மேலும் அறிய
திருக்கழுக்குன்றம்: கஞ்சா புழக்கம்; கேள்வி எழுப்பிய பாஜக பிரமுகர்..! தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்..! நடந்தது என்ன?
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் பாஜக பிரமுகர் தனசேகரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

தனசேகரன்
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் பகுதியை சேர்ந்த துரை தனசேகரன் என்பவர் அந்த பகுதியில் பாஜகவில் பிரமுகராக இருந்து வருகிறார். இவர் பாரதிய ஜனதா கட்சியில் முன்னாள் மாநில துணை செயலாளர் இருந்து வந்தார். இவர் அந்தப் பகுதியில் மிக பாஜகவின் மிக முக்கிய செயல்பாட்டாளர்களின் ஒருவராக கருதப்படுகிறார்.

அதேபோல் இவர் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கிலும் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய சில பதிவுகளையும் பதிவு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று, செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் பகுதியில் கஞ்சா புழக்கம் அதிகமாக இருப்பதாக , தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோவை தனசேகர் பதிவிட்டுள்ளார். இதன் எதிரொலியாக திருக்கழுகுன்றம் காவல் நிலையத்திற்கு அழைத்து தனசேகரிடம் விசாரணை நடைபெற்றதாக தெரிகிறது.

இந்நிலையில் வெளியே சென்றிருந்த தனசேகர் மீண்டும் வீடு திரும்பும் போது, 6 பேர் கொண்ட மர்ம கும்பல் தனசேகரை சரமாரியாக தாக்கியுள்ளனர். தனசேகர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், கஞ்சா விற்பனை அதிகமாக இருப்பதாக வீடியோ பதிவு செய்வதற்காக, மர்ம நபர்கள் தனசேகரன் தனது வீட்டிற்கு முன்பு , இனோவா கார் கண்ணாடியை உடைத்து சேதம் செய்து தனசேகரையும் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் மற்றும் தனசேகரின் உறவினர்கள், இரத்த வெள்ளத்தில் இருந்த தனசேகரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர் . தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிசிச்சை பெற்று வருகின்றார். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஏராளமான பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் கூடியுள்ளதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பாஜக நிர்வாகி தாக்கியதாக நான்கு பேரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் செங்கல்பட்டு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















