மேலும் அறிய
மின்சாரம் தாக்கி கண்முன்னே துடிதுடித்த மாடு...! காப்பாற்ற சென்ற உரிமையளாரும் உயிரிழந்த சோகம்...!
செங்கல்பட்டு மாவட்டத்தில் மின்சாரம் தாக்கிய மாட்டை காப்பாற்ற சென்ற உரிமையாளரும் மின்சாரம் தாக்கியதால் மாட்டுடன் சேர்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த மணிகண்டன்
செங்கல்பட்டு மாவட்டம் ரெட்டிபாளையம் கிராம விஏஓ உதவியாளராக தேவனூர் கிராமம் பஜனைக்கோவில் தெருவைச் சேர்ந்த லோகநாதனின் மகன் மணிகண்டன் (35)உள்ளார். இந்நிலையில் இன்று காலையில் தனது வீட்டிலிருந்து, தனது பசு மாட்டை மேய்ச்சலுக்கு கட்ட வேண்டி அவரது கிராமத்தில் புதிதாக போடப்பட்டுள்ள வீட்டுமனை பிரிவின் அருகே உள்ள கழனியிலுள்ள அலங்கார கொடி கம்பம் ஒன்றில் தனது மாட்டை கட்டியுள்ளார்.

அப்போது பசு மாடு கட்டப்பட்ட அலங்கார கொடி கம்பமானது மேலே சென்ற உயர் மின்சார கம்பியில் எதிர்பாராத விதமாக உரசி சாய்ந்த மறு கனமே உயர் மின்சார கம்பியிலிருந்து அலங்கார கொடி கம்பத்திற்கு மின்சாரம் பாய்தததில் அக்கம்பத்தில் கட்டப்பட்ட மணிகண்டனின் பசு மாடு மின்சாரம் தாக்கி பரிதாபமாக துடிதுடித்து இறந்துள்ளது. இதைக்கண்ட மணிகண்டன் உடனடியாக ஓடோடி போய் மின்சார தாக்குதலில் இருந்த தனது பசுவை காப்பாற்ற முயன்றபோது அவர் மீதும் மின்சாரம் தாக்கியது. அப்போது, மின் சாரம் தாக்கி அங்கேயே மணிகண்டன் சுருண்டு விழுந்துள்ளார்.
இதன் பிறகு அவ்வழியே சென்றவர்கள் மணிகண்டனை மீட்டு செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்ற நிலையில் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மணிகண்டன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். பின்னர் இது குறித்து தகவலறிந்த பாலூர் போலீசார் மணிகண்டனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அலங்கார கொடி கம்பம் உயர் மின்சார வயரில் சாய்ந்து மின்சாரம் தாக்கியதில் பசு மாடு உயிரிழந்ததும், அதனைக் காப்பாற்ற சென்ற உரிமையாளரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அக்கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் படிக்கவும்




















