காவேரிப்பட்டினம் : ’மாம்பழம் சாப்பிடுவதில் தகராறு’ : அரசு பள்ளியில் 10-ஆம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்திய மாணவர்
காவேரிப்பட்டினம் அருகே அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்திய மற்றொரு மாணவரை போலீசார் விசாரித்து வருகின்றனர்
கிருஷ்ணகிரி அடுத்த காவேரிப்பட்டினம் அருகே அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இடையே மாங்கொட்டையால் ஏற்பட்ட தகராறில் சகமாணவன் கத்தியால் குத்தி படுகாயம் கத்தியால் குத்திய மற்றொரு மாணவனை போலீசார் விசாரித்து வருகின்றனர்
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே பண்ணிஹாள்ளி புதூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் கடந்த 14-ஆம் தேதி 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயதுடைய மாணவர்கள் 2 பேருக்கு இடையே மாம்பழம் சாப்பிடுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஒரு மாணவன் சாப்பிட மாங்கொட்டையை எடுத்து திடீரென அங்கிருந்து மாணவர்களில் ஒருவர் மீது வீசியுள்ளார். இதனால் அப்பொழுது இரண்டு மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
Crime: இரண்டாவது காதலுக்கு இடையூறு: முதல் காதலனை கொலை செய்து சாலையில் வீசிய பெண்! சிக்கியது எப்படி?
இந்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளியில் சிறப்பு வகுப்பு நடைப்பெற்றது. அப்போது தகராறில் ஈடுபட்ட மாணவன் ஒருவன் பள்ளிக்கு வரவில்லை. இதனையடுத்து மற்றொரு மாணவன் தொலைபேசி மூலம் நீ இன்று பள்ளிக்கு வந்து இருந்தால் உன்னை தீர்த்து கட்டி இருப்பேன் என வாய்ஸ் மெசேஜ் மூலமாக பள்ளிக்கு வராத மாணவனுக்கு விடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று சம்பந்தப்பட்ட 2 மாணவர்களும் பள்ளிக்கு வந்துள்ளனர். அப்போது 2 நபர்களுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ஒரு மாணவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மற்றொரு மாணவனின் தோள்பட்டையின் கீழ் குத்தியுள்ளார். இதில் அந்த மாணவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மாணவனின் அலறல் சத்தம் கேட்டு ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ஆசிரியர்கள் ஓடிச்சென்று கத்திகுத்து வாங்கிய மாணவனை மீட்டு சிகிச்சைக்காக காவேரிப்பட்டணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, காவேரிப்பட்டணம் காவல்நிலைய ஆய்வாளர் முரளி ஆகியோருக்கு பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து தகவல் அளித்தனர். பின்னர் சம்பவம் நடந்த பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது குத்து பெற்ற மாணவனின் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு தகராறில் ஈடுபட்டனர். அப்போது தகராறில் ஈடுபட்டவர்களிடம் முதன்மை கல்வி அலுவலர் மற்றும் காவேரிப்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் பேச்சு வார்த்தை நடத்தி, வன்முறையில் ஈடுபட்ட மாணவனின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த பிறகு மாணவனின் உறவினர்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர்.
இதைத்தொடர்ந்து மாணவனை கத்தியால் குத்திய மற்றொரு மாணவன் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மாணவனை அழைத்துச்செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலத்தில் சிறார் மையத்தில் அம்மாணவன் விசாரிக்கப்பட்டு வருகிறார். அரசு பள்ளிக்கூடத்தில் மாணவனை, சக மாணவன் கத்தியால் குத்திய சம்பவம் அந்த பகுதியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது