மேலும் அறிய

யாரைக்கேட்டு மரம் வெட்டுனா? இருக்கிற பணத்தைக் கொடு! ரூ.600 லஞ்சம் வாங்கி சிக்கிய துணை ஆய்வாளர்

மரங்களை அனுமதி இன்றி வெட்டியதாக கூறி மரவியாபாரியிடம் 600 ரூபாய் லஞ்சம் பறித்த துணை ஆய்வாளரை திருவண்ணாமலை ஆயுதப் படைக்கு மாற்றி மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுக்கா மற்றும் தண்டராம்பட்டு தாலுக்கா சுற்றுவட்டார பகுதிகளில் கொள்ளையடுக்கும் நபர்களிடமும், உரிமம் பெறாமல் ஆற்று மணல், ஓடை மணல் மற்றும் முரம்பு மண் எடுக்கும் நபர்களிடமும், பட்டா நிலத்தில் இருக்கும் மரங்களை வெட்டிச் செல்லும் விவசாயிகளிடமும் காவல் துறையினர் லஞ்சம் கேட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்து வருகிறது. இந்நிலையில் தான் சாத்தனூர் அணை காவல் நிலையத்தின் சிறப்பு துணை ஆய்வாளராக பணியாற்றும் சுரேஷ் வயது (52) இவருக்கு சொந்தமான விவசாய நிலம் அதே பகுதியில் உள்ளது. இவரது நிலத்தின் பக்கத்து நிலத்துக்காரர், அவரது நிலத்தில் உள்ள வேப்பம், தைலம் மரங்களை கடந்த 9ம் தேதி மரம் வெட்டும் ஆட்களை வைத்து வெட்டியுள்ளார்.

யாரைக்கேட்டு மரம் வெட்டுனா? இருக்கிற பணத்தைக் கொடு! ரூ.600 லஞ்சம் வாங்கி சிக்கிய துணை ஆய்வாளர்

இந்த மரங்களை லோடு வேனி ஏற்றி விற்பனைக்காக வியாபாரி எடுத்து சென்றார். அப்போது, அங்கு வந்த சுரேஷ் லோடு வேனை தடுத்து நிறுத்தி ''மரங்களை அனுமதியின்றி வெட்டியுள்ளீர்கள். பணத்தை கொடுத்துவிட்டு மரத்தை எடுத்து செல்லுங்கள்' எனக்கூறி மிரட்டியதாக தெரிகிறது.இதனால், அதிர்ச்சியடைந்த மர வியாபாரி, ''என்னிடம் 600 ரூபாய் தான் உள்ளது'' எனக்கூறி அதை சுரேஷிடம் கொடுத்துள்ளார். சுரேஷ் பணத்தை வாங்கிக்கொண்டு மர வியாபாரி மற்றும் மரம் வெட்டும் கூலி ஆட்களை அங்கிருந்து அனுப்பியுள்ளார். இதற்கிடையில் சுரேஷ் பணம் கேட்டு மிரட்டி, பணம் வாங்கியதை அங்கிருந்த ஒரு நபர் தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோ நேற்று முதல் வைரலானது. இதையறிந்த திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் நேரடியாக சாத்தனூர் அணை காவல்நிலையத்திற்கு சென்று சிறப்பு துணை ஆய்வாளரிடம் இதுகுறித்து விசாரணை நடத்தியுள்ளார். மேலும் இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டிஎஸ்பியை விசாரணை நடத்தி இதுகுறித்து தகவல் அளிக்க அறிவுறுத்தி இருந்தார்.

யாரைக்கேட்டு மரம் வெட்டுனா? இருக்கிற பணத்தைக் கொடு! ரூ.600 லஞ்சம் வாங்கி சிக்கிய துணை ஆய்வாளர்

இதையடுத்து, விசாரணை நடத்திய டிஎஸ்பி இந்த சம்பவம் குறித்த தகவலை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கூறியுள்ளார். உடனடியாக சிறப்பு துணை ஆய்வாளர் சுரேஷை அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். 

தலைப்பு செய்திகள்

"LATE" ஆக வந்ததால் திட்டிய பெற்றோர்..! ஆத்திரத்தில் தாத்தாவை பேட்டால் அடித்துக் கொன்ற பேத்தி - நடந்தது என்ன?
கள்ளத் தொடர்பை காட்டி கொடுத்த 6 மாத கர்ப்பிணி !! இறுதியில் நடந்த சோகம்
கள்ளத் தொடர்பை காட்டி கொடுத்த 6 மாத கர்ப்பிணி !! இறுதியில் நடந்த சோகம்
" திருமணம் மீறிய உறவு " கொலை செய்யப்பட்ட 9 வயது சிறுவன் !! நடந்தது என்ன ?
Madurai: கல்குவாரியில் 4 வயது சிறுவன் உடல்.. இளைஞர் சிக்கியது எப்படி? வாக்குமூலத்தை கேட்டு அதிர்ந்த போலீஸ்!
Madurai: கல்குவாரியில் 4 வயது சிறுவன் உடல்.. இளைஞர் சிக்கியது எப்படி? வாக்குமூலத்தை கேட்டு அதிர்ந்த போலீஸ்!

வீடியோ

Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்
VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
TN Weather News: 32 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
32 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
TNEB: பராமரிப்பு நாளில் 8 மணி நேரம் மின் தடை அமல்.. பதறிப்போன மக்கள்.. உண்மை நிலவரம் என்ன?
TNEB: பராமரிப்பு நாளில் 8 மணி நேரம் மின் தடை அமல்.. பதறிப்போன மக்கள்.. உண்மை நிலவரம் என்ன?
Embed widget