப்பு பகுதிகளை தாங்களாகவே அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஆதிபராசக்தி கோவிலுக்கு சொந்தமான, திருமண மண்டபத்தை இடிக்கப்படும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

 
 
 

தலைப்பு செய்திகள்

திருமணம் மீறிய உறவு !! தட்டி கேட்டவர்கள் மீது கஞ்சா கும்பல் தாக்குதல்
திருமணம் மீறிய உறவு !! தட்டி கேட்டவர்கள் மீது கஞ்சா கும்பல் தாக்குதல்
15 வயது பள்ளி மாணவி கர்ப்பம் !! காதலிப்பதாக ஏமாற்றி சிறுமியுடன் உல்லாசம் !! போக்சோவில் கைது
15 வயது பள்ளி மாணவி கர்ப்பம் !! காதலிப்பதாக ஏமாற்றி சிறுமியுடன் உல்லாசம் !! போக்சோவில் கைது
பெற்றோர் பணம் தராததால் விபரீதம் ? கிணற்றில் கையில் கல்லுடன் மிதந்த இளைஞரின் சடலம்
பெற்றோர் பணம் தராததால் விபரீதம் ? கிணற்றில் கையில் கல்லுடன் மிதந்த இளைஞரின் சடலம்
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூலை 15-ம் தேதி ஏகப்பட்ட இடங்கள்ல மின் தடை இருக்கு.. உங்க ஏரியா இருக்கா பாருங்க
சென்னை மக்களே.! ஜூலை 15-ம் தேதி ஏகப்பட்ட இடங்கள்ல மின் தடை இருக்கு.. உங்க ஏரியா இருக்கா பாருங்க

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
Gold rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
TTV Dhinakaran :
"தொட்டால் விடமாட்டேன்" சொன்ன விஜய்.! சொந்தக் கட்சி ஊழல்வாதிய என்ன செய்யப்போறீங்க.? டிடிவி கேள்வி
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
Premalatha vs Vijay : தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
தொடரும் லாக்அப் மரணம்.! மாற்றம் என கூறினீங்க எந்தவித மாற்றமும் ஏற்படவில்லையே- சீறிய பிரேமலதா
Embed widget