Kasthuri Bail: நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன்: எதிர்ப்பு தெரிவிக்காத காவல்துறை.! ஆனால் நீதிமன்றம் வைத்த செக் .!
Actress Kasthuri Conditional Bail: தெலுங்கு மக்கள் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விவகாரத்தில், நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை அடிப்படையிலான ஜாமீன் வழங்கியுள்ளது எழும்பூர் நீதிமன்றம்.
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரிக்கு 29ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இன்று நிபந்தனை ஜாமீனை வழங்கியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு, சென்னையில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கஸ்தூரி, திராவிடம் பேசுபவர்களுக்கு, கடவுள் மறுப்புதான் முதல் கொள்கையாக உள்ளது எனக் கூறினார். ஒவ்வொரு சமுதாயமாக பிளவுபடுத்த முயற்சி நடைபெற்று வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
பிராமணர்கள் குறித்து பேசிய அவர், பல்வேறு விதமாக அவர்கள் விமர்சிப்பதாக கூறினார். இங்கு, தெலுங்கு பேசுபவர்களாக உள்ளவர்கள், மன்னர்களின் அந்தப்புரத்து பெண்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் என கூறி சர்ச்சையை கிளப்பினார். கஸ்தூரியின் இந்த கருத்துக்கு பெரும் எதிர்ப்புகள் ஆரம்பித்தன.
இதையடுத்து, ஹைதராபாத்தில் சென்னை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் சிறப்பு குழந்தையை கருத்தில் கொண்டு ஜாமீன் கோரிய நிலையில், காவல்துறை எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், நிபந்தனை ஜாமீனை வழங்கியது நீதிமன்றம். நிபந்தனை தொடர்பான விவரங்கள் குறித்து நீதிமன்றம் தெரிவித்ததாவது, “ நடிகை கஸ்தூரி, தினமும் காலை 10:30 மணியளவில், எழும்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.