மேலும் அறிய
Advertisement
எருமையை பலி கொடுத்து கிச்சா சுதீப் பிறந்த நாள் கொண்டாட்டம்: 25 பேர் மீது வழக்குப் பதிவு!
நடிகர் சுதீப் பிறந்த நாளன்று எருமை மாடு பலி கொடுத்த விவகாரம் தொடர்பாக அவர்து ரசிகர்கள் மத்தியில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கிச்சா சுதீப். இவர் தமிழ் திரையுலகில், 'நான் ஈ' படத்தில் நடித்ததன் மூலம் வில்லனாக நடித்து பிரபலமானார். சுதீப்.
இவர் தான் நடித்த முதல் படத்திலேயே எளிதாக, தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். கடைசியாக அவர் விஜய்யுடன் இணைந்து புலி படத்தில் வில்லனாக நடித்து இருந்தார்.
இவர் நடிப்பது மட்டுமின்றி தனது அறக்கட்டளை மூலமாகப் பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்.
இவர் கன்னட மொழியில் தயாரிப்பாளர், எழுத்தாளர், பாடகர் என பன்முகத் திறமைகளைக் கொண்டவராக வலம் வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் சுதீப் தனது 50 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவர் திரைப்படம் வெளியானாலே அதனை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் திருவிழா போல் கொண்டாடுவார்கள். அப்படி இருக்கையில் அவர் பிறந்தநாள் என்றால் சும்மாவா விடுவங்க. அதை திருவிழா போல் கொண்டாடுவார்கள்.
அந்த வகையில் சுதீப் பிறந்தநாளன்று, கர்நாடகா மாநிலத்தில் உள்ள அவரது ரசிகர்கள் மிக உற்சாகமாக அதனைக் கொண்டாடினார். அதன்படி, பெல்லாரி மாவட்டத்தில் சுதீப்பின் ரசிகர்கள் சிலர் எருமை மாட்டை அங்கு அழைத்துச் சென்று, அதை பலியாக்கி, ரத்தத்தை கட் அவுட் மீது தெளித்து, வழிபாடு நடத்தினர்.
சுதீப் ரசிகர்களின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் எருமை மாடு ஒன்றை நிறுத்தி சுதீப், தலைவா வாழ்க என குரல் எழுப்பிக் கொண்டே, மாட்டின் தலையை அரிவாள் கொண்டு வெட்டினர்.
இந்த விவகாரம் கன்னட திரைத்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பெல்லாரி நகர் காவல் நிலையத்தில், சுதீப் ரசிகர்கள் மீது சுமார் 25 பேர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் போலீசார் இது குறித்து தற்போது, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
கிரிக்கெட்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion